November 06, 2022

ஜபம்-பதிவு-889 மரணமற்ற அஸ்வத்தாமன்-21 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-889

மரணமற்ற

அஸ்வத்தாமன்-21

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கிருபி :

அப்படி எல்லாம்

ஒன்றும் இல்லை

 

துரோணர் :

பெண்கள் தங்கள்

உள்ளத்தில் உள்ளதை

அவ்வளவு எளிதில்

சொல்ல மாட்டார்கள்

 

எந்த ஒன்றையும்

அவ்வளவு எளிதில்

ஒத்துக் கொள்ள

மாட்டார்கள்

 

ஆண்களை தங்கள்

பின்னால் அலையவிட்டு

வேடிக்கை பார்ப்பது தான்

அவர்களுடைய பழக்கமே

 

கிருபி :

எனக்கு அந்த

பழக்கம்

எல்லாம் இல்லை

அதிகமாக கற்பனையை

வளர்த்துக் கொள்ளாதீர்கள்

 

(என்று சொல்லி விட்டு

கிருபி திரும்பி

நடந்து சென்று

கொண்டிருந்தார்

 

துரோணர் கிருபி

என்கிறார்

கிருபி திரும்பிப்

பார்க்கிறார்)

 

துரோணர் :

கிருபி அவர்களே

நீங்கள் வரும் போது

உங்கள் முன் பக்கம்

பார்த்தேன்

இப்போது நீங்கள்

செல்லும் போது

உங்கள்

பின் பக்கம்

பார்க்கிறேன்

 

இனி நீங்கள்

எனக்கு

முன் பின்

தெரியாதவர்

கிடையாது

 

எனக்கு

முன்பின்

தெரிந்தவர்

 

(என்று துரோணர்

சொன்னதும்

வெட்கத்தால் முகம்

சிவந்த கிருபி

அந்த இடத்தை

விட்டுச் சென்று

விட்டார்)

 

துரோணர் தன்னுடைய

ஆசிரமத்தின்

எல்லைக்குள்

வந்து தவம்

செய்து

கொண்டிருப்பதை

அக்னிவேஸ்யரின்

ஆசிரமவாசி மூலமாகக்

கேள்விபட்ட கிருபர்

துரோணரைச் சந்தித்து

அவர்

மனநிலை அறிந்து

கிருபியின்

சம்மதத்தைப் பெற்று

துரோணருக்கும்

கிருபிக்கும்

திருமணம்

செய்து வைத்தார்

 

கௌதம முனிவரின்

மகனான சரத்வான்

மற்றும்

ஜலாவதி என்ற

தேவலோக அழகிக்கும்

பிறந்த கிருபிக்கும்

 

பரத்வாஜர் மற்றும்

க்ருதாசியென்னும்

அப்ஸரஸ் பெண்ணுக்கும்

பிறந்த துரோணருக்கும்

திருமணம்

இனிதே நடந்தேறியது

 

அவர்களின்

இல்லற வாழ்க்கை

மகிழ்ச்சியுடன்

தொடங்கியது

 

மகாபாரதக் கதையில்

சிவபெருமான்

அவதாரம்

எடுத்திருக்கிறார்

என்பது எத்தனை

பேருக்குத் தெரியும்

 

துரோணருக்கும்

கிருபிக்கும்

மகனாகப் பிறந்து

சிவபெருமான்

அவதாரம் எடுத்தார்

 

மகாபாரதக்

கதையில் சிவபெருமான்

எடுத்த அவதாரம்

என்ன அவதாரம்

என்பதைத் தெரிந்து

கொள்வதற்கு

துரோணரையும்

கிருபியையும்

பின் தொடருங்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment