May 31, 2019

பரம்பொருள்-பதிவு-19


                       பரம்பொருள்-பதிவு-19

4.மிருத்ஸங்கிரஹணம்

“மிருத்ஸங்கிரஹணம்
என்ற செயலும்  ;
அங்குரார்ப்பணம்
என்ற செயலும் ;
ஒன்றொன்றுக்கொன்று
தொடர்புடையவை ;”

“மிருத்ஸங்கிரஹணம்
என்றால்
மண் எடுத்தல்
என்று பொருள் “

“அங்குரார்ப்பணம்
என்றால்
முளையிடுதல்
என்று பொருள்”

“மிருத்ஸங்கிரஹணம்
அங்குரார்ப்பணம்
என்றால்
மண்ணை எடுத்து
எடுத்த மண்ணில்
முளையிடுவது
என்று பொருள்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான
மண்ணை எடுப்பதற்குப்
பெயர் தான்
மிருத்ஸங்கிரஹணம்”

“அங்குரார்ப்பணத்துக்குத்
தேவையான மண்ணை
எடுப்பதற்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
குறிப்பிட்ட திக்கு
சரியான இலட்சணம்
பொருந்திய
இடத்திலிருந்து
அதாவது எந்தவிதமான
குறைபாடும்
இல்லாத இடத்திலிருந்து
மண்ணை
வெட்டியெடுக்க
வேண்டும்”

“மண்ணை வெட்டி
எடுப்பதற்கு முன்னர்
பூமாதேவியையும்
பூமா தேவிக்கு
அதிபர்களான பிரமன்,
அஷ்டதிக்குப்
பாலகர்கள்
ஆகியோரை வழிபட்டுப்
பூமியை வெட்ட
வேண்டிய
அவசியத்துக்காக
மன்னிப்பு
கேட்டுக் கொண்டு
அவர்களிடம்
பூமியை வெட்டி
மண்ணை
எடுப்பதற்கான
உத்திரவினைப் பெற்ற
பின்னரே
பூமியை வெட்டி
மண்ணை தோண்டி
எடுக்க வேண்டும்”

“பூமியை வெட்டிய
தோஷம் நீங்குவதற்காக
வெட்டி எடுக்கப்பட்ட
பள்ளத்தில்
ஏழு கடலால்
அபிஷேகம்
செய்ய வேண்டும்”

“ஏழு கடல்
அபிஷேகமாவது
பால், தயிர்,
நெய், கருப்பஞ்சாறு,
தேன், உவர்நீர், நன்னீர்
ஆகியவை ஆகும்”

“உவர் நீருக்குப்
பதிலாக இளநீரை
உபயோகிப்பார்கள்
இவைகளை
வெட்டிய பள்ளத்தில்
மந்திரக்கிரியா
பூர்வமாக விட
வேண்டும்”

“மண் வெட்டியினுடைய
அளவு அதனுடைய
பிடி அது
எந்த மரத்தால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும் ;
மண்ணை ஏந்தும்
பாத்திரம் - இவற்றின்
இலட்சணம் ;
இவை யாவும்
சாத்திரங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றன ;

5.அங்குரார்ப்பணம்:
“அங்குரார்ப்பணம்
என்பதற்கு முளையிடுதல்
என்பது பொருளாகும்”

“எடுத்த மண்ணை
உரிய மந்திரத்தோடு
பாலிகைகளில் இட்டு
நவதானியங்களைத்
தெளித்து
முளைப்பாலிகை
அமைக்க வேண்டும்”

“இது செய்ய இருக்கும்
செயல்கள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்கிறது
என்பதை அறிவதற்காக
ஏற்படுத்தப்பட்டது”

“மண்ணில் முளையானது
பசுமையாக ஓங்கி
வளர்ந்தால்
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்தும் சீராக
நடந்தன என்று
பொருள் கொள்ள
வேண்டும்”

“அப்படி
நடக்கவில்லையாயின்
மந்திரதோஷம்
ஏற்பட்டுள்ளது என்றும் ;
செயல்களில் குறைபாடு
ஏற்பட்டுள்ளது என்றும் ;
ஆசௌசம் (தீட்டு)
ஏற்பட்டுள்ளது என்றும் ;
உணர்ந்து
அதற்குத் தகுந்தவாறு
பிராயச் சித்தங்களைச்
செய்ய வேண்டும் ;
என்பது
ஆகம விதியாகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 31-05-2019
/////////////////////////////////////////////////////