November 06, 2022

ஜபம்-பதிவு-895 மரணமற்ற அஸ்வத்தாமன்-27 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-895

மரணமற்ற

அஸ்வத்தாமன்-27

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

சிவன் :

இருவருமே

கிடையாது

 

கோபம் கொண்டவர்

எப்படி ஆபத்தானவரோ

அப்படியே தான்

அன்பு கொண்டவரும்

ஆபத்தானவர் தான்

 

துரோணர் :

அன்பே கடவுள்

அன்பே சிவம்

என்கிறார்களே

 

சிவன் :

அது தவறாக

சொல்லப்பட்ட

வார்த்தை

 

தவறானவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

தவறான புரிதல்

கொண்டவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

அனுபவம்

இல்லாதவர்களால்

சொல்லப்பட்ட

வார்த்தை

 

அன்பு கொண்டவர்கள்

தங்களுக்கு தீமை

செய்தவர்களின்

தீமையை மனதில்

கொண்டு பகையை

பகிரங்கமாக

வெளிப்படுத்தாமல்

வஞ்சத்தை மனதில்

வைத்து வளர்த்து

பழிவாங்குவதற்கான

நடவடிக்கைகளில்

யாருக்கும்

தெரியாமல்

ஈடுபடுவார்கள்

அதனை அவர்கள்

மறைவாகவே

செய்வார்கள்

யாருக்கும்

தெரியாமலேயே

செய்வார்கள்

அன்பு மட்டுமே

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

 

ஆனால்

கோபம்

கொண்டவர்கள்

அப்படியில்லை

தங்கள் கோபத்தை

பகையை

பழி வாங்குவதை

நேரடியாக

வெளிப்படுத்துவார்கள்

 

கோபத்தைக்

காட்டுபவர்களை விட

அன்பு காட்டுபவர்கள்

ஆபத்தானவர்கள்

 

கோபத்தைக்

காட்டுபவர்களை விட

அன்பு

காட்டுபவர்களிடம்

எச்சரிக்கையாக

இருக்க வேண்டும்

 

துரோணர் :

அன்பு

கொண்டவர்கள்

ஆபத்தானவர்களா

 

சிவன் :

அன்பு மட்டுமே

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

அன்பும்

கருணையும்

கொண்டவர்கள்

ஆபத்தானவர்கள்

கிடையாது

 

அன்பு ஒருவரிடம்

தனித்து இருந்தால்

ஆபத்தானது

அன்பும் கருணையும்

ஒருவரிடம் சேர்ந்து

இருந்தால்

ஆபத்து கிடையாது

 

ஒருவரிடம்

இருக்க

வேண்டியது

அன்பு மட்டும்

கிடையாது

 

அன்பும் கருணையும்

தான் ஒருவரிடம்

இருக்க வேண்டியது

 

கடவுளிடமும்

இருப்பதும்

அன்பும்

கருணையும்

தான்

 

அன்பு மட்டுமே

கடவுள் கிடையாது

அன்பும் கருணையும்

சேர்ந்ததே கடவுள்

 

அன்பே

சிவம்

கிடையாது

அன்பும்

கருணையும்

சேர்ந்ததே

சிவம்

 

அன்பும்

கருணையும்

யாரிடம்

இருக்கிறதோ

அவனும்

கடவுளும்

ஒன்றே

 

அன்பு மட்டுமே

கொண்டவன்

நம்பத் தகுந்தவன்

கிடையாது

அன்பும்

கருணையும்

கொண்டவன் தான்

நம்பத் தகுந்தவன்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment