ஜபம்-பதிவு-878
மரணமற்ற
அஸ்வத்தாமன்-10
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
(துரோணர் தவம்
செய்து விட்டு
கண் விழித்துப்
பார்த்த போது
அவர் எதிரில்
கண்டவுடன்
கவர்ந்திழுக்கும் அழகு
கொண்ட கிருபி
நின்று
கொண்டு இருந்தார்.
அவர் யார்
என்று
அறியாத துரோணர்
அவரிடம் பேசத்
தொடங்கினார்)
துரோணர் :
மாணிக்கத்தை உடலாக்கி
பவளத்தை முகமாக்கி
புஷ்பராகத்தை வாயாக்கி
முத்தை பற்களாக்கி
மரகதத்தை காதுகளாக்கி
வைரத்தை கண்களாக்கி
நீலக்கல்லை மூக்காக்கி
கோமேதகத்தை கைகளாக்கி
வைடூரியத்தை கால்களாக்கி
நவரத்தினங்களால்
செய்யப்பட்ட
சிலை போல்
இருக்கிறீர்களே
நீங்கள்
தேவலோகத்துப் பெண்ணா
கிருபி :
இல்லை நான்
பூலோகத்துப்
பெண்
ஏன் இவ்வாறு
கேட்கிறீர்கள்
துரோணர் :
தவம் செய்யும்
போது
ஊர்வசி ரம்பை
மேனகை
திலோத்தம்மை போன்ற
தேவலோகத்து பெண்கள்
தவத்தைக் கலைப்பதற்காக
வருவார்கள் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்
உங்களைப் பார்த்தவுடன்
என்னுடைய தவத்தைக்
கலைப்பதற்காக
அந்த நான்கு
தேவலோகத்துப்
பெண்களில்
ஒருவர் வந்து
விட்டாரோ என்ற
சந்தேகத்தில் கேட்டேன்
கிருபி :
முத்தியை வேண்டி
தவம் செய்பவர்களின்
தவத்தினைக்
கலைப்பதற்குத்
தான் அவர்கள்
வருவார்கள்
துரோணர் :
நீங்கள் சொல்வது
சரி தான்
நான் முக்தியை
வேண்டி தவம்
செய்ய வரவில்லை
அதனால்
அந்த நான்கு
தேவலோகத்துப்
பெண்களில் ஒருவராக
நீங்கள் இருக்க
முடியாது
நீங்கள் பூலோகத்துப்
பெண் தான்
ஆனால்
பூலோகத்தில் பிறந்த
தேவலோகத்துப் பெண்
கிருபி :
உங்களைப் பார்த்தால்
சன்னியாசியைப்
போல் தெரிகிறது
ஆனால்
உங்கள் பேச்சு
சன்னியாசியுடையதாக
இல்லையே
துரோணர் :
நான் சன்னியாசி
இல்லை
பிரம்மச்சாரி
பிரம்மச்சரியத்திலிருந்து
கிரகஸ்தனாக
ஆகப்போகிறவன்
பிரம்மச்சரியத்தை
முடிப்பதற்காக
தவம் செய்ய
வந்திருக்கிறேன்
கிருபி :
தவம் செய்பவர்கள்
நல்லவர்களாக இருப்பார்களே
உங்கள் பேச்சையும்
உருவத்தையும்
பார்த்தால் நல்லவர்
போல் தெரியவில்லையே
துரோணர் :
ஒருவருடைய பேச்சையும்
உருவத்தையும்
வைத்து ஒருவரை
நல்லவரா அல்லது
கெட்டவரா என்று
தீர்மானிக்க முடியாது
பொய் சூது
கொலை
கொள்ளை கற்புநெறி
பிறழ்தல்
ஆகிய பஞ்சமா
பாதகங்ளைச் செய்கிறவன்
பேராசை சினம்
கடும்பற்று முறையற்ற
பால்கவர்ச்சி உயர்வு
தாழ்வு மனப்பான்மை
வஞ்சம் ஆகிய
ஆறு குணங்களைக்
கொண்டு செய்கிறான்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----24-10-2022
----திங்கட் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment