November 06, 2022

ஜபம்-பதிவு-886 மரணமற்ற அஸ்வத்தாமன்-18 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-886

மரணமற்ற

அஸ்வத்தாமன்-18

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

தெரிந்து கொள்ள

வேண்டும் என்று

முடிவெடுத்து

விட்ட பிறகு

உங்கள் பெயரை

மட்டும்

தெரிந்து கொண்டு

நான் என்ன

செய்யப் போகிறேன்

உங்களைப் பற்றி

முழுமையாக

சொல்லுங்கள்

 

துரோணர் :

முனிவர் பரத்வாஜர்

ஒரு மாலைப்

பொழுதில்

வழிபாடு செய்வதற்குத்

தயாராகிக் கொண்டிருந்தார்.

எப்போதும்

கங்கை நதியில்

குளிப்பதை

வழக்கமாக

கொண்டிருந்த அவர்

அன்று

கங்கை நதியில்

குளிக்கப் போகும்

போது மயக்கும்

அழகைக் கொண்ட

க்ருதாசியென்னும்

அப்ஸரஸ்

அவருக்கு முன்பே

அந்த கங்கை

நதியில்

குளித்துக்

கொண்டிருப்பதைக்

கண்டு மயங்கி

நின்றார்

 

முனிவர்

பரத்வாஜரைப்

பார்த்ததும்

அந்தப் பெண்

அங்கங்கள் தெரிய

ஒரே துணியை

உடல் முழுவதும்

போர்த்திக் கொண்டு

தண்ணீர்

சொட்ட சொட்ட

ஈர உடையுடன்

காமத்தைத் தூண்டும்

வகையில்

கங்கை ஆற்றிலிருந்து

வெளியே வந்தாள்.

 

இந்தக் காட்சியைக்

கண்ட

முனிவர் பரத்வாஜர்

அவளுடைய

பேரழகில் மயங்கி

காமத்தில்

விழுந்து விட்டார்

 

காமம் அவருக்குள்

தானாகவே

கொழுந்து விட்டு

எரிந்ததால்

அவருக்குத்

தானாகவே விந்து

வெளியேறியது.

 

அப்போது பரத்வாஜர்

அந்த விந்துவை

துரோணமென்னும்

பாத்திரத்தில்

ஏந்தினார்

அதனால் அந்த

ஞானமுள்ள

பரத்வாஜருக்கு

துரோணர்

குடத்தில்

பிறந்தார்

 

அந்தக் குடத்தில்

இருந்து பிறந்த

துரோணர்

நான் தான்

 

நானும்

அதிசயமாகப்

பிறந்தவன் தான்

 

நம் இருவரையும்

ஒப்பிட்டுப்

பார்க்கும் போது

இருவருமே

அதிசயமாகப்

பிறந்தவர்கள்

தான்

 

இந்த உலகத்தின்

அதிசயப் பிறவிகள்

நாம் தான்

 

இந்த உலகத்தின்

அதிசயப் பிறவிகளாக

இருக்கும் நாம்

ஒன்றாகச் சேர்ந்து

இந்த உலகம்

இதுவரை கண்டிராத

இனி மேலும்

யாராலும்

காண முடியாத

யாராலும்

வெல்ல முடியாத

அழிக்கவே முடியாத

மரணம் என்ற

ஒன்றே இல்லாத

வாரிசை

உருவாக்கலாம்

அல்லவா

 

அந்த வாரிசு

இந்த உலகத்தின்

அதிசயமாக

இருக்கும்

அல்லவா

 

இரண்டு அதிசயங்கள்

ஒன்றாக இணைந்தால்

புதியதாக

ஒரு அதிசயம்

உண்டாகும் என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ளும்

அல்லவா

 

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment