October 24, 2018

திருக்குறள்-பதிவு-38


                        திருக்குறள்-பதிவு-38

’’’’பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற்
பெரிது””””
       
ஒருவர் செய்யும்
உதவியை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : பிரதிபலனை
        எதிர்பார்த்து
        செய்யும் உதவி

இரண்டு :பிரதிபலனை
         எதிர்பார்க்காமல்
         செய்யும் உதவி

பிரதிபலனை எதிர்பார்த்து
செய்யும் உதவியை
பயன்தூக்கி செய்யும்
உதவி எனலாம்.

பிரதிபலனை
எதிர்பார்க்காமல்
செய்யும் உதவியை
பயன்தூக்கார் செய்யும்
உதவி எனலாம்.

நாம் ஒருவருக்கு
உதவி செய்யும் போது
அவர் நமக்கு மீண்டும்
உதவி செய்வார்
என்பதை எதிர்பார்த்து
செய்யும் உதவி
பயன்தூக்கி செய்யப்படும்
உதவி எனப்படும்.

நாம் ஒருவருக்கு
உதவி செய்யும்போது
அவர் நமக்கு மீண்டும்
உதவி செய்வார்
என்பதை எதிர்பார்க்காமல்
செய்யும் உதவி
பயன்தூக்காரால்
செய்யப்படும்
உதவி எனப்படும்.

பயன்தூக்கார் செய்யும்
உதவியை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று :
இரத்த
சம்பந்தமுடையவர்களால்
செய்யப்படும் உதவி

இரண்டு:
இரத்த
சம்பந்தமில்லாதவர்களால்
செய்யப்படும் உதவி

இரத்த சம்பந்தமுடையவர்கள்
செய்யும் உதவியில்
தாய், தந்தையை
குறிப்பிடலாம்
தாய் நமக்கு
உயிரை அளித்து
அன்பை ஊட்டி
வளர்க்கிறாள்
தந்தை நாம்
சமுதாயத்தில்
வாழ்வதற்குரிய
வழி வகைகளை
ஏற்படுத்திக் கொடுத்து
நமக்கு நன்மை
செய்து வருகிறார்கள்.

இரத்த சம்பந்தமில்லாதவர்கள்
செய்யும் உதவியில்
நம்முடைய சொந்தக்காரர்கள்,
நம்முடைய உறவினர்கள்,
நம்முடைய நண்பர்களைக்
குறிப்பிடலாம்.
நம் வாழ்க்கையில்
குறுக்கிடும் கஷ்டங்கள்
கவலைகள், தோல்விகள்
ஆகிய நிலைகளில்
இருந்து நம்மைக்
காப்பாற்றி நன்மை செய்து
நமக்கு உறுதுணையாக
இருந்து வருபவர்கள்
அவர்கள்.

எந்தவித பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
ஒரு தாய் செய்யும்
உதவியினால்
கிடைக்கும் நன்மைகளை
அனுபவித்துக் கொண்டு
எனக்காக ஒன்றும்
செய்யவில்லை
என்னை ஏன் பெற்றாய்
என்று தாய்மையை
கொச்சைப்படுத்துகிறோம்.

எந்தவிதமான
பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
ஒரு தந்தை செய்த
உதவியை அனுபவித்துக்
கொண்டு சொத்து
சேர்த்து வைத்தாயா
வீடு கட்டி கொடுத்தாயா
வேலை வாங்கித்
தந்தாயா என்று
தந்தையின் அன்பை
கொச்சைப் படுத்துகிறோம்.

சொந்தக்காரர்கள்,
சுற்றத்தார்கள்,
நண்பர்கள் செய்து
கொண்டு வரும்
உதவியினால் பெறப்படும்
நன்மைகளைப்
பெற்றுக் கொண்டு
இதெல்லாம் ஒரு
உதவியா என்று
அவர்கள் செய்த
உதவியை
கொச்சைப் படுத்துகிறோம்.

எந்தவிதமான
பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
இரத்த சம்பந்தமுள்ளவர்களும்
இரத்த சம்பந்தமில்லாதவர்களும்
பயன்தூக்காமல்
உதவி செய்யும் போது
அவர்கள் எந்த
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்து கொண்டு
நமக்கு உதவி செய்தார்கள்

அவர்கள் அந்த உதவியை
செய்வதற்காக எத்தகைய
துன்பங்களை அனுபவித்து
நமக்கு உதவி
செய்தார்கள் என்பதை
நாம் நினைத்து
பார்ப்பதே இல்லை.

எந்தவித பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல்
இரத்த சம்பந்தமுடையவர்களும்
இரத்த சம்பந்தம்
இல்லாதவர்களும்
எப்படிப்பட்ட சூழ்நிலையில்
நாம் இருக்கும் போது
அவர்கள் நமக்கு
உதவி செய்தார்கள்
எப்படிப்பட்ட சூழ்நிலையில்
அவர்கள் இருக்கும் போது
நமக்கு உதவி
செய்தார்கள் என்ற
இரண்டு நிலைகளையும்
நாம் ஆராய்ந்து
பார்த்தோமேயாகில்
அந்த உதவியினால்
நாம் அடைந்த நன்மை
கடலினும் பெரிது
என்பதை உணரலாம்
என்பதைத் தான்

பயன்தூக்கார் செய்த
உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  24-10-2018
//////////////////////////////////////////////////