August 11, 2022

ஜபம்-பதிவு-853 (சாவேயில்லாத சிகண்டி-187)

 ஜபம்-பதிவு-853

(சாவேயில்லாத

சிகண்டி-187)

 

பீஷ்மனை

அவமானப்படுத்தும்

வகையில்

எழுப்பப்படும்

எந்த ஒரு கோஷமும்

அந்த வீரனின்

வீரத்தை கொச்சைப்

படுத்துவது போல்

ஆகிவிடும்

அதை நான்

விரும்பவில்லை

 

பீஷ்மர் என்ற மிகச்

சிறந்த வீரனுக்கு

உரிய

மரியாதையைக்

கொடுங்கள்

 

கௌரவர்கள்

எழுப்பும்

பீஷ்மர் வாழ்க

என்ற கோஷத்தை

மட்டும் எழுப்புங்கள்

அது தான்

வீழ்த்தப்பட்டு

கிடக்கும் ஒரு

வீரனுக்கு

நாம் செய்யும்

மரியாதை

 

உலகத்திலேயே

சிறந்த வீரனை

ஈடு இணை

சொல்ல முடியாத

வீரனை

எக்காலத்திலும்

காண முடியாத

வீரனை

பெருமைப்படுத்துங்கள்

 

மாபெரும் சகாப்தத்தை

படைத்திருக்கும்

பீஷ்மர் என்ற அந்த

மாபெரும் மனிதனின்

மாபெரும் ஆற்றலை

மாபெரும் வீரத்தை

மாபெரும் தியாகத்தை

மாபெரும் திறமையை

மாபெரும் அறிவை

வாழ்த்துங்கள்

 

நான் சொல்வதை

உடனே

நிறைவேற்றுங்கள்
பரந்தாமா

 

ஒரு வீரனைப்

பெருமைப்படுத்துங்கள்

 

(கிருஷ்ணன்

ஒருவரை அழைத்து

பேசுகிறார்

சிறிது நேரத்தில்

பாண்டவர் படையில்

உள்ளவர்களும்

பீஷ்மர் வாழ்க என்ற

கோஷத்தை எழுப்பினர்

 

கௌரவர் படையில்

உள்ளவர்களும்

பாண்டவர் படையில்

உள்ளவர்களும்

எழுப்பிய

பீஷ்மர் வாழ்க

என்ற கோஷம்

அந்த குருக்ஷேத்திரம்

முழுவதும்

எதிரொலித்தது

 

அந்த கோஷத்தைக்

கேட்ட பிறகு

அந்த இடத்தை விட்டு

நகர்ந்து கொண்டிருந்த

சிகண்டியைப் பார்த்து

கிருஷ்ணன்

பேசத் தொடங்கினார்

 

கிருஷ்ணன் :

சிகண்டி

உன்னைப் புரிந்து

கொள்ளவே

என்னால்

முடியவில்லை

 

(சிகண்டி எதுவும்

சொல்லாமல்

நடந்து சென்று

கொண்டிருந்தான்

 

பீஷ்மர் வீழ்ந்து

கிடந்த இடத்தைச்

சுற்றி கௌரவர்கள்

பாண்டவர்கள்

அனைவரும்

கண்ணீர் வடித்தபடி

நின்று கொண்டு

இருந்தனர்

 

குருக்ஷேத்திரத்தில்

இரத்தக் கடலுக்கு

பதிலாக கண்ணீர்க்

கடலே ஓடியது

 

இந்தச் சிறப்பு

குருக்ஷேத்திரத்தில்

பீஷ்மருக்கு மட்டுமே

கிடைத்தது

 

அந்த இடத்தில்

இல்லாத ஒரே

ஒருவர் சிகண்டி

மட்டுமே

 

சிகண்டி

குருக்ஷேத்திரத்தை

விட்டு விலகி

சென்று விட்டான்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-852 (சாவேயில்லாத சிகண்டி-186)

 ஜபம்-பதிவு-852

(சாவேயில்லாத

சிகண்டி-186)

 

பீஷ்மர் :

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

ஒரு மாற்றுப்

பாலினத்தவரிடம்

வீழ்த்துப்பட்டு சாக

வேண்டுமா என்று

நினைத்து

வருத்தப்பட்டேன்

 

உன்னுடைய

வில்லிலிருந்து

புறப்பட்ட அம்பு

என்னுடைய நெஞ்சைத்

துளைக்கும் போதே

தெரிந்து கொண்டேன்

நீ ஒரு சிறந்த

வீரன் என்று

 

நீ பழி வாங்கும்

எண்ணத்துடனேயே

அலையாமல்

இருந்திருந்தால்

அர்ஜுனனை விட

சிறந்த வில் வீரன்

என்பதை

இந்த உலகம்

உன்னை ஏற்றுக்

கொண்டிருக்கும்

 

என்னை வீழ்த்துவது

ஒன்றே

உன்னுடைய

குறிக்கோளாகக் கொண்டு

அலைந்ததால்

உன்னுடைய

திறமையை

வீணாக்கி விட்டாய்

 

உன்னுடைய திறமையை

இந்த உலகத்திற்கு

வெளிப்படுத்தாமலேயே

இருந்து விட்டாய்

 

என்னை விட

போர்த்திறனில்

வல்லவனான

உன்னுடைய கையால்

இறப்பதை

நான் பெருமையாகவே

கருதுகிறேன்

 

அம்பை விடு

அம்பையே

அம்பை விடு

 

(தொடர்ந்து சரமாரியாக

அம்பை விட்டான்

சிகண்டி

பீஷ்மரின் உடலில்

இடைவெளியே

இல்லாத அளவிற்கு

தொடர்ச்சியாக

அம்புகள் பாய்ந்ததால்

அம்புகளால் துளைக்கப்பட்ட

உடலுடன்

கீழே விழுந்த

பீஷ்மரின் உடல்

பூமியைத் தொடவில்லை

 

பீஷ்மர்

அம்புப் படுக்கையில்

படுத்தவுடன்

அம்பு விடுவதை

நிறுத்தி விட்டான்

சிகண்டி

 

பீஷ்மர் அம்புப்

படுக்கையில் படுத்ததும்

அர்ஜுனன் தேரில்

இருந்து இறங்கி

பீஷ்மரைக் காண

சென்று விட்டான்

 

சிகண்டி பீஷ்மரை

வீழ்த்தி விட்டான்

என்ற செய்தியைக்

கேட்டதும்

உடனடியாக போர்

நிறுத்தப்பட்டது

கௌரவர் படை

வீரர்கள் அனைவரும்

பீஷ்மர் வாழ்க

என்ற கோஷத்தை

எழுப்பினர்

 

பாண்டவர் படை

வீரர்கள் பீஷ்மர்

அழிந்தார்

பீஷ்மரை வீழ்த்திய

சிகண்டி வாழ்க என்ற

கோஷத்தை எழுப்பிய

வண்ணம் இருந்தனர்

 

தேரிலிருந்து இறங்கிய

சிகண்டி நேராக

கிருஷ்ணனிடம்

சென்றான்)

 

சிகண்டி :

ஒரு வீரனை

ஒரு வீரனால் தான்

புரிந்து கொள்ள

முடியும்

என்னுடைய எதிரியாக

இருந்தாலும்

பீஷ்மன் மிகச்

சிறந்த வீரன்

யாராலும் வெல்ல

முடியாத வீரன்

 

அவருக்கு இணையாக

இதுவரை யாரும்

பிறந்ததும் இல்லை

இனி யாரும்

பிறக்கப் போவதும்

இல்லை

 

சிவனிடம் வரம்

பெற்றதால் தான்

என்னாலேயே பீஷ்மரை

வீழ்த்த முடிந்தது

இல்லை என்றால்

பீஷ்மரை என்னால்

நெருங்கி

இருக்கவே முடியாது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-851 (சாவேயில்லாத சிகண்டி-185)

 ஜபம்-பதிவு-851

(சாவேயில்லாத

சிகண்டி-185)

 

இந்த உலகத்தைப்

பற்றி தெரியாமல்

இருக்கிறாயே சிகண்டி

உன்னைப் பார்ப்பதற்கு

எனக்குப் பாவமாக

இருக்கிறது

 

அர்ஜுனன் :

சிகண்டி

விஷயம் தெரிந்து

அனைவரும்

நம்முடைய தேரை

சுற்றி வளைக்க

ஆரம்பித்து விட்டார்கள்

 

என்னால் நீண்ட

நேரம் அவர்களை

தடுத்து நிறுத்தி

வைக்க முடியாது

வந்த வேலையை

சீக்கிரம் முடி

 

சிகண்டி :

உலகத்தை நான்

புரிந்து கொள்ளவில்லை

என்றாய்

நீ தான் இந்த

உலகத்தைப் புரிந்து

கொள்வில்லை

 

கேட்டாயா பீஷ்மா

பார்த்தன் சொன்னதைக்

கேட்டாயா

 

பார்த்தனுக்குக் கூட

நீ வாழ்வது

பிடிக்கவில்லை

பார்த்தாயா

 

நீ தேவையில்லை

என்று உன்னை

தூக்கியெறிய

முடிவடுத்து விட்டார்கள்

என்பதைப் பார்த்தாயா

 

இனி நீ இந்த

உலகத்தில் வாழ்வதால்

ஒரு உபயோகமும்

இல்லை

என்பதைத் தெரிந்து

கொண்டாயா

 

உலகத்தைப் பற்றி

தெரிந்து கொண்டேன்

என்றாயே

அருகில் இருந்த

உறவுகளின்

மனதில் என்ன

இருக்கிறது என்பதைத்

தெரிந்து கொள்ளாமல்

விட்டு விட்டாயே

 

பீஷ்மர் :

தெரிந்து கொண்டேன்

உறவுகள் எப்படிப்பட்டது

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

ஆனால்

அதைக்

காலதாமதமாகத் தான்

தெரிந்து கொண்டேன்

இறப்பு என்னைத்

தொடும் நேரத்தில்

தான் தெரிந்து

கொண்டேன்

 

இப்போது அதனால்

ஒரு பயனும்

ஏற்படப்போவது

இல்லை

என்பதையும்

தெரிந்து கொண்டேன்

 

கௌரவர்கள் சார்பாக

துரியோதனன்

நீங்கள் ஏன்

இன்னும் உயிரோடு

இருக்கிறீர்கள் என்றான்

அந்த வலி

காயும் முன்னே

பாண்டவர்கள் சார்பாக

அர்ஜுனன் என்னை

கொல் என்கிறான்

 

தேவைப்படும் போது

பயன்படுத்திக்

கொள்ளும் உலகம்

தேவை முடிந்ததும்

தூக்கி எறிந்து விடும்

என்பதைப் புரிந்து

கொண்டேன்

 

இதற்கு மேல் நான்

வாழ்ந்து ஒரு

பயனும் இல்லை

நான் யாருக்கும்

பாராமாக இருக்கவும்

விரும்பவில்லை

 

பீஷ்மர் தயாராக

இருக்கிறான்

மரணத்தை வரவேற்கத்

தயாராக இருக்கிறான்

 

அம்பை விடு

சிகண்டி

அம்பையின் சபதத்தை

நிறைவேற்ற

அம்பை விடு சிகண்டி

அம்பை விடு

 

(கண்ணிமைக்கும்

நேரத்தில் வரிசையாக

அம்புகள்

சிகண்டியின்

வில்லிலிருந்து

புறப்பட்டு

பீஷ்மரின் நெஞ்சைத்

துளைத்தது

 

சிகண்டி என்று

பீஷ்மர் கத்தினார்

அம்பு விடுவதை

நிறுத்தினான் சிகண்டி)

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-850 (சாவேயில்லாத சிகண்டி-184)

 ஜபம்-பதிவு-850

(சாவேயில்லாத

சிகண்டி-184)

 

சிகண்டி :

உனக்கு தண்டனை

வழங்கவே

வந்திருக்கிறேன்

நீ செய்த

குற்றத்திற்கான

தண்டனையை

உனக்கு

வழங்குவதற்காகவே

வந்திருக்கிறேன்

குற்றவாளியான

உனக்கு தண்டனையை

வழங்குவதற்கு

வந்திருக்கிறேன்

 

ஒரு பெண்ணின்

வாழ்க்கை

பாதிக்கப்படுவதற்குக்

காரணமான

குற்றத்தைச்

செய்த குற்றவாளி நீ

 

நீ செய்த

குற்றத்திற்கான

தண்டனையைத் தான்

உனக்கு வழங்க

வந்திருக்கிறேன்

 

உனக்கு

தண்டனையை

வழங்க வந்தவன்

நான் என் கையில்

தான் ஆயுதம்

இருக்க வேண்டும்

 

தண்டனையைப்

பெறப் போகிறவன்  நீ

அதனால் நீ

நிராயுதபாணியாகத் தான்

இருக்க வேண்டும்

ஆயுதம்

ஏந்தாமல் தான்

இருக்க வேண்டும்

அமைதியாகத் தான்

இருக்க வேண்டும்

நான் வழங்கும்

தண்டனையை

ஏற்றுக்

கொள்வதற்குத்

தயாராகத் தான்

இருக்க வேண்டும்

 

நாளைய உலகம்

பீஷ்மன் என்ற

குற்றவாளிக்கு

தண்டனை

வழங்கினான் சிகண்டி

என்று தான் சொல்ல

வேண்டுமே தவிர

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாய்

நின்ற பீஷ்மனை

வீழ்த்தினான்

சிகண்டி என்று

சொல்லக் கூடாது

 

பீஷ்மர் :

உலகம் நீ சொன்னபடி

தான் சொல்லும்

என்று நினைக்கிறாயா

உலகம் அப்படி

சொல்லவே சொல்லாது

 

ஆயுதம் இல்லாமல்

நிராயுதபாணியாய்

நின்ற பீஷ்மனை

வீழ்த்தினான் சிகண்டி

என்று தான்

உலகம் சொல்லும்

 

உலகத்தைப் பற்றி

புரிந்து கொள்ளாமல்

பேசிக் கொண்டு

இருக்கிறாய்

உலகத்தைப் பற்றி

புரிந்து கொண்டு

இருந்தால் நீ

இவ்வாறு

பேசிக் கொண்டு

இருக்க மாட்டாய்

 

ஜென்மத்தைக்

கடந்து வந்தும்

இன்னும்

இந்த மனிதர்களின்

மனநிலையைப் புரிந்து

கொள்ளாமல் இருக்கிறாயே

 

இந்த மனிதர்கள்

தேவைப்பட்டால் தூக்கி

நிறுத்துவார்கள்

தேவையில்லை என்றால்

கழுத்தை அறுப்பார்கள்

 

சுயநலத்துக்காக

எதையும்

செய்யத் துணிவார்கள்

 

சொந்தமில்லாததை

சொந்தம் கொண்டாட

நினைப்பார்கள்

 

தான் வாழ்வதற்காக

பிறரை அழிக்கவும்

தயங்க மாட்டார்கள்

 

பாவம் என்று

தெரிந்தும் தெரிந்தே

பாவத்தை செய்வார்கள்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்களுக்கு

இந்த உலகத்தில்

வாழ்வதற்கு

இடமே கிடையாது

 

நல்லவர்கள் இந்த

உலகத்தில்

வாழவே முடியாது

நல்லவர் போல்

நடிப்பவர்கள் மட்டுமே

இந்த உலகத்தில்

வாழ முடியும்

என்ற நிலையை

உருவாக்கி வைத்து

இருக்கிறார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////