November 18, 2019

பரம்பொருள்-பதிவு-86


             பரம்பொருள்-பதிவு-86

அர்ஜுனன்:
"ஒரு பெண் தான்
விரும்பும் காதலனிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துகிறாள்
என்றால் அந்தப் பெண்
ஆணவக்காரி
என்றோ?
அடங்காப் பிடாரி
என்றோ?
பிறரை மதிக்கத்
தெரியாதவள்
என்றோ?
கற்பற்றவள் என்றோ?
பொருள் அல்ல"

"அந்தப் பெண்
இந்தச் சமுதாயத்தின்
கோட்பாடுகளுக்கு
பயப்படாமல்
தன்னுடைய
உணர்வுகளை
வெளிப்படுத்தத்
தெரிந்தவள்
என்று பொருள் ;
இந்தச் சமுதாயத்தின்
ஏச்சுக்களுக்கும்,
பேச்சுக்களுக்கும் ,
கவலைப்படாமல்
தன்னுடைய
வாழ்க்கையை
வாழத் தெரிந்தவள்
என்று பொருள் ;
வாழ்க்கையில்
எந்த கஷ்டம்
வந்தாலும் அதை
எதிர்த்து போராடி
வெற்றி பெறத்
தெரிந்தவள்
என்று பொருள் ;
சாதி, மதம்
சமுதாயக்
கோட்பாடுகளுக்குள்
தன்னை அடக்கி
வைத்துக் கொள்ளாமல்
வாழ்ந்து
கொண்டிருப்பவள்
என்று பொருள் ;
ஒரு பெண்
இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்து காட்டிக்
கொண்டிருப்பவள்
என்று பொருள் ;"

"நீங்கள் என்னை
காதலிக்கிறேன் என்று
சொன்ன போது
ஒரு பெண்ணான
இவள் என்னிடம்
காதலைச் சொல்ல
என்ன தைரியம்
என்று  நான்
உங்களை தவறாக
நினைக்கவில்லை !
உங்கள் குணத்தைப்
பற்றி நான் இழிவாக
நினைக்கவில்லை !
உங்கள் கற்பைப்
பற்றியோ நீங்கள்
வாழும் வாழ்க்கையைப்
பற்றியோ நான்
தவறாக நினைக்கவில்லை.!"

"வீரம் நிறைந்த ஒரு
பெண்ணாகத் தான்
உங்களை நான்
பார்த்தேன் ;
பெண்களுக்கு எதிரான
சமுதாய
கோட்பாடுகளைத்
தகர்த்தெறிந்து
தனக்கென்று ஒரு
புதிய பாதையை
வகுத்துக் கொண்டு
வாழும் ஒரு
புரட்சிப் பெண்ணாகத்
தான் உங்களைப்
பார்த்தேன் ;
ஆண்டாண்டு
காலமாக பெண்களை
அடிமைப்படுத்தி
வைத்திருக்கும்
தவறான
சட்டதிட்டங்களை
உடைத்தெறிந்து
வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு
புதுமைப்பெண்ணாகத்
தான் உங்களைப்
பார்த்தேன் ;"

"நான் உங்களை
இழிவான நிலையில்
வைத்தோ,
தாழ்வான நிலையில்
வைத்தோ,
தவறான கண்ணோட்டத்தில்
வைத்தோ,
உங்களைப்
பார்க்கவில்லை
என்பதை முதலில்
தெரிந்து கொள்ளுங்கள்"

"ஏனென்றால் அர்ஜுனன்
பெண்களை மதித்து
அவர்களை மரியாதையுடன்
நடத்தி வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;
பெண்களின் உணர்வுகளை
உணர்ந்து அந்த
உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;
பெண்களை கடவுள்
நிலையில் வைத்து
அவர்களை வணங்கி
வாழ்ந்து
கொண்டிருப்பவன் ;"

"இச்சமுதாயம்
காதல் பற்றிய
கோட்பாட்டில்
பெண்களை அடிமை
நிலையில் வைத்து
இருக்கிறது என்று
பேசத் தெரிந்த நீங்கள்
காதலின் அடிப்படை
இலக்கணத்தையே
புரிந்து கொள்ளாமல்
இருக்கிறீர்கள்
என்பது தான்
வேதனைக்குரிய
விஷயம்"

உலூபி:
"எதை காதலின்
அடிப்படை
இலக்கணம்
என்கிறீர்கள்?"

---------- இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------18-11-2019
//////////////////////////////////////////