March 24, 2019

திருக்குறள்- பதிவு - 131

திருக்குறள்- பதிவு - 131

“ தான் வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய குடும்பம்
வாழ்வதற்காகவும் ;
தன்னுடைய சந்ததிகள்
வாழ்வதற்காகவும் ;
பணத்திற்காகவும் ;
பதவிக்காகவும் ;
அதிகாரத்திற்காகவும் ;
மானமிழந்து மண்டியிட்டு
கால்பிடித்து வாழ்பவர்கள்
மத்தியில் ,

“ கொள்கை என்றால்
என்ன என்று தெரியாமல்
தங்களுடைய
வாழ்வாதாரத்திற்காக
போராட்டம் நடத்துபவர்களை
சமூக விரோதிகள் என்றும் ;
தங்கள் உரிமைக்காக
போராடுபவர்களை
தீவிரவாதிகள் என்றும் ;
தேவையற்ற வார்த்தைகளை
பேசிக்கொண்டு ;
சுகபோகத்தில்
திளைத்துக் கொண்டு ;
கூத்தடித்துக் கொண்டு ;
கோட்டையைப் பிடித்து
விடலாம் என்று
பதவி ஆசை பிடித்து
அலைபவர்கள்
மத்தியில் ,

“ இருண்டு கிடந்த மக்கள்
உள்ளங்களில் பகுத்தறிவு
என்ற அறிவு விளக்கு
ஏற்றி - உண்மையான
பகுத்தறிவாதிகள்
வாழ்ந்த நாட்டில்
பகுத்தறிவு என்றால் என்ன
என்று தெரியாமல்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத
செயல்களைச் செய்து
கொண்டு - பகுத்தறிவு
என்ற போலியான
முகமூடியை அணிந்து
கொண்டு மக்களை
அடிமைகளாக வைத்து
ஆள நினைப்பவர்கள்
மத்தியில் ,

“ அரசியல் அதிகாரம் ;
பொருளாதார பாதுகாப்பு ;
ஆகியவற்றை பயன்படுத்தி
மதத்தின் பெயரால்
மக்களை ஏமாற்றி
ஆட்சி செய்து
கொண்டிருந்தவர்கள்
நாட்டுப்பற்று ,
மதப்பற்று ,
கடவுள் பற்று - ஆகிய
பற்றுகளை வைத்துக்
கொண்டு - மக்களிடையே
பகைமையை வளர்த்து ;
அமைதியின்மையை
ஏற்படுத்தி  ;
அதிகாரத்தை கைப்பற்றி ;
ஆட்சி செய்ய துடிப்பவர்கள்
மத்தியில் ,

“ தனக்காக வாழாமல்
இந்த சமுதாயத்திற்காகவே
வாழ்ந்து; ‘

“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்துக்கு
எதிராக கருத்து சொன்ன
காரணத்திற்காகவும் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
அனைத்து பழக்க
வழக்கங்களிலும்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“சர்ச்சுகள் காலம் காலமாக
கடைபிடித்துவரும்
மதப் பழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று சொன்ன
காரணத்திற்காகவும் ; ‘

“ இந்த உலகத்திலுள்ள
மக்கள் அனைவரையும்
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
மனிதனை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்யக் கூடாது
அந்த முயற்சிகளை
நிறுத்த வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ கல்வியும், விஞ்ஞானமும்
மதம் மற்றும் அரசியல்
தலையீடு இல்லாமல்
சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காகவும் ; “

“ ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் ; ‘

“ 17-02-1600-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
நினைவாக ;
09-07-1889-ஆம் ஆண்டு
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின் சிலை ;
24-03-2019 இன்று வரை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தான்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
நின்று கொண்டிருக்கிறது ‘

“ வாட்டிகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆக மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களுக்கும்
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
இன்றளவும் நின்று
கொண்டிருக்கும்
ஜியார்டானோ புருனோவின்
சிலை ஒரு ஆறாத
வடுவாகத் தான்
இருந்து கொண்டிருக்கிறது
என்பது வரலாறு
பதிவு செய்து
வைத்திருக்கும் உண்மை ; ‘

“ ஜியார்டானோ புருனோ
என்ற நெருப்பை
நெருப்பால் எரித்த
கிறிஸ்தவர்கள்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
என்ற நெருப்பால்
ஒவ்வொரு கணமும்
எரிந்து கொண்டு தான்
இருக்கிறார்கள் ; ‘

---------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  24-03-2019

“ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளர்
கிறிஸ்தவர்களால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டாலும் ;
அவரை உயிரோடு
எரித்த அந்த நெருப்பு ;
இன்று வரை
அணையாமல் இருந்து ;
கோடிக்கணக்கான
ஜியார்டானோ
புருனோக்களை உருவாக்கிக்
கொண்டுதான் இருக்கிறது ;”

“ ஜியார்டானோ புருனோவை
கிறிஸ்தவர்கள் உயிரோடு
எரித்துக் கொன்ற
காட்சியை மீண்டும்
ஒருமுறை பாருங்கள்
புரட்சியின் வித்து
எங்கே விதைக்கப்படுகிறது
என்பது தெரியும் !! “

“ ஜியார்டானோ புருனோ
என்ற புரட்சியாளரின்
போராட்ட வாழ்க்கை
இத்துடன் நிறைவு
பெறுகிறது !! “