August 15, 2012

இயேசுகிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்பதிவு50



    இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்திற்-பதிவு-50
               
      “”பதிவு ஐம்பதை விரித்துச் சொல்ல    
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :  

விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து , அவளை நடுவே நிறுத்தி :
                                                -------யோவான் - 8 : 3

போகதரே , இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
                                                -----யோவான் - 8 : 4

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே , நீர்  என்ன சொல்லுகிறீர்  என்றார்கள் .
                                                -----யோவான் - 8 : 5

அவர் மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து , விரலினால் தரையிலே எழுதினார்  . “
                                                -----யோவான் - 8 : 6

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில் , அவர்  நிமிர்ந்து பார்த்து : உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி , “
                                                -----யோவான் - 8 : 7

அவர்  மறுபடியும் குனிந்து தரையிலே எழுதினார்  . “
                                                ----யோவான் - 8 : 8

அவர்கள் அதைக் கேட்டு , தங்கள் மனச் சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு , பெரியோர்  முதல் சிறியோர்  வரைக்கும் ஒவ்வொரு வராய்ப்போய் விட்டார்கள் . இயேசு தனித்திருந்தார்  , அந்த ஸ்திரீ நடுவே நின்றாள் .
                                                -----யோவான் - 8 : 9

"இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல் : ஸ்திரீயே உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 10

அதற்கு அவள் : இல்லை , ஆண்டவரே , என்றாள் .இயேசு அவளை நோக்கி : நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை ; நீ போ , இனி பாவஞ் செய்யாதே என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 11

இக்கட்டான சூழ்நிலை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும்
ஏதாவது ஒரு காலகட்டத்தில் , ஏதாவது ஒரு நிலையில்,
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வந்து விட்டு சென்றிருக்கும்.

வாழ்க்கையில் ஒரு முறையோ , இரு முறையோ ,பல முறையோ
இக்கட்டான சூழ்நிலை வந்து ,
வாழ்க்கையை பதம் பார்த்து சென்றிருக்கலாம் அல்லது
வாழ்க்கையை பதப்படுத்தி சென்றிருக்கலாம் .

வாழ்க்கையை உயர்வான நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கலாம் அல்லது
தாழ்வான நிலைக்கு தள்ளி விட்டிருக்கலாம் .

அரியணையில் அமர்த்தி இருக்கலாம் அல்லது
புதைச் சேற்றில் புதைத்து இருக்கலாம் .

வெற்றியின் இன்பங்களை சுவைத்து இருக்கலாம் அல்லது
தோல்வியின் துன்பச் சுமைகளை சுமந்து இருக்கலாம் .

சிரிப்புகளில் விளையாடி இருக்கலாம் அல்லது
கண்ணீரில் கரைந்து இருக்கலாம் .

முன்னேற்றத்தின் முகவரியைப் பார்த்து இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியுற்றதின் காயங்களை கண்டு இருக்கலாம் .

சுகபோகத்தின் இன்ப நாளங்களை வருடி இருக்கலாம் அல்லது
ஏழ்மையின் தாக்கத்தினை புரிந்து இருக்கலாம் .

நினைத்தது கிடைத்ததில் மகிழ்ந்திருக்கலாம் அல்லது
நினைத்தது கிடைக்காததில் கவலையுற்றிருக்கலாம் .

மதியினால் வென்று விட்டேன் என்று பெருமை பட்டிருக்கலாம் அல்லது
விதி என்னை வென்று விட்டது என்று மனம் சோர்ந்து விட்டிருக்கலாம் .

காலத்தை நான் வென்றுவிட்டேன்
என்று மகிழ்ச்சி கொண்டிருக்கலாம் அல்லது
காலம் என்னை வென்றுவிட்டது என்று வருத்தப்பட்டிருக்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கப்படும் முடிவு - நம்
வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவாக இருக்கலாம் அல்லது
வாழ்க்கையை முடிக்கும் தீர்மானமாக இருக்கலாம்.

மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கலாம்  அல்லது
மனதைக் கொன்று வருத்தப்பட வைப்பதாக இருக்கலாம்

விண்ணைத் தொடுவதாக இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியைத் தருவதாக இருக்கலாம் .

ஏற்றத்தை தருவதாக இருக்கலாம் அல்லது
ஏமாற்றத்தை கொடுப்பதாக இருக்கலாம் .

இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்கும் நிலை என்பது
இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை .
அத்தகைய நிலை வாழ்க்கையில் எட்டி பார்க்கும் ;
உரசிப் பார்க்கும் ; தாக்கிப் பார்க்கும் ; தள்ளிப் பார்க்கும் ;
தயங்காமல் , தள்ளாடாமல் ,
சிந்தனை தடுமாறாமல் ,
உயர்ந்த நோக்கத்துடன் ,
மாறா குறிக்கோளுடன் ,
சாயா இருதயத்துடன் ,
தள்ளாடா மனதுடன் ,
தயங்காத உள்ளத்துடன் ,
அறிவின் வழிநின்று ,
தொலைநோக்கு பார்வையுடன் ,
துல்லியமான கணிப்புடன் ,
காலத்தை கருத்தில் கொண்டு ,
எதிர்காலத்தை நினைவில் கொண்டு ,
அனுபவத்தை மனதில் கொண்டு ,
அறிவுரைகளை சிந்தனையில் கொண்டு ,
அலசிப் பார்த்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு ,
வேற்றுமைகளை அறிந்து தீர்க்கமான எண்ணத்துடன் ,
இக்கட்டான சூழ்நிலையில் ,
இத்தகைய தன்மைகளைக் கொண்டு முடிவெடுத்தவன் சிறப்படைவான்.
எடுக்காதவன் விரக்தியடைவான் .
இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை
பலமுறை , பல நிலைகளில் , பல்வேறுபட்ட உருவங்களில்
இயேசுவின் வாழ்க்கையில் கொண்டு வந்து
அவரை குற்றவாளியாக்கிட துடித்தது ஒரு கூட்டம்
அவரை மாய்த்து விட நினைத்தது மமதையர்  நெஞ்சம் .

வாழ்க்கையில் இன்பங்களைத் தேடியோ
வசந்தங்களை நாடியோ தன் மானத்தை விற்கவில்லை.
தான் பெற்ற அன்பை பாதுகாக்கவும் ,
தன்னுடன் பிணைக்கப்பட்ட பாசத்தை பாதுகாக்கவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்  கொடுப்பதற்காகவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்பிப்பதற்காகவும் ,
உறவுகளை வாழ்விப்பதற்காகவும் ,
உண்மைகளை உறங்க வைத்து ,
சத்தியத்தை சாய வைத்து ,
சமுதாயம் தந்த களங்கத்தை ஏற்று ,
ஏளனப் பேச்சுக்களையும் ,
ஆணவ செயல்களையும் ,
அடிமைத்தன நெஞ்சங்களையும் ,
வெறிகொண்ட வேங்கையின் தாகத்தையும் ,
தணிக்கும் வகையில் நடந்து ,
ஓரமாகச் சென்றாலும் ஓடி வந்து முட்டும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு ,
கண்ணீர்  கடலில் நீந்தி
கவலை தோய்ந்த இதயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இனம்

காலத்தால் கைவிடப்பட்டு சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டவள் ;
இயற்கை தந்த பிழை  ; காலம் செய்த களங்கம் ;
விலை மகளிர்  இனம் .

இத்தகைய விலைமகள் ஒருத்தியை
நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தினர்.
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநுhல் வல்லுநரும்,
பரிசேயரும் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி ,
போதகரே இப்பெண் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டாள் .
இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது
மோசஸ் நமக்கு கொடுத்த சட்டம்
நீர் என்ன சொல்கிறீர்கள் என்றனர் .
அவர்  மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டு பிடிக்கும் படி
அவரை சோதிக்க இப்படிக் கேட்டனர்.
இயேசுவை இக்கட்டான சூழ்நிலையில் தள்ள வேண்டும்
அவர்  மேல் குற்றம் கண்டுபிடிக்க
அவர்  மேல் குற்றம் சுமத்த
அவரை குற்றவாளியாக்க இவ்வாறு கேட்டனர் .

மோசஸ் கூறியது போல் செய்யுங்கள் என்று இயேசு கூறினால்
இயேசு மீது குற்றம் சாட்ட முடியும்
இயேசுவை களங்கப்படுத்த முடியும்
இயேசுவை அவமானப் படுத்த முடியும்
உங்களது கருணை எங்கே போயிற்று ?
உங்களது மன்னித்தல் என்னவாயிற்று ?
அன்பு எங்கே சென்று விட்டது ?
என்று கேட்க முடியும் .

மோசஸ் கூறியது நியாயமல்ல என்று கூறினால் ,
நீங்கள் மோசஸை அழிக்கவும்,
எங்கள் மதத்தைக் குலைக்கவும் ,
களங்கப் படுத்தவும் வந்திருக்கிறீர்கள்
ஆனால் மக்களிடம் அழிப்பதற்காக நான் வரவில்லை
நிறைவு செய்யவே வந்துள்ளேன் என்று கூறி வருகிறீர்கள் .
அது எப்படி நிறைவு செய்ய வந்திருந்தால்
மோசஸை பின்பற்றுங்கள் என்று எப்படி கூற முடியும் என்று
ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இயேசுவை குற்றவாளியாக்க
பொறியில் சிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரல்களால்
எழுதிக் கொண்டிருந்தார்.
எதிராளி கோபமாக இருக்கும் போது
நம்மை பகையாளியாக நினைப்பவன்
நம்மை எதிரியாக பாவிப்பவன்
நம்மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை வீசினால்
நாமும் எதிர்  வார்த்தை பேசக் கூடாது
அமைதியாக இருக்க வேண்டும்.

ஒருவர்  கோபமாக இருக்கும் போது
அவர் கண்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது
அதனால் தான் இயேசு
தன்னை குற்றவாளியாக்க கோபத்துடன் துடிப்பவர்களை
நேருக்கு நேர்  பார்க்காமல்
தரையில் குனிந்து எழுதத் தொடங்கினார்.
ஆனால் நீர்  என்ன சொல்கிறீர்
நீர்  என்ன கூறுகிறீர்  என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்டதால்
அவர்  தலை நிமிர்ந்து
உங்களில் பாவம் செய்யாதவர்  யாரோ
அவர்  அவள் மீது முதலில் கல் எறியட்டும் என்றார்
மீண்டும் தலை குனிந்தார்.

பாவமில்லாதவர்களால் மட்டுமே தண்டனை வழங்க முடியும்
பாவம் செய்யாதவர்கள் மட்டுமே தண்டனை வழங்க
தகுதியில்லாதவர்  என்கிறார் .
பாவம் செய்யாதவர்  யார் ?
பாவம் செய்யாவிட்டாலும்
பாவம் செய்யாவாவது நினைத்திருப்பர்
பாவம் செய்ய நினைப்பதவும்
கிட்டத்தட்ட பாவம் செய்வதற்கு சமம் .

அதனால் தான் இயேசு உங்களில் பாவமற்றவராக
யார்  இருக்கிறாரோ ?
அவர்  முதலில் அவள் மீது கல் எறியட்டும் என்றார்.
மீண்டும் அவர்  தலைகுனிந்தார் .
ஏனெனில் ஜனங்களை பார்த்துக் கொண்டேயிருந்தால்
கோபத்தால் கட்டுண்டவர்கள்
அறிவு தடுமாறி அவள் மீது கோபத்தில் கல் எறிந்து விடக்கூடும்
என்ற காரணத்திற்காக அவர்  தலை குனிந்தார்.

அதைக் கேட்ட அவர்கள் தங்கள் மனசாட்சியால் தண்டிக்கப்பட்டு
முதியவர்கள் முதலில் மறைந்து விட்டனர்.
ஏனெனில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து வருபவர்களாதலால்
மிக அதிகமாக பாவம் செய்திருப்பர்.
இளைஞர்கள் அந்த அளவிற்கு பாவிகள் அல்லர்.
ஏனெனில் அவர்கள் பாவம் செய்ய போதுமான நேரம் இல்லை.
அதனால் தான் முதியவர்கள் முதலிலேயே சென்று விட்டனர்.
இறுதியில் சிறியோர்  வரை ஒவ்வொருவராக சென்று விட்டனர் .
இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அனைவரும் போய் விட்டதைக் கண்டார்.

இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அம்மாதைத் தவிர வேறு யாரும் இல்லை
அவர்  அவளிடம் பெண்ணே உன் மீது
குற்றம் சுமத்தியவர்கள் எங்கே என கேட்டார்
 அதற்கு அவள் யாருமேயில்லை என்றாள் .

கடந்த காலம் கடந்துவிட்டது சென்றது சென்றதுதான் .
அதனை மறந்துவிடு .
இந்தச் சூழ்நிலையில் இருந்து ,
இந்த நிகழ்வில் இருந்து ,
இந்த செயலில் இருந்து ,
சில பாடங்களைக் கற்றுக் கொள் .
சில அனுபவங்களைக் கற்றுக் கொள் .

அவை தவறுகள் என்று நினைத்தால்
அதே தவறுகளை எதிர்காலத்திலும் செய்து கொண்டிராதே .
நான் உன் மீது குற்றஞ் சொல்லவில்லை.
தவறுகள் ஏதேனும் செய்ததாக நீ உணர்ந்தால்
அது உன்னைப் பொறுத்தது அதை மீண்டும் செய்யாதே
நடந்ததை மறந்து விடு .

ஏதேனும் தவறு செய்வதாக நீ உணர்ந்தால்
அதை மீண்டும் செய்யாதே.
உன்னை நானும் நிந்திக்க மாட்டேன்.
நான் உன் மீது குற்றஞ்சொல்லவில்லை.
தவறு என்று நீ உணர்ந்தால் அந்த தவறை செய்யாதே
அது போதும் என்றார்.
அம்மாதிற்கு மன மாற்றத்தை உண்டாக்கினார்.

கடந்தது கடந்தாதக இருக்கட்டும்
சென்றது சென்றதே நீ புதுமை பெற்று விட்டாய் .
எல்லாமே நல்லது தான் நீ மன்னிக்கப்பட்டாய் என்றார்.

கடந்த காலத்தில் நீ செய்த தவறால்
நிகழ் காலத்தில் நீ பாதிக்கப்பட்டால்
அத்தகைய தவறை
தவறென நீ உணர்ந்தால்
அதை உணரக்கூடிய பக்குவம் உனக்கு வந்து விட்டால்
மீண்டும் அந்த தவறை செய்யாதே
என்கிறார்  இயேசு .



அழுகணிச்சித்தர்  :

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லைமிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என்கண்ணம்மா
                பொருளெனக்குத் தாராயோ
                                -----அழுகணிச் சித்தர்---பெரியஞானக் கோவை----

பாவத்தை உண்டு பண்ணக் கூடிய ,
பாவத்தை ஏற்படுத்தக் கூடிய ,
பாவத்தை விளைவிக்கக் கூடிய ,
பாவத்தை தரக்கூடிய ,
செய்களைச் செய்வதால் மட்டும் பாவம் உண்டாகாது .
பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
செயல்களை சிந்திப்பதாலோ
மனதில் நினைப்பதாலோ
எண்ணத்தால் எண்ணுவதாலோ
கூட பாவம் உண்டாகும் .

செயல்களைச் செய்வதால் உண்டாகும் பாவமும்
எந்தச் செயல்களைச் செய்வதால் பாவம் உண்டாகுமோ?
அந்தச் செயல்களை நினைப்பதாலும் உண்டாகும் பாவமும் சமம் .
செயல்களை வெளிப்படையாகச் செய்யும் போது
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட செயலாக இருந்தால்
சட்டதிட்டதிற்கு உட்பட்ட செயலாக இல்லாமல் இருந்தால்
சமுதாய ஒழுக்க நெறிக்குள் உட்படாததாக இருந்தால்
சமுதாயத்தால் செய்யக்கூடாதவை செய்யத் தகாதவை என்று
ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருந்தால்
சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்குள் கட்டுப்பட்டு
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

பாவத்தை தரக்கூடிய செயலை
துன்பத்தை அளிக்கக்கூடிய செயலை
மனவருத்தத்தை உண்டாக்கக்கூடிய செயலை
செய்வதன் மூலம் சட்டத்தின் மூலம்
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

தவறான செயலை செயல்படுத்துவதே
பாவமாக கொள்ளப்பட்டு தண்டனை தரப்படுகிறது .
சமுதாயமும் செயலின் மூலம் உண்டாக்கக்கூடிய பாவத்திற்கு
தான் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறது .
பாவம் என்பது செயலின் மூலம் விளைவது
அதற்குரிய தண்டனையை நீதிபதி கொடுப்பார்  என்று
சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கிறது .

பாவம் தரக்கூடிய செயலை ஒருவன் நினைக்கும் போதே
அவன் பாவம் செய்தவனாகிறான்.
நினைப்பின் அடிப்படையில் உண்டாகும்
பாவத்திற்கு தண்டனை இல்லை என்று
மனிதன் நினைத்து கொள்கிறான் .
எனவே தவறானவைகளை மனதில் நினைக்கிறான் .
மனதில் நினைப்பவைகளை யாரும் பார்க்கமுடியாது என்று
எண்ணம் கொண்டு தவறாக எண்ணங்களை எண்ணுகிறான் .

மனதில் பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
தவறானவைகளை எண்ணினால்
யாரும் பார்க்க மாட்டார்கள்
யாரும் அறிய மாட்டார்கள்
யாரும் தண்டனை கொடுக்க மாட்டார்கள் என்று
மனிதன் தவறாக நினைத்துக் கொள்கிறான் .

மனிதன் மனதில் நினைப்பவைகளை
இறைவன் வாசித்துக் கொண்டிருக்கிறான்.
காலம் வரும் போது , நேரம் கனியும் போது ,
பாவத்தை உண்டு பண்ணக் கூடிய தவறான எண்ணங்களுக்கு
இறைவன் தண்டனை தருகிறான் .
செயலுக்கு உரிய தண்டனையை நீதிபதி கொடுத்தால்
தவறான எண்ணங்களை நினைப்பவர்களுக்கு
ஆண்டவன் தண்டனை தருகிறான் .

தண்டனைகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டோ
இறைவன் நியதிக்கு உட்பட்டோ
தண்டனை கொடுக்கப்பட்டாலும்
இவைகள் கர்மவினையின் தாக்குதலுக்கு ஏற்ப
கர்ம வினையின் பாதிப்புக்கேற்ப
கர்மவினையின் ஆளுகைக்கு உட்பட்டே
நடக்கும் செயல்கள் ஆகும் .

கர்மவினைகள் எழக்கூடாது என்றால்
மாயை வலைக்குள் சிக்கக்கூடாது.
மாயை வலைக்குள் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால்
சிற்றின்ப சகதியில் மாட்டக்கூடாது .
சிற்றின்ப சகதியில் மாட்டக் கூடாது என்றால்
பேராசையில் மூழ்கி திளைக்கக் கூடாது .
பேராசையே புறத் தேவைகளை நிறைவு செய்ய
ஒருவரிடம் போய் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது .

புல்லர்  என்றால் சிறுமைக்குணம் கொண்டவர்  என்று பொருள் .
நல்லவைகளை எண்ணாதவர்
நல்லவைகளை செய்யாதவர்
என்றும் பொருள் கொள்ளலாம் .
அத்தகைய சிறுமைக் குணம் கொண்ட
புல்லரிடம் போய் , புல்லர்  பலரிடம் போய் ,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
புறத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருளுக்காக
அன்றாடத் தேவையை முடித்து வைக்கும் பொருளுக்காக
சிற்றின்பத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
அடிமையாக கையேந்தி
செயற்கையாக முகத்தில் சிரிப்பை வரவழைத்து
பல்லைக் காட்டி விழிகள் அடிமைத் தனத்தால் பிதுங்க
கண்களை அலை பாய விடுகிறேன் .

அழியக்கூடிய நித்தியமில்லாத பொருளுக்காக
ஒன்றும் இல்லாதவர்களிடம்
சிறுமைக்குணம் கொண்டோரிடம்
கயமைத் தனம் கொண்டோரிடம்
நல்லெண்ணம் இல்லாதவரிடம் சென்று நிற்கிறேன் .
புறத் தேவைகளை நிறைவு செய்ய அழியக்கூடிய பொருளுக்காக
சிறுமைக்குணம் கொண்டோரிடம் சென்று நிற்காமல்,
அவரிடம் கையேந்தி நிற்காமல் , பல்லைக் காட்டாமல்,
விழிகளை அலை பாயவிடாமல்
நித்தியமாய் அழிவில்லாமல் இருக்கும்
என்றும் நித்தியமாய் இருக்கும்
எல்லையில்லாத காலத்தை கடந்த , உருவமில்லாத ,
குணமில்லாத , நித்தியமான பொருளை
எனக்கு கிடைக்கும் படிச் செய்து
தான் அவனாக மாறும் நிலையை எனக்கு அளித்து
இணையில்லாததுடன் இணையும் அருளை எனக்குக் கொடுத்து
பேரின்ப பெருவாயிலைத் திறந்து
முக்தி என்னும் நிலையை எனக்கு
தந்தருள்வாய் என்கிறார் .

சிற்றின்பத் தேவைகள் சுவை தரக் கூடியவை
இன்பம் அளிக்கக் கூடியவை
மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை
நிரந்தரமானவை என்ற எண்ணம் கொண்டு
மாயை வலையில் சிக்கி
தகாத செயல்கள் செய்து
பாவத்தை உருவாக்கி கர்மவினையில் மாட்டிக் கொண்டேன் .

அழியக்கூடிய அநித்தியத்தின் மேல் பற்றுள்ளவன்
அதனை  தேடி ஓடுபவன்
அதனை நாடி அலைபவன்
கர்மவினையில் மாட்டிக் கொள்வான் .
பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்கிக் கொள்வான்
என்பதை உணர்ந்து கொண்டேன் .

கடந்த காலத்தில் நான் செய்த தவறுகளை உணர்ந்துகொண்டேன்
புத்தி தெளிந்தேன் ; அறிவு விளக்கம் பெற்றேன் ;
சிந்தனை திறக்கப் பெற்றேன் ;
அநித்தியத்தை நாடி ஓடுபவன் அநித்தியமானவன் ;
நித்தியத்தை நாடி ஓடி நித்தியத்தை அடைபவன் ;
நித்தியமாவான் என்பதை உணர்ந்து கொண்டேன் .
தவறுகளை திருத்திக் கொண்டேன் ;
செயல்களை மாற்றிக் கொண்டேன் ;
ஒழுக்கங்களை நெறிப்படுத்திக் கொண்டேன்;
அநித்தியத் தன்மை கொண்ட பொருட்களின் பின் ஓடாமல்
அதை அளிக்கக்கூடியவர்களிடம் சொல்லாமல்
சிறுமைக்குணம் கொண்டோர்கள் முன் நில்லாமல்
பல்லைக் காட்டாமல் விழிகளை பிதுக்காமல்
நித்தியத்தையும்
நித்தியத்தை அடையும் வழிமுறைகளையும் எனக்கு தந்து
நித்தியத்தை அடைந்து இறைவனுடன் கலக்கும்
பெறும் பேற்றினை எனக்கு அளித்து
நித்திய வாழ்வை எனக்குத் தர வேண்டும்
என்கிறார்  அழுகணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர் :

இயேசு ,
கடந்தகாலத்தில் சிற்றின்பத் தேவைக்காக
செய்த செயல் தவறு என்று உணர்ந்து கொண்டாயானால்
இனிவரும் காலங்களில் அத்தகைய தவறை செய்யாதே .
தவறை உணர்ந்து , நல்ல வழியில் செல்
என்கிறார் .

அவ்வாறே ,
அழுகணிச் சித்தரும் ,
கடந்த காலத்தில் சிற்றின்பத் தேவைகள்
அநித்தியமானவை என்பதை உணராமல்
தவறான வழியைப் பின்பற்றி அதன் வழி சென்றேன் .
தவறை உணர்ந்து கொண்ட எனக்கு
பேரின்பத்தை காட்டி நித்தியத்தை
எனக்கு அளிக்க வேண்டும்
நான் செய்த தவறை உணர்ந்து கொண்டேன்
நல்ல வழியை எனக்குக் காட்டுவாயாக என்கிறார்.

         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                     போற்றினேன் பதிவுஐம்பது  ந்தான்முற்றே “”