December 04, 2022

ஜபம்-பதிவு-912 மரணமற்ற அஸ்வத்தாமன்-44 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-912

மரணமற்ற

அஸ்வத்தாமன்-44

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

நான் சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணன் இல்லை

சாஸ்திரங்களுடன்

அஸ்திர வித்தைகளையும்

கற்றவன்

 

சாஸ்திரங்களை

மட்டுமே கற்ற

பிராமணணாக

மட்டுமே

இருந்திருந்தால்

பிராமணணுக்குரிய

வாழ்க்கையாக

மட்டுமே என்னுடைய

வாழ்க்கை இருந்திருக்கும்

அந்த வாழ்க்கையை

வாழ்ந்து முடித்து

இறந்திருப்பேன்

 

ஆனால் நான்

சாஸ்திரங்களை

மட்டுமல்ல

அஸ்திர வித்தைகளையும்

கற்றவனாக இருப்பவன்

அதனால்

அஸ்திர வித்தைகளைக்

கற்ற எனக்கு

மரணம் என்பது

இயல்பான ஒன்றாக

இருக்காது

போரில் தான்

என்னுடைய

மரணம் என்பது

இருக்கும்

 

அதுவும்

இன்னொருவரின்

கையால் தான்

இருக்கும்

 

அந்த மரணமும்

எனக்கு நல்ல

மரணமாக இருக்குமா

அல்லது

கொடுமையான

மரணமாக இருக்குமா

என்று தெரியவில்லை

 

ஆனால் ஒன்று

மட்டும் உறுதி

என்னுடைய

இறுதி வாழ்க்கையும்

இறுதி நாட்களும்

என்னுடைய மரணமும்

அஸ்தினாபுரத்தில்

தான் என்பது

நிச்சயிக்கப்பட்டு

விட்டது என்று

நினைக்கிறேன்

 

அதனால் தான்

காலம் என்னை

அஸ்தினாபுரம்

நோக்கி இழுக்கிறது

 

அஸ்வத்தாமன் :

தந்தையே

நீங்கள்

கவலைப்படாதீர்கள்

 

நான் அருகில்

இருக்கும் வரை

உங்களை யாராலும்

கொல்ல முடியாது

அதற்கு நான்

விட மாட்டேன்

 

நான் இல்லாத

நிலையில்

உங்களை

யாரேனும்

கொன்றால்

நான்

அவர்களை

சும்மா

விடமாட்டேன்

நான்

அவர்களைத்

துடிக்க துடிக்க

கொல்வேன்

 

உங்கள்

இறப்புக்கு

கண்டிப்பாக

நான் பழி

வாங்குவேன்

 

கிருபி :

என் அன்பு

மகனே

 

என்று கிருபி

அஸ்வத்தாமனை

அணைத்துக்

கொள்கிறாள்

 

கிருபி :

நம்முடைய ஏழ்மை

நீங்கி மகிழ்ச்சி

பொங்கும் என்ற

நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

துன்பங்கள் நீங்கி

இன்பம் பொங்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

மகனுக்கு நல்ல

கல்வி கிடைக்கும்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

உங்களுடைய

திறமை வெளிப்பட்டு

நீங்கள் உயர்ந்த

நிலை அடைவீர்கள்

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

நம்முடைய

வாழ்க்கையே

மாறப் போகிறது

என்ற நம்பிக்கையில்

அஸ்தினாபுரம்

செல்கிறோம்

 

துரோணர் :

உன்னுடைய

நம்பிக்கை வீண்

போகாது

 

வா செல்லலாம்

 

என்று துரோணர்

சொன்னவுடன்

 

துரோணர் கிருபி

அஸ்வத்தாமன்

அனைவரும்

அஸ்தினாபுரம்

நோக்கி

செல்லத்

தொடங்கினார்

 

அஸ்தினாபுரம்

நோக்கிய

அவர்களுடைய

பயணம்

தொடங்கியது

 

அஸ்வத்தாமன்

அஸ்தினாபுரம்

புறப்பட்டு விட்டான்

 

அன்பு நண்பனுக்கு

கிடைக்க வேண்டிய

அரியணையை

மீட்டுத் தருவதற்காக

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

ஜபம்-பதிவு-911 மரணமற்ற அஸ்வத்தாமன்-43 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-911

மரணமற்ற

அஸ்வத்தாமன்-43

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

உங்களுக்கு

கிடைத்திருப்பதை

சிபாரிசாக

எடுத்துக்

கொள்ளாமல்

வாய்ப்பாக

எடுத்துக்

கொண்டு

பயன்படுத்திக்

கொண்டால்

உங்களால்

சாதனை

மட்டுமல்ல

சரித்திரமே

படைக்க

முடியும்

 

துரோணர் :

உன்னைப்

போல்

ஒரு பெண்

மனைவியாக

கிடைத்தால்

எந்த ஒரு

ஆணும்

கண்டிப்பாக

சரித்திரம்

படைப்பான்

 

நீ சொன்னவைகளை

நான் கட்டளையாகவே

ஏற்றுக் கொள்கிறேன்

 

இளவரசர்களுக்கு

கல்வி கற்றுக்

கொடுக்க நான்

தயாராகி விட்டேன்

அஸ்தினாபுரம்

செல்வோம்

 

கிருபி :

எப்போது

செல்லலாம்

 

துரோணர் :

இந்தக் கணமே

செல்லப்

போகிறோம்

 

கிருபி :

இந்தக்

கணமே வா

 

துரோணர் :

ஆமாம்

இந்தக்

கணமே தான்

 

கிருபி :

நாம் கொண்டு

செல்வதற்கு

ஏற்ற வகையில்

எதையும் நான்

இன்னும் தயார்

செய்யவில்லையே

 

துரோணர் :

இங்கே என்ன

இருக்கிறது

கொண்டு

செல்வதற்கு

 

செல்வங்கள்

இருக்கிறதா

பொருட்கள்

இருக்கிறதா

 

சமையல் செய்ய

இரண்டு பாத்திரங்கள்

உடுத்திக் கொள்ள

இரண்டு உடைகள்

தானே இருக்கிறது

 

எடுத்துக் கொள்

கிளம்புவோம்

 

இருக்கும்

பொருட்கள்

அனைத்தையும்

எடுத்துக்கொண்டு

துரோணர் கிருபி

அஸ்வத்தாமன்

மூவரும்

வீட்டிற்கு

வெளியே

வந்து நின்றனர்

 

துரோணர் அந்த

வீட்டையே சிறிது

நேரம் வைத்த

கண் வாங்காமல்

பார்த்துக்

கொண்டே

இருந்தார்

 

கிருபி :

ஏன் இந்த

வீட்டையே

பார்த்துக்

கொண்டு

இருக்கிறீர்கள்

 

துரோணர் :

நான் எங்கேயோ

பிறந்தேன்

 

எங்கேயோ

வளர்ந்தேன்

 

எங்கேயோ

கல்வி கற்றேன்

 

எங்கேயோ

வாழ்ந்தேன்

 

இப்போது

எங்கேயோ

செல்கிறேன்

 

மனிதனின்

வாழ்க்கை

நிலை இல்லை

என்பதை

இப்போது

தான் நான்

உணர்கிறேன்

 

அஸ்தினாபுரம்

தான் நான்

வாழும் கடைசி

இடம் என்று

நினைக்கிறேன்

 

கிருபி :

ஏன் இவ்வாறு

நினைக்கிறீர்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

ஜபம்-பதிவு-910 மரணமற்ற அஸ்வத்தாமன்-42 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-910

மரணமற்ற

அஸ்வத்தாமன்-42

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அஸ்தினாபுரத்தின்

வேலையை ஏற்றுக்

கொண்டால்

நம்முடைய

கஷ்டம் தீரும்

என்பதற்காக

சொல்கிறாயா

 

கிருபி :

இல்லை

இல்லவே இல்லை

 

நம்முடைய

கஷ்டம் தீர

வேண்டும்

என்பதற்காக நான்

சொல்லவேயில்லை

 

அஸ்தினாபுரத்தில்

கொடுக்கப்படும்

வேலை தான்

வேலையா

நாட்டில் வேறு

வேலையே

இல்லையா

 

இந்த பரந்த

உலகத்தில்

உங்களுக்கு ஒரு

வேலை இல்லாமலா

போய் விடும்

 

நமக்கு கிடைக்கும்

வேலையை

வைத்துக் கொண்டு

நம்முடைய

கஷ்டத்தைத்

தீர்ப்பதற்கு

எவ்வளவோ

வழிகள்

இருக்கிறது

 

நான் உங்களை

இந்த வேலையை

ஏற்றுக் கொண்டு

செய்யச் சொன்னது

நம்முடைய கஷ்டம்

தீர வேண்டும்

என்பதற்காக அல்ல

 

உங்களுடைய திறமை

இந்த உலகத்திற்குத்

தெரிய வேண்டும்

என்பதற்காக

 

உங்களுடைய திறமை

வீணாகிப் போய்

விடக் கூடாது

என்பதற்காக

 

உங்களுடைய திறமை

நான்கு பேருக்கு

பயன்பட வேண்டும்

என்பதற்காக

 

நீங்கள் கற்றுக்

கொண்டவைகள்

உங்களுடன்

அழிந்து போய்

விடக்கூடாது

என்பதற்காக

 

நீங்கள் யார்

என்பது இந்த

உலகத்திற்குத்

தெரிய வேண்டும்

என்றால்

 

உங்களை

இந்த உலகம்

உணர்ந்து கொள்ள

வேண்டும் என்றால்

 

உங்கள் திறமையை

இந்த உலகம்

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்றால்

 

நீங்கள் எனக்காக

இந்த வேலையில்

சேரத் தான்

வேண்டும்

 

என்னுடைய

வேண்டுகோளை

நீங்கள் ஏற்றுக்

கொள்ளத் தான்

வேண்டும்

 

துரோணர் :

எனக்குத் திறமை

இருக்கிறது என்கிறாய்

 

ஆனால் உன்

அண்ணன்

சிபாரிசில்

அல்லவா

எனக்கு

வேலை

கிடைத்திருக்கிறது

 

கிருபி :

இந்த உலகத்தில்

பல பேர்

திறமை இருந்தும்

வாய்ப்பு

கிடைக்காததால்

தங்களுடைய

திறமையை

வெளிப்படுத்த

முடியாமலேயே

இந்த உலகத்தை

விட்டு

மறைந்து

விட்டனர்

மண்ணோடு

மண்ணாகிப்

போய் விட்டனர்

 

வாய்ப்பு கிடைத்தும்

அதைச் சரியாகப்

பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள்

வாழ்க்கையை

இழந்து விட்டனர்

 

ஒரு சில

பேர் தான்

தங்களுக்கு

கிடைத்த

வாய்ப்பை

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டு

சாதனை

படைத்திருக்கிறார்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

ஜபம்-பதிவு-909 மரணமற்ற அஸ்வத்தாமன்-41 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-909

மரணமற்ற

அஸ்வத்தாமன்-41

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

பரவாயில்லை முன்

எச்சரியாகத் தான்

இருக்கிறாய்

இருந்தாலும்

என்னால்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

கல்வி கற்றுக்

கொடுக்க

முடியுமா

என்று

தெரியவில்லை

 

அந்தத் தகுதி

எனக்கு

இருக்கிறதா

 

கிருபி :

சாஸ்திரங்களை

அக்னிவேஸ்யரிடம்

இருந்து கற்றிருக்கிறீர்கள்

 

அஸ்திர வித்தைகளை

பரசுராமரிடம் இருந்து

கற்றிருக்கிறீர்கள்

 

அஸ்திரம் சாஸ்திரம்

இரண்டையும்

கற்று திறமைப்

படைத்தவராக

இருக்கிறீர்கள்

 

அஸ்தினாபுரத்தின்

இளவரசர்களுக்கு

கல்வி கற்றுக்

கொடுப்பதற்கு

உங்களை விட்டால்

வேறு யாருக்கு

தகுதி இருக்கிறது

 

அஸ்தினாபுரத்தின்

இளவரசர்களுக்கு

குருவாக இருந்து

கல்வி கற்றுக்

கொடுப்பதற்கு

தகுதி வாய்ந்தவர்

நீங்கள் தான்

 

நீங்கள் இந்த

வேலையில்

சேர்ந்து

குருவாக

இருந்து

கல்வி கற்றுக்

கொடுத்தால்

வருங்காலத்தில்

அஸ்தினாபுரத்தின்

அசைக்க முடியாத

ஒரு சக்தியாக

நீங்கள் மாறுவதற்கு

வாய்ப்பு இருக்கிறது

 

பீஷ்மர் விதுரர்

கிருபர் என்ற

வரிசையில்

அவர்களுக்கு

இணையாக

நீங்களும் மக்கள்

மத்தியில்

பேசப்படுவீர்கள்

 

பீஷ்மர் விதுரர்

கிருபர் ஆகியோரை

இந்த உலகம்

எப்படி மதிக்கிறதோ

அப்படியே தான்

உங்களையும்

மதிக்கப் போகிறது

 

துரோணர் என்ற

பெயர்

வருங்காலத்தில்

அனைவரும்

உச்சரிக்கக் கூடிய

ஒரு பெயராகத்

தான் இருக்கப்

போகிறது

 

நீங்கள் இல்லாமல்

எந்த ஒரு விஷயமும்

நடக்காத அளவிற்கு

அஸ்தினாபுரத்தின்

அரசில் நீங்கள்

ஒரு முக்கிய

அங்கமாக

திகழத் தான்

போகிறீர்கள்

 

முக்கிய அரசியல்

முடிவுகளை

உங்களைக்

கேட்டுத் தான்

எடுக்கப்

போகிறார்கள்

 

அஸ்தினாபுரத்தின்

படைகளை

வழி நடத்தக்

கூடியவராகக் கூட

நீங்கள் இருக்கலாம்

 

ஏன் அஸ்தினாபுரத்தின்

தளபதியாகக் கூட

நீ ஆகலாம்

 

துரோணர் :

நீ அதிகமாக

கற்பனை செய்கிறாய்

 

அவ்வளவு தகுதிகள்

எனக்கு இருப்பதாகத்

தெரியவில்லை

 

கிருபி :

நான் கற்பனை

செய்யவில்லை

நடக்கப் போவதைச்

சொல்கிறேன்

 

உங்கள் திறமையை

அறிந்தவள் என்ற

முறையில்

சொல்கிறேன்

 

மனைவியை விட

கணவனின்

திறமையை

அறிந்தவர்

வேறு யார்

இருக்க முடியும்

 

நீங்கள் கண்டிப்பாக

இந்த வேலையை

ஏற்றுக் கொள்ளத்

தான் வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////