March 30, 2020

பரம்பொருள்-பதிவு-169


              ஜபம்-பதிவு-417
            (பரம்பொருள்-169)

உயர்வின்
உயர் தாகத்தை
ஒத்துக் கொள்ள
முடியாமல்-அந்த
பிச்சைக்கார
ஏமாளிகளின்
பரிகாச சிரிப்பைக்
கண்டு – இந்த
நானிலம்
நாணா விட்லும்
நடிப்பின் நயம்
உணர்ந்து – நாம்
மனதிற்குள் அழ
வேண்டியது தான்
பாவிகளின்
பண்பின் கருதி
பன்னீர்
பூச்சுக் கொள்ளும்
பண்பற்ற
பரதேசிகளும் – இந்த
சர்வாதிகார
காப்பியத்தில்
சிந்தை தடுமாற
வேண்டியது தான்
உண்மையின்
உரு விளங்காமல்
மூகமூடிகள்
அனைத்தும்
முகத்தை
மூடிவிட்டதால்
இதயம் என்ன?
சோம்பல்
முறிக்க வேண்டுமா ?
சொர்க்கக் கதவு
சொப்பனத்தில்
மட்டுமா ?
சொந்தமாகக்
கிடையாதா ?
நரகம் மட்டும்
நம்மைப்
பார்த்து
நகைத்தால்
நாம் என்ன ?
ஏமாளிகளின்
தலையாட்டி
பிம்பமா?
ஏற்றத்தை
மறந்து
தருக்கர்களுக்கு
தலைவணங்க ?
தன்மானத்தை
விலை
கூறி விட்டு
மடிப்பிச்சை
கேட்க
நாம் என்ன
மானமிழந்தவர்களா ?
வந்தாரை வாழ
வைத்து விட்டு
இலக்கியம்
படைக்க
நாம் என்ன
இளிச்சவாயர்களா ?
சரித்திரம் எனன ?
ஒரு சிலருக்கு
மட்டுமா ?
சொந்தம்
நம்மை அது
மோந்து கூட
பார்க்காதா
நய வஞ்சக
பிசாசுகள்
நயமாய்
களிநடம்
புரியும் போது
ஆளவந்தார்கள்
அரியணை இன்றி
அரற்றி
கொண்டிருக்க
முல்லைப்பல்
காட்டி விட்டால்
மூழ்கி விடுவோமா ?
சிற்றின்பத்தை
சிதையாத
செதுக்கிய
சிற்பத்தால்
இன்பத்தின்
எழி லேணி நம்
இதயச் சுவரை
முட்டி விடுவதால்
நாம் என்ன
கண் இழந்த
கண்ணிய வானா?
கருத்திழந்த கசடரா ?
பாசத்தை
மறைத்து
வைத்திருக்கும்
பண்புள்ளவர்களை
பச்சோந்திகள்
என்பதால்
உயர்வுகள் என்ன
சாம்பல்
மேட்டில்
உட்காரவா
வேண்டும் ?
ஏமாந்த
வேளையில்
கிறுக்குத் தனம்
படைக்க
நாம் என்ன ?
ஏமாந்தவர்களின்
கூடாரமா  
அல்லது
பல்லி ளித்தவர்களின்
பாசறையா ?
சிந்தனை
சிலநேரம்
தான் ஊர்
சுற்றும்
செயல்கள்
எந்நேரமும்
செயலில்
இல்லாவிட்டால்
உழைப்பின்
பலனை
உலகம் இழக்க
வேண்டியது தான !
பசித்தவர்களின்
பட்டினி
வயிற்றில் தான்
பண்புள்ள
பரிவுகள்
பதவியேற்கின்றன
மாடமாளிகைகள்
மண்மேடா
காவிட்டால்
மமதைகள்
மண்டியிட
முடியாமல்
அரசோச்ச
வேண்டியது தான்!
கனல் காவியம்
கனன்று
கொண்டிருந்தால்
புரட்சியின்
புயல் தெரியாது
புதுமையின்
நோக்கம்
புரியாது இது
புலமையின்
சாரல் களல்ல
ஏழ்மையின்
எழுச்சி கீதங்கள்
உவகையின்
உயிரோட்டங்கள்
தழுவலுக்கு
காத்திருக்கும்
தன்மான
கவித் திறன்கள்
விதியை விலக்கி
வைத்து விட்டு
மதியை வேலை
செய்ய தூண்டும்
பண்பின்
பதவிகள்
பரிதவிப்பின்
குமுறல்கள்

திருநங்கை :
“அற்புதம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-168


                ஜபம்-பதிவு-416
              (பரம்பொருள்-168)

அரவான் :
சிற்றின்பத்தின்
சீர் சொல்லும்
சில்லறைகளின்
செயல்களால்
விளைந்த
இன்பத்தின்
எழில்களும் ;
இதயப்
பாசறையின்
பாசமிகு
பண்புகளும் ;
உயர் காவியம்
படைக்கும்
உன்னத
உயிரோவியங்களும் ;
தணலில்
வீழ்ந்து
தள்ளாடும்
தகைமையின்
தகைசான்ற
அன்பின்
அருமைகளும் ;
அரற்றி
கொண்டிருக்கும்
அறியாமையின்
எழுச்சி
பிம்பங்களும் ;
எழுந்தாட
முடியாமல்
ஒய்யாரக்
கூச்சலிடும்
உவகையின்
ஒற்றுமைகளும் ;
சரிந்து வீழ்ந்த
சகாப்தத்தை
சரியாமல் காக்க
சந்தடி சாக்கில்
எழுந்து நிற்கும்
இலக்கணத்தின்
இனிமைகளும் ;
இன்புற்று விளங்க
மூடப்பழக்கம்
முக்காடு
போட்டுக் கொள்ள
முயன்றும்
முடியாமல் போன
ஆசைகள்
அரியணை ஏற
ஆவலாய் அரற்ற
ஓடோடி வந்த
தகுதிகள்
எழுச்சியை
இலக்கணம் காட்ட
தன்மைகளை
காலங்கள்
சுழற்றிக் காட்டி
ஏகாத வேளையில்
இன்ப ஊற்று
ஏறி நிற்க
முயன்று பார்க்க
முடியாமல்
போனதுகள்
முக்கியும்
முனகியும்
முக்காட்டை
கழற்ற முடியாமல்
கனல் நெருப்பில்
கதகதத்து
பொருள் தேடும்
பொருள் நிலை
நாடும் – பொல்லாத
நிலைகளின்
ஆணவம்
அண்ட முடியாமல்
நினைவை
சிப்பிக்குள்
வைத்து விட்டால்
மட்டும் என்ன
முத்து மட்டும்
முல்லைப்பல்
காட்டுமா
முடியாதவைகள்
முயன்றால்
முடிந்தவைகள்
முழுமுதற்
பொருளை
நாடினால்
வாயாரப் புகழும்
வந்தேறிகளும்
வருங்காலத்தின்
நாழிகைகளை
கணக்கிடும்
கணக்கர்களும்
கண்மூட
வேண்டியது தான்
வினாக்களின்
விடை தேட
முடியாமல்
எழுச்சிகள்
எழுந்து
நிற்கா விட்டால்
எது ? முன் நிற்கும் ?
பரவெளியின்
பண்புணராமல்
பாரின் பல்கலை
நினையாமல்
அறிவின்
அடித்தளம்
மனத்தின்
அறிவு சான்ற
விளக்கம் – எங்கே ?
என்று தேடா
விட்டால்
இயலாமைகள் அழ
தோல்விகள்
கண்ணீர்
உகுக்க
புரட்சிகள்
புதைகுழி போக
வேண்டியது தான்?
புல் பூண்டு
செடிகளும்
பொங்கியெழும்
புவனத்தின்
பேர் சொல்லும்
பங்குகளும்
பார்வையில்
படாமல்
மறைந்திருப்பதால்
என்ன பயன்?
விழிக்கதவு
விழிப்பெற்றெழட்டும்
உன் விதியை
அது உணர்த்தட்டும்
பரிவுடன்
பாசம் காட்டி
பண் பளர்க்க 
பாரில் உள்ளோர்
பண் பட்டாலும்
பக்கத்தில்
உள்ளோர்
உள்ளில்
உருவகிக்க
வேண்டியது தான்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-167


             ஜபம்-பதிவு-415
           (பரம்பொருள்-167)

திருநங்கை :
“உங்களிடம்
இணைந்து
இருந்தால்
இந்த உலகத்தில்
கவிதை சொல்லத்
தெரியாதவர்களும்
கவிதை
சொல்லுவார்கள் “

“யாராக
இருந்தாலும்
கவிதை
சொல்லுவார்கள்”

அரவான் :
“நீ சொல்வது போல்
காதல் கவிதை
சொல்வது
வேண்டுமானால்
எளிதாக இருக்கலாம்  ;
யார் வேண்டுமானலும்
சொல்லும் வகையில்
காதல் கவிதை
இருக்கலாம் ;”

“ஆனால்
தத்துவக் கவிதை
அப்படி அல்ல ;
தத்துவக் கவிதையை
அவ்வளவு எளிதில்
எல்லோராலும்
சொல்லி விட
முடியாது ;
தத்துவக் கவிதையை
சொல்வது
என்பது - நீ
நினைப்பது போல்
அவ்வளவு
சுலபமானது அல்ல  ;
தத்துவக் கவிதையை
சொல்வது
என்பது கடினம் ;”

திருநங்கை  :
“அப்படி என்றால்
எனக்காக நீங்கள்
ஒரு தத்துவக்
கவிதையை
சொல்லியே
ஆக வேண்டும் “

அரவான்  :
“என்னது தத்துவக்
கவிதையையா
நானா…………………..-
நானா,…………………….?
சொல்ல வேண்டும் “

திருநங்கை :
“ஆமாம் எனக்காக
நீங்கள் ஒரு
தத்துவக் கவிதையை
சொல்லியே
ஆக வேண்டும்”

அரவான் :
“சரி நான்
முயற்சி செய்கிறேன்  

திருநங்கை :
“காதல் கவிதையை
இவ்வளவு
அழகாக சொல்ல
முடிந்த உங்களால்
தத்துவக் கவிதையை
சொல்ல
முடியாதா என்ன ?”

“கண்டிப்பாக
உங்களால்
சொல்ல முடியும்”

“முயற்சி
செய்கிறேன் என்று
சொல்லக் கூடாது ;
எனக்காக
நீங்கள் ஒரு
தத்துவக் கவிதையை
கண்டிப்பாக சொல்லியே
ஆக வேண்டும் “

“எனக்காக  சொல்வீர்களா?”

அரவான்  :
“கண்டிப்பாக சொல்கிறேன்”

திருநங்கை :
“அப்படி என்றால்
ஒரு நிபந்தனை
நீங்கள் சொல்லும்
தத்துவக் கவிதையில்
அர்த்தம் இருக்க
வேண்டும் - அந்த
அர்த்தம் யாருக்கும்
எளிதாக புரிந்து
கொள்ள முடியாத
வகையில்
கடினமான
வார்த்தைகளால்
அந்தக் கவிதை
அமைந்து இருக்க
வேண்டும் ;
அவ்வாறு ஒரு
தத்துவக் கவிதையை
எனக்காக - நீங்கள்  
சொல்ல வேண்டும் “

அரவான்  :
“அது கொஞ்சம்
கடினமானது
சொல்ல முடியுமா
என்று எனக்குத்
தெரியவில்லை  ;
தத்துவக் கவிதை
சொல்லலாம்
ஆனால்- நீ
கேட்கிறபடி
சொல்வது என்பது
கஷ்டமான செயல் ;
என்னால் சொல்ல
முடியுமா என்று
எனக்குத்
தெரியவில்லை  ;
இருந்தாலும் நான்
முயற்சி செய்கிறேன் ;”

திருநங்கை  :
“உங்களால் முடியும்
நீங்கள் இதை
எனக்காக செய்தே
ஆக வேண்டும்
எனக்காக
செய்வீர்களா ? “

அரவான்  :
“கண்டிப்பாக
செய்கிறேன்
நீ கேட்டபடியே
தத்துவக் கவிதையை
சொல்கிறேன் “

(என்று அரவான்
தத்துவக் கவிதையை
சொல்ல ஆரம்பித்தான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-166


              ஜபம்-பதிவு-414
            (பரம்பொருள்-166)

“கார்த்திகைப்
பூக்களை எடுத்து
வரிசையாக
கட்டி வைத்தது
போல இருக்கும்
கார்த்திகைப்
பூப்போன்ற
உன்னுடைய
விரல்களும் ;”

“தண்ணீருக்குள்
இருக்கும் தாமரை
எப்படி அழகாக
இருக்குமோ
அதைப்போல
அழகை வெளிச்சம்
போட்டுக் காட்டிக்
கொண்டிருக்கும்
தாமரை பூப்போன்ற
உன்னுடைய
கால்களும் ;”

“மல்லிகையை விட
மென்மையாக இருக்கும்
மிருதுவான
மல்லிகை பூப்போன்ற
உன்னுடைய
பாதங்களும் ;”

“சோலையில்
இனிய கீதம்
பாடித் திரிந்து
கொண்டிருந்த
குயிலானது
உன்னுடைய குரலின்
இனிமையைக்
கேட்டு விட்டு தான்
குயிலானது
பாடுவதையே
நிறுத்தி விட்டது  
என்று சொல்லும்
வகையில்-அழகிய
குயிலோசையையே
மிஞ்சும் உன்னுடைய
குரலும் ; “

“மின்னல் அடித்து
எத்தனை பேர்கள்
இறந்தார்கள் என்று
எனக்குத் தெரியாது  ;
ஆனால் நீ
ஒவ்வொரு முறை
சிரிக்கும் போதும்
எழுகின்ற மின்னல்
ஒளியில் ஒவ்வொரு
முறையும் நான்
இறந்து
கொண்டிருக்கிறேன்  ;”

“நடையில்
தன்னை மிஞ்சியவர்
இந்த உலகத்தில்
எவரும் இல்லை
என்று இறுமாப்பில்
நடந்து கொண்டிருந்த
அன்னமே வெட்கித்
தலை குனியும்
வகையில் இருக்கும்
அன்னத்தை
மிஞ்சிய உன்னுடைய
நடையும் ;”

“தங்கத்தை
உருக்கி வார்த்து 
செய்தது போல்
இருக்கும்
தங்கச் சிலையைப்
போன்ற உன்னுடைய
உருவமும்  ;”

“ஊர்வசி
ரம்பை
மேனகை
திலோத்தம்மை
போன்ற
தேவமாதர்களே
கண்டு
பொறாமைப்படும்
படியாக இருக்கும்
உன்னுடைய
அழகும் ;”

“என்னை
உனக்கு
அடிமையாக்கி
விட்டது “

“அடிமை
எப்படி இருப்பான் ;
எப்படி
கஷ்டப்படுவான் ;
எத்தகைய மன
உளைச்சலைக்
கொண்டிருப்பான் ;
என்பதெல்லாம்
எனக்குத்
தெரியாது - ஆனால்
ஒரு அடிமை
அடையும் அனைத்து
விதமான
உபாதைகளையும்
நான் அனுபவித்து
விட்டேன்
உன்னைக்
கண்டது முதல் ; “

“ஆமாம்! நான்
உன்னுடைய
அடிமையாகவே
மாறி விட்டேன் “

“இந்த அடிமையை
ஆளும் அழகு
ராணி நீ தான் “

திருநங்கை :
“நீங்கள் என்னுடைய
அடிமை என்று
சொல்லாதீர்கள்  ;
நீங்கள் எனக்கு
அடிமையும் இல்லை ;
நான் உங்களுக்கு
ராணியும் இல்லை ;”

“அடிமை என்பவர்
ஏவலுக்கு
கட்டுப்பட்டவர் ;
நீங்கள் என்னுடைய
ஏவலுக்கு
கட்டுப்பட்டவர் இல்லை ;
நீங்கள் என்னுடைய
அன்புக்கு
கட்டுப்பட்டவர் ;
உங்களை அன்பால்
ஆளும் ராணி
நான் என்று
சொல்லுங்கள்
அந்த வார்த்தை
எனக்கு இனிக்கும் ; “

அரவான்  :
“நான் தான்
கவிதையாக
பேசுகிறேன் என்றாய் ;
இப்போது நீயும்
கவிதையாக பேச
ஆரம்பித்து
விட்டாய் ;“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////