June 12, 2019

பரம்பொருள்-பதிவு-23


                        பரம்பொருள்-பதிவு-23

9.யாகசாலை
“ஆலயத்தின்
வடமேற்கு மூலையில்
யாகசாலை
அமைக்கக் கூடாது ;
ஆலயத்தின்
வடமேற்கு
மூலையைத்
தவிர வேறு
ஏதேனும்
திக்குகளில்
ஏதாவது ஒன்றில்
யாகசாலை
அமைக்க வேண்டும் ;”

“வடகிழக்கு
மூலை என்று
சொல்லப்படுகின்ற
ஈசானமூலை
யாகசாலை
அமைப்பதற்கு
உத்தமமாகக்
கருதப்படுகின்றது”

“யாகசாலை
அமைக்கும்போது
பந்தல்கால்களை
நிறுவுவதற்கென்று
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுதியான மரங்களை
உபயோகிப்பார்கள் ;
தென்னை
ஓலைகளைக் கொண்டு
பின்னப்பட்ட
தடுக்குகளை
மேலே கோப்பாக
மூடுவார்கள் ;
இவைகள் மழை
வெயில்
ஆகியவற்றிலிருந்து
யாகசாலையை
பாதுகாப்பாதுடன் ;
பந்தலுக்குக் கீழ்
உள்ள அனைத்து
பகுதிகளுக்கும்
குளிர்ச்சியைத் தந்து;
அந்த இடங்கள்
முழுவதையும்
குளிர்ச்சியாக
வைத்திருக்கும் ;”

“யாகசாலைப்
பகுதியை மூங்கில்
பிளாச்சுகளையும் ;
மண்சுவர்களையும் ;
கொண்டு எளிய
முறையில்
தற்காலிகத் தேவைக்கு
ஏற்றபடியே
அமைக்கிறார்கள் ;”

“இந்த எல்லைக்குள்
தேவைப்படும் வகையில்
தேவையான
இடத்தைக் கணக்கிட்டு
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
வேதிகை (மேடையை)
அமைப்பார்கள்”

“கோயிலில்
எத்தனை கடவுள்
சிலைகளை
நிறுவ வேண்டுமோ?
அத்தனை கடவுள்
சிலைகளிலும்
உள்ள கடவுள்
சக்தியை இயங்க
வைப்பதற்கு ;
எத்தனை கும்பங்கள்
வைக்க வேண்டுமோ
அத்தனை கும்பங்களை
வைக்க வேண்டும்”

“இந்த யாகசாலையில்
இரண்டு காலம்
முதல் ஆறுகாலம்
வரையில்
ஹோமம், பலி,
தியானம், பூஜை
முதலியவற்றால்
ஆராதனை
செய்வார்கள்”

“தூப, தீப, சோடச,
உபசாரங்கள்,
வேத பாராயணம்,
திருமுறை ஓதுதல்
முதலியவற்றோடு
ஒருகால பூஜை
நிறைவேறும்”

“இவ்வாறு 3, 5, 7
அல்லது 9 தினங்கள்
சக்திக்குத் தகுந்தபடி
யாகசாலையில்
பூஜைகள்
நடத்தப்படும்”

“இவ்வாறு தொடர்ந்து
பூஜைகள்
செய்வதன் மூலம்
பிரபஞ்சத்திலிருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பங்களில்
இறக்கப்பட்ட
கர்ப்பக்கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலையில் உள்ள
கடவுள் சக்தி மற்றும்
ஏனைய கடவுள்
சிலைகளில் உள்ள
கடவுள் சக்திகள்
அனைத்தும் அந்தந்த
கடவுள் சக்தி உள்ள
கும்பங்களில் தனது
பரிபூரண நிலையை
அடைகிறது “

“மந்திரங்களால்
செய்யப்படும்
தொடர்ச்சியான
கிரியைகளால் ஏற்படும்
சூட்சும சலனங்களால்
குறிப்பிட்ட
கடவுள் அம்சமானது
குறிப்பிட்ட கலசத்தில்
பரிபூரண நிலையில்
முழுமை அடைகிறது “

“பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்யும் பணியானது
யாகசாலையில்
நடைபெறுகிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 11-06-2019
/////////////////////////////////////////////////////