February 04, 2019

திருக்குறள்-பதிவு-97


                       திருக்குறள்-பதிவு-97 

“ ஜியார்டானோ புருனோ
சிறை வைக்கப்பட்டுள்ள
சிறைக் கதவின்
முன்னாலும் ;
அதைச் சுற்றி உள்ள
சிறைக் கதவின்
முன்னாலும் ;
ஒரு சில காவலர்கள்
மட்டுமே நின்று கொண்டு
காவல் காத்துக்
கொண்டு இருந்தனர் ; “,

“ புதியதாக
சிறைக்காவலர்கள் அங்கே
நுழைந்து ஏற்கனவே
அங்கே காவல் காத்துக்
கொண்டிருந்தவர்களை
அனுப்பி வைத்து விட்டு
அவர்கள் அனைவரும்
ஒவ்வொரு சிறைக்
கதவின் முன்னாலும்
ஒரு காவலர் வீதம்
நின்று கொண்டனர், “

“ ஒரு சில காவலர்கள்
மட்டுமே இருந்த
அந்த இடத்தில்
நிறைய எண்ணிக்கையில்
சிறைக்காவலர்கள்
பாதுகாப்புக்காக
நின்று கொண்டிருந்தனர் ;
சிறையில் பாதுகாவல்
பலப்படுத்தப்பட்டு இருந்தது ;”

“ சிறிது நேரம் கழித்து
போப்பின் பாதுகாவலர்கள்
உள்ளே நுழைந்தனர் ;
அவர்கள் அனைவரும்
உள்ளே நுழைந்தவுடன்
அங்கிருந்த சிறை
காவலர்கள் அனைவரும்
வெளியே சென்று விட்டனர் ;”

“ போப்பின் பாதுகாவலர்கள்
அனைவரும் ஒவ்வொரு
சிறைக்கதவின் முன்னாலும்
நின்று கொண்டனர் ;
அந்த இடம் போப்பின்
பாதுகாவலர்களுடைய
கட்டுப் பாட்டுக்கள் வந்தது ; “

“ ஜியார்டானோ புருனோ
இருக்கும் சிறை
அறையிலிருந்து
குறிப்பிட்ட எல்லை வரை
போப்பின் பாதுகாவலர்கள்
காவல் காத்துக் கொண்டு
நின்று கொண்டிருந்தனர். “

“ சித்திரவதை செய்யப்பட்ட
ஜியார்டானோ புருனோ
எழுந்து நிற்க முடியாமல்
அவருடைய சிறை
அறையில் உட்கார
முடியாமல் படுத்துக்
கொண்டு இருந்தார் ;
அவர் படுத்துக்
கொண்டிருந்த இடம்
தரையிலிருந்து
ஒன்றரை அடி உயரமும்
ஒரு ஆள் படுக்கும்
அளவிற்கு நீளம். அகலம்
கொண்டதாக இருந்தது;”

“யார் இவர் ? என்று
எவராலும் அடையாளம்
கண்டுபிடிக்க
முடியாத அளவிற்கு
கருப்பு அங்கியை
அணிந்து கொண்டு
போப் கிளமெண்ட் VIII
அவர்கள் நடந்து வர
பாதர் டிராகாக்லியோலோ
அவரைத் தொடர்ந்து
அவர் பின்னால் நடந்து
வந்து கொண்டிருந்தார்.”

“ போப் வருவதைப்
பார்த்த ஒரு பாதுகாவலர்
ஜியார்டானோ
புருனோவின்
சிறைக்கதவிற்கு முன்னால்
சென்று நின்று கொண்டார் “

“ போப் ஜியார்டானோ
புருனோவின்
சிறைக்கதவிற்கு
முன்னால் வந்து நின்றார் ;
சிறைக் கதவின்
வெளியில் இருந்து
அந்த கதவில் உள்ள
சிறிய துவாரத்தின் வழியாக
தன்னுடைய இடது
கண்ணால் ஜியார்டானோ
புருனோவைப் பார்த்தார் ; “


“ தன்னை யாரோ
பார்க்கிறார்கள் என்பதை
உணர்ந்து கொண்ட
ஜியார்டானோ புருனோ
சிறிதாக எழுந்து
உடலை சிறிது தூக்கி
பார்த்த போது - அந்த
சிறைக் கதவின்
துவாரத்தின் வழியாக
யாரோ ஒருவர்
தன்னை பார்க்கிறார்
என்பது ஜியார்டானோ
புருனோவிற்கு தெரிந்தது
ஆனால் அவர் யார்
என்று தெரியவில்லை
யார் நீங்கள்………………….?
என்றார். “

“ போப் கண்ணை
துவாரத்திலிருந்து
வெளியே
எடுத்துக் கொண்டார் ;
சிறிது நேரம் போப்
அமைதியாக இருந்தார் ;
மீண்டும் தன்னுடைய
வலது கண்ணால்
அந்த துவாரத்தின்
வழியாக இரண்டாவது
முறையாக ஜியார்டானோ
புருனோவைப்‘ பார்த்தார் ;”

“ இரண்டாவது முறையாக
ஜியார்டானோ புருனோ
யார் நீங்கள்……………………..?
என்று கேட்டார் “

“ கண்ணை கதவின்
துவாரத்தில் இருந்து
எடுத்த போப் கதவை
விட்டு சிறிது தள்ளி
நின்று கொண்டு
சிறிது நேரம் யோசித்தார்
பாதர் டிராகாக்லியோலோ
போப்பைப் பார்த்துக்
கொண்டே இருந்தார் “

“ போப் சிறையை விட்டு
வெளியே செல்ல
எத்தனித்த போது
ஜியார்டானோ புருனோ
மூன்றாவது முறையாக
யார் நீங்கள்…………..?
என்று கேட்ட ஒலி
போப்பின் காதில் விழுந்த
காரணத்தினால் சற்று
நின்றார் போப், “

“ பின்னர் சாதாரண
நிலைக்கு திரும்பிய
போப் அந்த சிறையிலிருந்து
வெளியே வந்தார் ;
அவர் பின்னாலேயே
பாதர் டிராகாக்லியோலோ
சென்று கொண்டு
இருந்தார் ; “

“ போப்பின் பாதுகாவலர்கள்
அனைவரும் சென்று
விட்ட பின் மீண்டும்
அந்த சிறையின்
காவலர்கள்
சிறையை பாதுகாக்கும்
பாதுகாப்பு பணியை
எடுத்துக் கொண்டு
சிறையை பாதுகாத்தனர்.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  04-02-2019
/////////////////////////////////////////////////////////////