ஜபம்-பதிவு-880
மரணமற்ற
அஸ்வத்தாமன்-12
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
கிருபி :
உங்களைப் பார்த்தால்
காதலால்
பாதிக்கப்பட்டவர்
போல் தெரியவில்லை
காமத்தால்
பாதிக்கப்பட்டவர்
போல் தெரிகிறது
துரோணர் :
காமத்தால் பாதிக்கப்பட்டு
இருந்தால் உங்களுடைய
உடலைக் கவர்ந்திருப்பேன்
நான் காதலால்
பாதிக்கப்பட்டு இருப்பதால்
உங்கள் உள்ளத்தைக்
கவர்வதற்காகக்
காத்துக் கொண்டு
இருக்கிறேன்
உங்கள் உடலைத்
தொடுவது என்னுடைய
எண்ணமல்ல
உங்கள் உள்ளத்தைத்
தொடுவது தான்
என் எண்ணம்
கிருபி :
காதல் செய்யும்
போது
தொடக்கூடாது
என்கிறீர்களா
தொட்டுக் கொண்டு
காதல் செய்பவர்களை
என்ன சொல்கிறீர்கள்
காதலர்கள்
இல்லை
என்கிறீர்களா
துரோணர் :
காதலில்
நூறு சதவீதம்
காதல் மட்டுமே
இருந்தால் அது
காதலாக இருக்காது
தொண்ணூற்று ஒன்பது
சதவீதம் காதலும்
ஒரு சதவீதம்
காமமும் இருந்தால்
மட்டுமே
அது காதலாக
இருக்க முடியும்
அதைப்போல
காமத்தில்
நூறு சதவீதம்
காமம் மட்டுமே
இருந்தால் அது
காமமாக இருக்காது
தொண்ணூற்று ஒன்பது
சதவீதம் காமமும்
ஒரு சதவீதம்
காதலும்
இருந்தால் மட்டுமே
அது காமமாக
இருக்க முடியும்
காதல்
என்றால் என்ன
காமம்
என்றால் என்ன
என்தைத்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்றால்
காமத்துக்கும்
காதலுக்கும்
இடையே உள்ள
ஒற்றுமை என்ன
வேற்றுமை என்ன
தொடர்பு என்ன
புனிதம் என்ன
உண்மை என்ன
பொய் என்ன
என்பதை
வேறுபடுத்தி
பார்க்கத்
தெரிந்திருக்க
வேண்டும்
காதல்
எவ்வளவு
புனிதமானதோ
அவ்வளவு
புனிதமானது
காமமும்
காதலும் காமமும்
வாழ்க்கையில்
இருபாகங்களாக
இருக்க வேண்டும்
இரண்டும்
சமநிலையில்
இருக்க வேண்டும்
சமநிலை
தவறக் கூடாது
சமநிலை
தவறும் போது
தான் பிரச்சினை
என்பதே
ஆரம்பிக்கிறது
எவன் ஒருவன்
தன் வாழ்க்கையில்
காதலையும்
காமத்தையும்
சமபாகங்களாக
வைத்துக்
கொள்ளவில்லையோ
சரிசமமாகப்
பயன்படுத்தவில்லையோ
அவனுடைய
வாழ்க்கை
அல்லல்
நிறைந்ததாகத்
தான் இருக்கும்
எவன் ஒருவன்
தன் வாழ்க்கையில்
காதலையும்
காமத்தையும்
சமபாகங்களாக
வைத்துக்
கொள்கிறானோ
சரிசமமாகப்
பயன்படுத்துகிறானோ
அவனுடைய
வாழ்க்கை
சிறப்பாக
இருக்கும்
சண்டை
இல்லாமல்
இருக்கும்
பிரிவுகள்
ஏற்படாமல்
இருக்கும்
நிம்மதியான
வாழ்க்கையாக
இருக்கும்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----24-10-2022
----திங்கட் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment