ஜபம்-பதிவு-883
மரணமற்ற
அஸ்வத்தாமன்-15
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
சாமியார்கள்
மக்களுக்குப்
பயந்து
வாழ்கிறார்கள்
சமுதாயத்தின்
சட்ட
திட்டங்களுக்குப்
பயந்து
வாழ்கிறார்கள்
நான் மற்ற
சாமியார்களைப்
போல
மக்களுக்குப்
பயந்து
வாழ்பவனல்ல
மக்கள் என்ன
நினைத்து
விடுவார்களோ
என்று
அச்சத்தில்
வாழ்பவனும்
அல்ல
அதனால்
தான் நான்
காதலைப்
பற்றியும்
பேசினேன்
காமத்தைப்
பற்றியும்
பேசினேன்
சாமியாராக
இருப்பவன்
காதலைப் பற்றி
பேசுகிறான்
காமத்தைப் பற்றி
பேசுகிறான்
என்று நீங்கள்
என்னைத் தவறாக
நினைத்து
விடுவீர்களோ
இந்த உலகம்
என்னைத் தவறாக
நினைத்து விடுமோ
என்று நான்
நினைத்து இருந்தால்
நான் பேசியிருக்க
மாட்டேன்
நான் எப்படி
வாழ வேண்டும்
என்று நினைக்கிறேனோ
அப்படி வாழ்பவன்
சுதந்திரமாக வாழ்பவன்
மற்றவர்களுக்காக
என்னுடைய
சுதந்திரத்தை
ஒரு போதும்
விட்டுக்
கொடுத்ததில்லை
விட்டுக்
கொடுக்கவும்
மாட்டேன்
என்னுடைய
சுதந்திரத்தை
யாரும்
என்னிடமிருந்து
பறிக்க முடியாது
என்னுடைய
சுதந்திரத்திற்கு
யாரும்
தடை போட
முடியாது
அதனால் தான்
எனக்கு உங்கள்
மேல் ஏற்பட்ட
காதலை
நான் மறைக்க
விரும்பவில்லை
அதனால்
என்னுடைய காதலை
உங்களிடம்
எடுத்துச் சொன்னேன்
உள்ளே ஒன்றை
வைத்துக் கொண்டு
வெளியே
ஒன்று பேசுபவனல்ல
நான்
என்ன
நினைக்கிறேனோ
அதைப் பேசுபவன்
இந்த உலகம்
என்ன
நினைக்குமோ
என்று
பயந்து கொண்டு
பேசுபவனல்ல
கிருபி :
முன்பின் தெரியாத
ஒரு பெண்ணிடம்
இப்படியா பேசுவது
துரோணர் :
நீங்கள் வரும்
போது முன்
பக்கம் தெரிந்து
கொண்டேன்
நீங்கள் போகும்
போது பின்
பக்கம் தெரிந்து
கொள்கிறேன்
கிருபி :
நீங்கள் யாரிடம்
பேசுகிறீர்கள்
என்று
தெரியாமல்
பேசுகிறீர்கள்
துரோணர் :
உங்களைப் பற்றித்
தெரிந்து கொண்டு
பேசுவதற்கு
நான் என்ன
உங்களிடம்
வியாபாரமா
செய்கிறேன்
காதல்
அல்லவா
செய்கிறேன்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----24-10-2022
----திங்கட் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment