November 06, 2022

ஜபம்-பதிவு-884 மரணமற்ற அஸ்வத்தாமன்-16 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-884

மரணமற்ற

அஸ்வத்தாமன்-16

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

நான் யார்

என்று தெரியுமா

 

துரோணர் :

நீங்கள் யார்

எங்கே

இருக்கிறீர்கள்

என்ன செய்து

கொண்டிருக்கிறீர்கள்

என்பதை எல்லாம்

தெரிந்துகொண்டு

பேசுவதற்குப்

பெயர்

காதல் இல்லை

 

எந்த ஒன்றைப்

பற்றியும் தெரிந்து

கொள்ளாமல்

யாரை

விரும்புகிறோமோ

அவர் மேல்

கொள்வது

தான் காதல்

 

கிருபி :

என்னிடம் அப்படி

என்ன தான்

உங்களுக்கு

பிடித்திருக்கிறது

என்னை காதல்

செய்கிறேன்

என்கிறீர்கள்

 

துரோணர் :

நாம் ஒருவரை

காதலிக்கிறோம்

என்றால்

நமக்கு பிடித்த

ஏதோ ஒன்று

அவரிடம்

இருக்கிறது

என்று பொருள்

 

கிருபி :

அது என்னது


துரோணர் :

அது காதலிக்கும்

போது தான்

தெரியும்

நீங்களும்

என்னை

காதலித்துப்

பாருங்கள்

உங்களுக்கும்

தெரியும்

 

கிருபி :

நான் யார்

தெரியுமா

 

துரோணர் :

நீங்கள்

சொல்லவேயில்லையே

 

கிருபி :

கௌதமர் என்ற

முனிவரின் மகன்

சரத்வான்.

சரத்வான்

பிறக்கும்போதே வில்

அம்புகளுடன்

பிறந்தவர்.

இளமைக்காலத்தில்

வேதங்களைப்

படிப்பதில்

நாட்டமின்றி

அனைத்து

ஆயுதங்களையும்

கற்றுத் தேர்ந்தவர்.

வில்லைக்

கையாளுவதில்

அவருக்கு நிகர்

யாரும் இல்லை

அவரை எதிர்த்து

வில்லை யார்

பயன்படுத்தினாலும்

அவரால் சரத்வானை

வெல்ல முடியாமல்

இருந்தது

 

இதனால் அச்சமடைந்த

தேவராஜன் இந்திரன்

அவரது ஆற்றலைக்

கட்டுப்படுத்த தேவலோக

அழகி ஜாலவதியை

திருமணத்தை

மறுக்கும்

சரத்வானிடம்

அனுப்புகிறான்.

 

அவளது அழகிய

தோற்றத்தில் தனது

மனதை

பறிகொடுக்கிறார்

சரத்வான்

சரத்வானிடமிருந்து

விந்து நாணற்றண்டில்

விழுந்தது

நாணற்றண்டில்

விழுந்த விந்து

இரண்டு

பாகங்களாகப்

பிரிந்தது.

ஒன்று ஆணாகவும்

மற்றொன்று

பெண்ணாகவும்

இரட்டைப் பிறந்தது

 

வேட்டையாடி

விட்டு

அந்த வழியாக

வந்த சாந்தனு

அரசன்

அகுழந்தைகளின்

அழகில் மனதை

பறிகொடுத்தவனாய்

அவர்களை எடுத்துச்

சென்று பெயரிட்டு

வளர்க்கிறான்.

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment