March 03, 2013

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்- உதவி-பதிவு-61



     இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர் -உதவி-பதிவு-61                           


              “”பதிவு அறுபத்திஒன்றை விரித்துச் சொல்ல

                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இயேசு கிறிஸ்து :


அவர்  ஒரு கிராமத்தில் பிரவேசித்த போது,  குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர்  அவருக்கு எதிராக வந்து துாரத்திலே நின்று:”

-------லுாக்கா - 17 : 12

இயேசு ஐயரே , எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.”

-------லுாக்கா - 17 : 13


அவர்களை அவர்  பார்த்து : நீங்கள் போய் , ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார்.  அந்தப் படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.”

-------லுாக்கா - 17 : 14


அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு , திரும்பி வந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப் படுத்தி

-------லுாக்கா - 17 : 15


அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து , அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான் ; அவன் சமாரியனாயிருந்தான்.”

-------லுாக்கா - 17 : 16


அப்பொழுது இயேசு : சுத்தமானவர்கள் பத்துப் பேர்  அல்லவா , மற்ற ஒன்பதுபேர்  எங்கே?”

-------லுாக்கா - 17 : 17

தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு , இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

-------லுாக்கா - 17 : 18


அவனை நோக்கி : நீ எழுந்து போ , உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.”

-------லுாக்கா - 17 : 19


ஒருவர்  செய்த உதவியின் காரணமாக உயர்ந்தவர்கள் ;

வாழ்வில் உயர்நிலை அடைந்தவர்கள் ;

பதவி , புகழ்,  அதிகாரம் ஆகியவற்றில் உயர்நிலை அடைந்தவர்கள் ;

முன்னேற்றத்தினை சுவைத்தவர்கள் ;

களிப்பில் விளையாடியவர்கள் ;

தங்கள் உயர்வுக்கு காரணமானவரை நினைப்பது என்பதும் ,

அவர்  செய்த உதவியை மறவாமல் புகழ்வதும் ,

 உயர்ந்த விஷயம் .

இவ்வாறு புகழ்வதில் இரண்டு நிலைகள் இருக்கிறது :


ஒன்று             : தன்னுடைய உயர்வுக்கு காரணமாக இருந்தவர்

                                        தன்னை விட உயர்ந்த நிலையில் இருந்தால் புகழ்வது

மற்றொன்று : தன் உயர்வுக்கு காரணமாக இருந்தவர்  தன்னை விட

                                           தாழ்ந்த நிலையில் இருந்தால் புகழாமல் அவமதிப்பது


வாழ்க்கையை ஓட்டுவதற்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் காலத்தில் ,

ஏழ்மையில் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ,

பசியின் கோரத் தாண்டவத்தால் வாடிக் கொண்டிருக்கும் காலத்தில் ,

இயலாமை தன்னை ஏறி மிதித்து விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் ,

அறியாமையால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ,

சோகத்தால் துவண்டு போன காலத்தில் ,

கவலையால் கண்ணீர்  விட்டுக் கொண்டிருந்த காலத்தில் ,

துன்பத்தால் துவண்டு கிடந்த காலத்தில் ,

விரக்தியின் எல்லையில் ,

துயரத்தின் உச்சியில் ,

தோல்வியின் தழுவலில் ,

ஏமாற்றத்தின் வாடலில் ,

ஏளனத்தின் பேச்சுக்களில் ,

உதாசீனத்தின் பார்வையில் ,

வாழ்ந்து கொண்டிருக்கும் போது

காலத்தின் சூழ்நிலையினால் ,

சூழ்நிலையின் மாற்றத்தினால் ,

மாற்றத்தின் நிகழ்வுகளினால் ,

நிகழ்வுகளின் தொடக்கத்தினால் ,

தொடக்கத்தின் வாய்ப்புகளினால் ,

வாய்ப்புகளின் தழுவல்களினால் ,

தழுவல்களின் அனுபவத்தினால் ,

அனுபவத்தின் பதவியினால் ,

பதவியின் அதிகாரத்தினால் ,

அதிகாரத்தின் மகிழ்ச்சியினால் ,

நாம் வாழ்வின் ஓர்  உயர்ந்த எல்லையை

மற்றவர்  பாராட்டும் வகையில் ,

மற்றவர் புகழும் வகையில் ,

மற்றவர்  அதிசயிக்கும் வகையில் ,

மற்றவர்  வியக்கும் வகையில் ,

மற்றவரை விட நாம் ஓர்  உயர் ந்த நிலையை அடைவதற்கு ,

சமுதாயம் நம்மை கவனிக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு ,

சமுதாயம் நம்மை உற்று நோக்கும் படி இயங்குவதற்கு ,

உயர்வான அரியணையில் நம்மை அமர வைத்து

சமுதாயம் பாராட்டுவதற்கு  ,

சபையில் உயர்வான கௌரவம் பெற்று சிறப்புறுவதற்கு ,

வரலாறு கவனிக்கும் ஒரு முக்கியமான

வரலாற்று நாயகனான நம்மை பாராட்டுவதற்கு ,

நம்முடைய திறமையை உலகம் பாராட்டுவதற்கு

நம்முடைய அயரா உழைப்பால் கிடைத்த வெற்றியை

பாராட்டி நம் வழியைப் பின்பற்றி நடப்பதற்கு

நம்மைத் தெரிந்தவர்கள் நம்மைப் பாராட்டவும்

நம்மைத் தெரியாதவர்கள் நம்மை அறிந்து கொள்ளவும்

திட்டங்கள் தீட்டி

செயல்கள் வகுத்து

பாதைகள் காட்டி

பயணிக்கச் செய்து

எடுத்த குறிக்கோளில் வெற்றி பெற்று

புகழ்ச்சியின் அரியணையில் அமரவைத்து

உயர் நிலைக்குக் கொண்டு சென்றவரை ;

நம் உயர்வுக்குக் காரணமானவரை ;

நம் உயர்வுக்காக ஓடியாடி உழைத்தவரை ;

நம் உயர்வுக்காக இரத்தம் சிந்தியவரை ;

உயர்வுக்கு அடித்தளம் இட்டவரை ;

உயர்வுக்கான வழியை காட்டியவரை ;

உயர்வுக்கான பாதையில் நம்மை வழி நடத்திச் சென்றவரை ;

உயர்வின் அரியணையில் நம்மை அமர வைத்தவரை ;

நினைத்தல் என்பது பெரிய குணம் .

அது மட்டுமின்றி பலபேர்  முன்னிலையில்

பலபேர் பார்த்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில்

சமுதாயம் அறியும் வண்ணம்

சமுதாயம் உணர்ந்து கொள்ளும் வண்ணம்

தன் உயர்வுக்கு காரணமானவரை

சுட்டி காட்டி இவர்  தான் என்று புகழ்வது

சூழ்நிலையினால் மாறுபடுகிறது .


தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை விட உயர்ந்த நிலையில் இருந்தால் ,

அதிகாரமுள்ள பதிவியில் இருந்தால் ,

சமுதாயம் அதிசயித்து நோக்கும் விரல்விட்டு

எண்ணக் கூடியவர்களில் ஒருவராக இருந்தால் ,

சமுதாயம் உற்று நோக்கும்

புகழ்ச்சியின் உயர்வில் இருக்கும் ஒருவராக இருந்தால் ,

அவரால் தான் இந்த உயர்நிலையை அடைந்தேன் ;

நாட்டியத்தில் சிறப்புற்றேன் ;

பாட்டினில் பெருமையுற்றேன் ;

படிப்பினில் உயர்வுற்றேன் ;

அரசியலில் செழிப்புற்றேன் ;

கலைகளில் களிப்புற்றேன் ;

என்று சொல்வார்கள் .


சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பவர்

தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை வழிநடத்தியவர்  என்று சொல்லும் போது  ,

தனக்கு குருவாக இருந்து ; கடவுளாக இருந்து ; வழிநடத்தியவர்  

இவர்  தான் என்று சொல்லும் போது

சமுதாயம் இவரையும் இவரை வழி நடத்தியவரையும் பார்க்கும் .


தன் உயர்வுக்கு காரணமானவர்  

தன்னை விட உயர்நிலையில் இருப்பதால்

தன் உயர்வுக்கு காரணமானவர் -  இவர்  தான் என்று

சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ளும் மனம்

தன் உயர்வுக்கு காரணமானவர்

 தன்னை விட தாழ்நிலையில் இருந்தால்

தன் உயர்வுக்கு காரணமானவர்  - இவர் தான் என்று

சொல்வதற்கு மனது கூசுகிறது .


இவ்வளவு உயர்வான நிலையில் இருப்பவர்

இவரிடமா மாணவராக இருந்தார்

இவரிடமா கற்றுக் கொண்டார் .

பரதேசி போல் இருக்கும் இவரா ?

அவர்  உயர்வுக்கு காரணமானவர் .

ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருக்கும் இவரா ?

அவர்  உயர்வுக்கு காரணமானவர் .

எல்லாவற்றையும் இழந்தவராக காட்சி அளிக்கும் இவரா ?

அவர்  உயர்வுக்கு காரணமானவர் .

எதையும் அறியாதவர்  போல் இருக்கும் இவரா

அவர்  உயர்வுக்கு காரணமானவர்.

என்று சமுதாயம் தன்னை தாழ்த்தி பேசி விடுமோ ?

தரங்குறைவாக நடத்தி விடுமோ ? என்று கவலையுற்று

தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தால்

அவரை இந்த சமுதாயத்திற்கு

அடையாளப்படுத்துவது இல்லை .

புகழ்வதும் இல்லை .

தன் உயர்வுக்கு விதை விதைத்தவரை

நினைப்பதும் இல்லை

ஒரு சிலர் .


தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை விட உயர்வான நிலையில் இருந்தால்

தன் உயர்வுக்கு காரணமானவர்

இவர்  தான் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் மனித மனம் ,

தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தால்

தன் உயர்வுக்கு காரணமானவர்

இவர் தான் என்று

சொல்லிக் கொள்ள விருப்பப் படுவதில்லை .


தன் உயர்வுக்கு காரணமானவர்

என்று  சொல்லும் போதும்  ,

அவரை புகழ்ந்து பேசுவதன் மூலமும் ,

அவரை உயர்வாக வைத்து போற்றுவதன் மூலமும் ,

அவரை மதிப்புடன் நடத்துவதன் மூலமும் ,

அவர்  மூலம் மேலும் பல உதவிகள் பெற்று

மேலும் உயர்நிலை அடையலாம் - என்ற

எண்ணத்தில் தன் உயர்வுக்கு காரணமான

உயர்ந்தவரை போற்றுகின்றனர்

ஒருசிலர்.


தன் உயர்வுக்கு காரணமானவர்

தன்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தால் ,

அவரால் இனி நமக்கு என்ன உபயோகம்

என்று நினைத்து அவரை நினைக்க மறக்கின்றனர்  ;

அறிமுகப் படுத்தாமல் உதாசீனப் படுத்துகின்றனர் ;

அவர்  நிலையை கண்டு ஏளனம் செய்கின்றனர் ;

அவரை மனம் வருத்தப் பட வைக்கின்றனர் ;

ஒரு சிலர் .


தன் உயர்வுக்கு காரணமாக இருந்தவர்

தன்னை விட உயர்ந்த நிலையில் இருந்தாலும் ,

தன்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தாலும் ,

அவரை மதித்து தன் உயர்வுக்கு

இவர் தான் காரணம் என்று

அவரை சமுதாயத்திற்கு காட்டி மதித்து புகழ்ந்து நடப்பவர்

உயர்  மனம் கொண்டவர்

அவ்வாறு நடவாதவர்

 தாழ்மனம் கொண்டவர்.


ஒருவர்  எந்த நிலையில் இருந்தாலும்

அவர்  தனக்கு ஆற்றிய உதவியை நினைப்பவன்

நினைத்து நன்றி செலுத்துபவன்

நன்றியை மறக்காதவன் ஆகிறான் ;

அவ்வாறு செய்யாதவன் நன்றியை மறந்தவன் ஆகிறான் ;


இயேசு  ஒரு கிராமத்தில் பிரவேசித்த போது

குஷ்டரோகமுள்ள மனுஷர்  பத்துப் பேர்

அவருக்கு எதிராக வந்து  துாரத்திலே நின்று

இயேசுவே எங்களைக் காணுங்கள் ;

எங்களைப் பாருங்கள் ;

எங்களுடைய குற்றுயிரான நிலையைப் பாருங்கள் ;

நாங்கள் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப் பட்ட

இழிவான நிலையைப் பாருங்கள் ;

நாங்கள் படும் வேதனையைப் பாருங்கள் ;

எங்களுக்கு இரங்குங்கள் ;

எங்களுக்கு உங்கள் கருணையைக் காட்டுங்கள் ;

எங்கள் மேல் உங்கள் அன்பைப் பொழியுங்கள் ;

எங்கள் மேல் உங்கள் இரக்கத்தைக் காட்டுங்கள் ;

என்று சத்தமிட்டார்கள் .


தங்கள் கோரிக்கையை வேதனையுடன்

எடுத்து வைத்து சத்தமிட்டார்கள் .

இயேசு அவர்களைப் பார்த்து

நீங்கள் ஆசாரியர்களிடம் செல்லுங்கள்

ஆசாரியர்களுக்கு உங்களைக் காட்டுங்கள் என்றார் .


அவர்  சொல் கேட்டு

அவர்கள் போகையில் நோய் நீங்கப் பெற்று சுத்தமானார்கள் .

பத்துப் பேர்  நோயிலிருந்து விடுபட்டு சுத்தமானார்கள் .

இயேசுவின் இரக்கம் மேலிட்ட வார்த்தைகளால்

பத்துத் தொழுநோயாளிகளும் குணமானார்கள் .


இப்பத்து பேர்களில் ஒரே ஒருவன் தான்

நோய் நீங்கப் பெற்று சுத்தமானதைக் கண்டு திரும்பி வந்து

இயேசு பொழிந்த கருணைக்கு ,

இயேசு செய்த செயலுக்கு ,

இயேசு செய்த உதவிக்கு ,

இயேசு காட்டிய அன்பிற்கு ,

இயேசு செய்த இந்த பேருபகாரத்துக்கு ,

நன்றி சொன்னான் .

உரத்த சத்தத்தோடு தேவனை மகிமைப் படுத்தினான் ;

இயேசுவின் பாதத்தருகே முகங்குப்புற விழுந்தான் ;

இயேசுவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் ;

அவன் சமாரியனாய் இருந்தான் .


இயேசுவால் குணம் பெற்ற ,

இயேசுவால் வாழ்க்கையில் மாற்றம் பெற்ற  ,

தொழுநோயாளிகள் பத்துப் பேரில்

இரண்டு தன்மைகள் ; இரண்டு மனங்கள் ;

கொண்டவர்கள் இரண்டு பிரிவாக இருந்தனர்.


அதில் 9 பேர்  கொண்ட ஒரு பிரிவு

இயேசு செய்த உதவிக்கு நன்றி சொல்லவில்லை ;

நன்றியை நினைத்து பார்க்கவில்லை ;

தன் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை

உணர்ந்து நன்றி செலுத்தவில்லை ;

மாற்றத்தின் மலர்ச்சிகளை ,

இன்பங்களின் எழுச்சிகளை ,

சந்தோஷத்தின் இயக்கங்களை ,

மகிழ்ச்சியின் செயல்களை ,

உணர்ந்து உதவியை நினைக்கவில்லை ;

நன்றியை வார்த்தையில் சொல்லவில்லை ;

நன்றியை செயலில் காட்டவில்லை ;


அதில் 1 ஒருவரைக் கொண்ட மற்றொரு பிரிவு

அதாவது ஒருவர்  மட்டுமே திரும்பி வந்தார்

இயேசுவின் உதவியை நினைத்தார்

இயேசு தன் வாழ்க்கையில் நிகழ்த்திய

மிகப்பெரிய அற்புதத்தை  ,

மிகப்பெரிய அதிசயத்தை ,

மிகப்பெரிய மாற்றத்தை ,

யாராலும் நிகழ்த்த முடியாத

யாராலும் செய்ய முடியாத

மிகப்பெரிய செயலை

தன் வாழ்க்கையில் செய்தார்  என்று நினைத்தான் .


துன்பத்திலும் ,

துயரத்திலும் ,

கவலையிலும் ,

கண்ணீரிலும் ,

சோகத்திலும் ,

துக்கத்திலும் ,

வேதனையிலும் ,

வலியிலும் ,

சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையை

எதற்காக வாழ்கிறோம் ;

எதைப் பெற வாழ்கிறோம் ;

எதை அடைய போராடி வாழ்கிறோம் ;

என்ற நினைப்பு இல்லாமல்

வருத்தத்தில் கழிந்து கொண்டிருந்த தன் வாழ்க்கையை ,

இறப்பு வரை இதே நிலை தான் தொடரும்

இறப்பின் வேதனை உயிர்  இருக்கும் போதே

அனுபவிக்க வேண்டும்

உடல் வலியிலும் ,

மன வேதனையிலும் ,

சமுதாய அவமதிப்புகளாலும் ,

மனித இகழ்ச்சிகளாலும் ,

அவமானப்பட்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்று

இது தான் வாழ்க்கை

இது தான் என் வாழ்க்கை பயணம்

என்று வாழ்க்கையை நகர்த்தி கொணடிருந்த தனக்கு

இயேசு தன் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதம் உயர்வானது

என்பதை உணர்ந்த ஒருவன் ஒரே ஒருவன்

உதவியின் தன்மையை உணர்ந்த ஒருவன்

இயேசுவிடம் திரும்பி வந்து நன்றி சொன்னான் .


10 பேரில்

9 பேரைக் கொண்ட ஒரு பிரிவு

இயேசுவின் உதவியை உணர்ந்து

திரும்பி வந்து நன்றி சொல்லவில்லை .


1 பேரைக் கொண்ட மற்றொரு பிரிவு

இயேசுவின் உதவியை உணர்ந்து

திரும்பி வந்து நன்றி சொன்னான் ,


9 பேர்கள் இயேசுவின் உதவியால்

கருணையால் குணம் பெற்ற 9 பேர்கள்

அதிகாரத்தின் பார்வை தன் மேல் விழுமோ  ?

ஆதிக்க வர்க்கத்தின் அடக்கு முறை

தன் மீது ஏவப்படுமோ ?

பணம் படைத்தவர்களின் தாக்குதலுக்கு

தான் இரையாக வேண்டுமோ ?

சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினரின்

ஆவேச வார்த்தைகளுக்குள் தாங்கள் மாட்ட வேண்டுமோ ?

இயேசுவின் மேல் விரோதத் தன்மை கொண்ட

பகைமை நெஞ்சம் கொண்ட

இயல்பினர்களின் கைக்குள் தாங்கள் சிக்கி

வேதனை அடைய வேண்டுமோ ?

என்ற பல்வேறு வினாக்களை நெஞ்சத்தில் தாங்கி

சமுதாய தாக்குதலுக்கு பயந்து 9 பேர்

இயேசுவின் உதவியை மறந்து  

நன்றி சொல்லாமல் சென்று விட்டனர்.


சமுதாயம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்

என்று கவலைப்படாமல்

அதிகார வர்க்கமும் ,

ஆதிக்க நெஞ்சமும் ,

பணக்கார திமிரும் ,

விரோத மனப்பான்மையும் ,

பகைமை உள்ளமும் ,

தன்னைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாமல் ,

தன் எதிர்கால வாழ்வு நன்றாக இருக்குமா ?

சமுதாயத்தால் தண்டிக்கப்படுமா ?

சமுதாயத்தால் உதாசீனப்படுத்தப்படுமா ?

சமுதாயத்தால் அவமதிக்கப்படுமா ?

என்பதைப் பற்றி நினையாமல் ,

தன்னை குணமாக்கியவர்

தன்னைவிட உயர்ந்தவரா ? அல்லது தாழ்ந்தவரா  ?

என்று நினையாமல்

இயேசு தனக்கு செய்த உதவியை மனதில் கொண்டு

திரும்பி வந்து நன்றி சொன்னான் .


சமுதாய கோட்பாடுகளுக்கு பயந்தவன்

சமுதாயத்தில் ஒரு பிரிவினரால்

தவறாக கருதப்படுபவரிடமிருந்து

தான் உதவியைப் பெற்றது வெளியில் தெரிந்தால்

தன் வாழ்க்கை பாதிக்கப் படுமா என்று நினைத்து

ஒருவர்  செய்த உதவியை நினைக்க மாட்டான் ;

நன்றி சொல்ல மாட்டான் ;

மறந்து விடுவான் .


ஆனால் தவறாக கடைபிடிக்கப்படும்

சமுதாய கோட்பாடுகளைப் பற்றி கவலைப்படாதவன்

தனக்கு உதவி செய்தவர்  யார் என்று பாராதவன்

இவரால் தான் எனக்கு உதவி கிடைத்தது

இவரால் தான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டானது - என்று

யாரால் தனக்கு உதவி கிடைத்ததோ

யாரால் தனக்கு வாழ்க்கையில் மாற்றம் உண்டானதோ

அவருடைய உதவியை நினைப்பான் ;

நன்றி சொல்வான் ;

உதவியை மறக்க மாட்டான் .


10 பேரில் 9 பேர்  இயேசுவின் உதவியையும்

சூழ்நிலையையும் ஆராய்ந்தனர்  நன்றி சொல்லாமல் சென்றனர்.


1 பேர்  ஒருவன் இயேசுவின் உதவியை மட்டுமே நினைத்தான்

நன்றி சொன்னான்

அந்த ஒருவனும் சமாரியன் .


இயேசு மற்றவர்கள் எங்கே என்று கேட்டார்

அவர்கள் சென்று விட்டனர்  என்றான் .

அப்பொழுது இயேசு சுத்தமடைந்தவர்கள்

10 பேர்  அல்லவா

நீ ஒருவன் மட்டுமே வந்து இருக்கிறாய்

மற்ற ஒன்பது பேர்  எங்கே அவர்களை காணவில்லை

நீ மட்டும் வந்து இருக்கிறாய் என்றார்.


தேவன் செய்த மகிமையை உணர்ந்து

தேவனை மகிமைப் படுத்துவதற்கு

தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு

பத்துப் பேரில் ஒன்பது பேர்  தவிர்த்து

இந்த ஒருவனே இந்த அந்நியனே வந்திருக்கிறான் .

இவனைத் தவிர மற்ற ஒருவரும் வரவில்லை .


நீ கடவுள் மேல் வைத்த விசுவாசம்

உன்னை காப்பாற்றியது

உன்னை இரட்சித்தது

எழுந்து செல் என்றார்.


சமுதாய பார்வைக்கு அஞ்சுபவன்

தனக்கு உதவி செய்தவர்

சமுதாயத்தின் தவறான பார்வையில் இருந்தால்

தனக்கு உதவி செய்தவர்  உதவியை

வெளிப்படுத்தவும் மாட்டான் ;

நினைக்கவும் மாட்டான் ;

நன்றி சொல்லவும் மாட்டான் ;

ஆனால் சமுதாயத்தின் பார்வைக்கு அஞ்சாதவன்

தனக்கு உதவி செய்தவர்  யார் என்பதை ஆராயாமல்

தனக்கு உதவி செய்தவர்  உதவியை மட்டுமே நினைப்பவன்

தனக்கு செய்த உதவியை நினைப்பான்

நன்றி சொல்வான் .

என்கிறது பைபிள் .


ஒருவர்  நமக்கு செய்த

உதவியின் தன்மையைத் தான் பார்க்க வேண்டுமே ஒழிய

உதவியின் காரணத்தையோ

காலத்தையோ சூழ்நிலையையோ

பார்க்கக் கூடாது என்கிறது பைபிள் .




திருவள்ளுவர் :

“”உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயப்பட்டார்  சால்பின் வரைத்து””

                              ------திருவள்ளுவர்---திருக்குறள்---


ஒருவர்  ஒரு உதவியை செய்யும் போது

சமுதாயம் இருவேறு பட்ட நிலைகளில் நின்று கொண்டு

அவர்  செய்த உதவியைப் பார்க்கிறது :


ஒன்று           : உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்

                                          உதவி செய்கிறார்  என்கின்றனர்  ஒரு பிரிவினர் .

மற்றொன்று : தன்னுடைய ஆதாயத்திற்குத் தான்

                                             உதவி செய்கிறார்  என்கின்றனர்  மற்றொரு பிரிவினர் .


இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர் ;

பிரச்சினையில் மாட்டிக் கொண்டு இருப்பவர் ;

பிரச்சினையை சமாளிக்க தெரியாதவர் ;

பிரச்சினையை சுமுகமாக முடிக்கத் தெரியாதவர் ;

பிரச்சினையில் அலைக்கழிக்கப்பட்டு மனம் நொந்தவர் ;

பிரச்சினை சூறாவளியில் சிக்கித் தவித்தவர் ;


பிரச்சினையில் மாட்டிக் கொண்டு முழித்தவர்

தன் பிரச்சினையை நீக்க வேண்டியும் ,

வறுமையின் பிடியில் இருப்பவர்

தன் வறுமையை விலக்கும் படியும் ,

பசியின் தாக்கத்தில் இருப்பவர்;

தன் பசியை அகற்றும் படியும் ,

கவலையின் ஆதிக்கத்தில் இருப்பவர்

தன் கவலையை துடைக்கும் படியும் ,

கண்ணீர்க் கடலில் இருப்பவர்

தன் கண்ணீரை நீக்கும் படியும் ,

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்

தன் மனநிலையை சரி செய்யும் படியும் ,

விரக்தியின் எல்லையில் இருப்பவர்

தன்னை மகிழ்ச்சியான வாழ்வில் இணைக்கும் படியும் ,

தோல்வியில் துவண்டு இருப்பவர்

தனக்கு வெற்றியின் விலாசத்தைக் காட்டும் படியும் ,

இழப்பின் வேதனையில் இருப்பவர்

அடைவதில் உள்ள இன்பத்தை அடையும் படியும் ,

இல்லாமையினால் வருத்தப்பட்டு இருப்பவர்

தேவையானவைகளைப் பெறும் படியும் ,

போலியானவைக்குள் மாட்டி இருப்பவர்

தனக்கு உண்மைகளை காட்டும் படியும் ,

தவறானவைக்குள் சிக்கி இருப்பவர்

தனக்கு சரியானவைகளை காட்டும் படியும் ,

அறியாமைக்குள் மூழ்கி இருப்பவர்

தனக்கு விழிப்புணர்வு தரும் படியும் ,

ஏமாற்றத்தால் தாக்குண்டு இருப்பவர்

நம்பிக்கையை தனக்கு காட்டும் படியும் ,

உதவி தேவைப்படும் ஒருவர்

பல்வேறு காரணங்களால் ,

பல்வேறு நிலைகளில் ,

பல்வேறு சூழ்நிலைகளில் ,

பல்வேறு நேரங்களில் ,

பல்வேறு இடங்களில் ,

பிரச்சினையில் சிக்கி உதவி தேவைப்படுபவர் ;

அன்றாட தேவைகளை

பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறுபவர் ;

அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து

மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய தடுமாறுபவர் ;

அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய

தவறான செயல்களில் ஈடுபட்டு

பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டவர் ;

அன்றாட தேவைகளை தவிர்த்து

மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய செயல்களைச் செய்யும் போது

தவறுகளில் ஈடுபட்டு பிரச்சினைகளில் மாட்டிக் கொள்பவர் ;

என்று பல்வேறு காலங்களில்

பல்வேறு சூழ்நிலைகளில்

பல்வேறு விதமான உதவிகள் வேண்டுவோர்

உதவி செய்பவரிடம் நாடி செல்கின்றனர்.

உதவியைப் பெற்றவர்  மனமும்

சமுதாயம் அதைப் பார்ப்பதன் மூலம் பெறும் மனநிலையும்

அதனதன் தன்மைக்கு ஏற்றாற் போல் இருக்கும் .


ஒரு பணக்காரர்  ;

ஒரு அரசியல்வாதி  ;

ஒரு திரைப்படத்துறையைச் சார்ந்தவர் ;

உயர்நிலையில் இருக்கும் ஒருவர் ;

சமதாயத்தால் உயர்ந்தவராகக் கருதப்படுபவர் ;

என்ற நிலையில் யாரேனும்

ஒருவர்  ஏழைகளுக்கு

பசியாற உணவு படைக்க வேண்டும் என்று

அனைவரையும் அழைத்து நாள் குறிப்பிட்டு

அன்று அனைவருக்கும்

சமபந்தி போஜன நிலையில்

உணவு படைத்தால் உதவி பெறும் சமுதாயம்

அதை இரண்டு கோணங்களில் பார்க்கிறது .


அவர்  எவ்வளவு உயர்வானவர் ;

இரக்க மனம் கொண்டவர் ;

கருணை உள்ளம் படைத்தவர் ;

ஏழைகளுக்கு இரக்கம் கொள்பவர் ;

மற்றவரையும் தன் போல் பாவிப்பவர் ;

வறியவர்க்கு இரங்குபவர்

ஏழைகளுக்கு உணவு படைத்து

அவர்  பசியை போக்குகிறார் - என்று

அவர்  செய்த அன்னதானத்தை

அவர் செய்த செயலை

போற்றுகிறது சமுதாயத்தின் ஒரு பிரிவு .


அவர்  விளம்பரத்திற்காகத் தான் இதைச் செய்கிறார் ;

தன் பெருமையை நிலை நாட்டத்தான் இப்படிச் செய்கிறார் ;

தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளத்தான் இப்படி செய்கிறார் ;

இதன் மூலம் புகழ் பெற்று

தன்னை உயர்த்திக் கொள்வதற்காகத் தான் இப்படி செய்கிறார் ;

செய்யாத தவறையெல்லாம் செய்து விட்டு

நல்லவன் போல் நடித்து ஊரை ஏமாற்றுகிறார் ;

ஊர்  சொத்தை கொள்ளை அடித்து விட்டு

ஊருக்கே தானம் செய்கிறார் ;

குடிகளை கெடுத்து விட்டு

குடிகளை வாழ வைப்பது போல் நடிக்கிறார் ;

என்று  வசை பாடுகிறது

உதவி பெற்ற சமுதாயத்தின் ஒரு பிரிவு.

உதவி செய்தவரை தவறான கோணத்தில் பார்க்கிறது.


உதவி செய்தவர்  உண்மையாக உதவி செய்தார் ;

உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செய்தார் ;

உதவி செய்து பெயர்  பெற வேண்டும்

உதவி செய்து பாராட்டு மழையில் நனைய வேண்டும்

உதவி செய்து புகழ் பெற வேண்டும்

என்ற தவறான எண்ணத்தில்

தவறான நோக்கத்தில் அவர்  உதவி செய்யவில்லை ;

உதவி தேவைப்படுபவர்களுக்கு ,

உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு ,

உதவி செய்தால் மற்றவர்கள் வாழ்வில் மாற்றம்

வரும் என்பதை உணர்ந்து ,

உதவி செய்வதின் அத்தியாவசியத்தை உணர்ந்து ,

உதவி செய்தார்  என்று

உதவி செய்தவர்  உதவியை

நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கிறது

உதவி பெற்ற சமுதாயத்தின்  ஒரு பிரிவு.


உதவி செய்தவருடைய

உதவியை பெற்ற சமுதாயம்

இரண்டு விதமான கண்ணோட்டத்தில் பார்க்கிறது - அதாவது

நல்ல கண்ணோட்டம் ;

தவறான கண்ணோட்டம் ;

என்று இரண்டு விதமான

கண்ணோட்டத்தில் பார்க்கிறது .


ஆதரவற்றோர் ;

ஆனாதைகள் ;

முதியவர் ;

மாற்றுத் திறனாளிகள் ;

மனநல வளர்ச்சி குன்றியோர் ;

படிப்பதற்கு பணமில்லாமல்

மேல் படிப்பை தொடரமுடியாமல் இருப்பவர்களுக்கு

சமுயதாயத்தில்

உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ;

வசதி படைத்தவர்கள் ;

பதவியில் இருப்பவர்கள் ;

அதிகாரம் உள்ளவர்கள் ;

நடிகர்கள் ;

அரசியல்வாதிகள்  ;

என்று பல்வேறு நிலையில் உள்ளவர்கள்

உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்தால்

அதை பார்க்கும் சமுதாயம்

அவர்களை இரண்டு விதமான

கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது .


அரவியல்வாதி உதவி செய்தால்

ஓட்டுக்காக உதவி செய்கிறார்  என்றும் ,

பதவியில் உள்ளவர்கள் உதவி செய்தால்

தன் வருமானத்தை வருமான வரியை

நேர் செய்ய செய்கிறார் என்றும் ,

நடிப்புத் துறையில் உள்ளவர்கள் உதவி செய்தால்

தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற

நோக்கத்தில் உதவி செய்கிறார்  என்றும் ,

வசதி படைத்தவர்  உதவி செய்தால்

தான் செய்த பாவத்தை போக்கி

புண்ணியம் சேர்த்துக் கொள்ள

உதவி செய்கிறார்  என்றும் ,


உதவி செய்தவருடைய உதவியை

அவரவர்  நிலைக்கு ஏற்றவாறு  ,

அவரவர்  புத்திக்கு ஏற்றவாறு ,

அவரவர்  மனநிலைக்கு ஏற்றவாறு  ,

அவரவர்  குணத்திற்கு ஏற்றவாறு ,

விமர்சனம் செய்கின்றனர் .


உதவி பெற்ற சமுதாயத்தின் ஒரு பிரிவினர் :

உதவி செய்தவருடைய உதவியை

தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்தாலும்,

உதவி பெற்ற சமுதாயத்தின் மற்றொரு பிரிவினர் :

உதவி செய்தவருடைய உதவியை

நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.


உதவி கேட்டு வந்தவருக்கு உதவி செய்ய வேண்டும்

என்ற உண்மையான நோக்கத்தில் உதவி செய்தாலும்  ,

உதவி கேட்டு வந்தவருக்கு உதவி செய்வதன் மூலம்

தனக்கு வந்த ஆதாயம் கிடைக்கும்  என்று  அறிந்து

ஆதாயத்திற்காக உதவி செய்தாலும் ,

உதவி செய்தவருடைய உதவியை சமுதாயம்

நல்ல கண்ணோட்டம் ;

தவறான கண்ணோட்டம் ;

என்று இரண்டு விதமான

கண்ணோட்டத்துடனும் தான் பார்க்கிறது .


உண்மையாக உதவி செய்பவர்;

தன் மேல் சாட்டப்பட்ட விமர்சனங்களை கண்டு

உதவி செய்ய மனமில்லாமல் போய்விடுவார்

அல்லது

தன் மேல் எத்தகைய

தவறான விமர்சனம் சுமத்தப்பட்டாலும்

நல்ல விமர்சனமாக சொல்லப்பட்டாலும்

விமர்சனங்கள் நல்லவையா?  தவறானவையா?

தன் முன்னேற்றத்திற்கு தடையானவையா ?

தன் வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையா ?

என்பதை பாராமல் உதவி செய்வார் .


உதவி செய்பவருடைய உதவி என்பது

உண்மையாக செய்த உதவியாக இருந்தாலும்

ஆதாயத்திற்காக செய்யப்பட்ட உதவியாக இருந்தாலும்

உதவி பெறுபவருடைய மனநிலையைப் பொறுத்து

உதவியின் தன்மை வேறுபடுகிறது


உதவி என்று கேட்டு சென்றவருக்கு

ஒருவர்  உதவி செய்தால்

ஒருவர்  செய்த உதவியின் தன்மையைத் தான்

பார்க்க வேண்டுமே தவிர

உதவி செய்தவர் 

எந்த நிலையில் இருந்து செய்தார் ்

எதற்காக செய்தார்

எதை பெறுவதற்காக செய்தார் ;

எதை நிறைவேற்றுவதற்காக செய்தார் ;

எதை அடைவதற்காக செய்தார்  -  என்று

உதவி செய்தவரைப் பற்றி ஆராயாமல்

உதவி செய்தவரைப் பற்றி சிந்திக்காமல்

உதவியை சிந்திக்க வேண்டும் .


உதவி செய்த ஒருவருடைய

உதவியின் தன்மையை ,

உதவியின் மேன்மையை ,

உதவியின் அத்தியாவசியத்தை ,

தான் சிந்திக்க வேண்டும் ;

ஆராய வேண்டும் ;

புகழ வேண்டும் ;

நினைக்க வேண்டும் ;

நன்றி செலுத்த வேண்டுமே தவிர ,

உதவி செய்தவர்  

எந்த நிலையில் இருக்கிறார் ;

சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறாரா ?

புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறாரா ?

சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறாரா ?

மாறுபட்டு இருக்கிறாரா ?

அனைவரும் கவனிக்கும் வகையில் இருக்கிறாரா ?

அனைவரும் எதிர்க்கும் வகையில் இருக்கிறாரா ?

என்று பார்க்காமல்

காலத்தை பார்க்காமல்

உறவுகளைப் பார்க்காமல்

சூழ்நிலைகளைப் பார்க்காமல்

உதவி செய்தவருடைய

உதவியைத் தான் பார்க்க வேண்டும் .


உதவி செய்தவருடைய உதவியை

நல்ல கண்ணோட்டத்துடன் பார்ப்பவனால் மட்டுமே

உதவி செய்தவரை உயர்வாக பார்க்க முடியும்  ;

உதவி செய்தவருடைய

உதவியை நினைக்க முடியும் ;

உதவி செய்தவருக்கு நன்றி சொல்ல முடியும் ;

உதவி செய்தவருடைய உதவியை

என்றென்றும் மறவாமல் இருக்கமுடியும் ;


உதவி செய்தவருடைய உதவியை

தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவனால்

உதவி செய்தவரை தாழ்வாகத் தான் பார்க்க முடியும் ;

உயர்வாக பார்க்க முடியாது ;

உதவி செய்தவருக்கு நன்றி சொல்ல முடியாது ;


எனவே ஒருவர்  நமக்கு செய்த

உதவியின் தன்மையைத் தான்

பார்க்க வேண்டுமே ஒழிய  ,

உதவி செய்ததற்கான காரணத்தையோ ,

சூழ்நிலையையோ பார்க்கக்கூடாது .


உதவி செய்யப்படும்

செயலைப் பொறுத்தோ

அளவைப் பொறுத்தோ

அது மதிப்பிடப்படுவதில்லை .

அந்த உதவியைப் பெறுபவரின்

மனநிலையைப் பொறுத்து

பண்பைப் பொறுத்து

உதவியின் அளவு மதிப்பிடப்படுகிறது .

என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :

பைபிள் ,

தனக்கு உதவி செய்தவர்  யார்  என்று ஆராயாமல்

உதவியை மட்டும் நினைப்பவன்

தனக்கு செய்த உதவியை நினைப்பான்

நன்றி செலுத்துவான்

என்கிறது ,


அவ்வாறே ,

திருவள்ளுவரும் ,

ஒருவர்  நமக்கு செய்த

உதவியின் தன்மையைத் தான்

பார்க்க வேண்டுமே ஒழிய

உதவியின் காரணத்தையோ

காலத்தையோ

சூழ்நிலையையோ

பார்க்கக் கூடாது

என்கிறார் .


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

                                                போற்றினேன் பதிவுஅறுபத்தி  ஒன்றுந்தான்முற்றே “”