July 13, 2019

பரம்பொருள்-பதிவு-40


                   பரம்பொருள்-பதிவு-40

" காண்போரை கவர்ந்திழுத்து
மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும்
அழகுப் பதுமையாகவும் !"

" கண்டோரும் அள்ளி எடுத்து
அணைத்து முத்தமிட்டு
மகிழத் தூண்டும்
வசீகரப் புன்னகையுடனும் !"

"தங்கக் குழம்பை
வார்த்தெடுத்து பிரம்மாவால்
செதுக்கப்பட்ட
தங்கச் சிலையாகவும் !"

" புல்லாங்குழல் வழியாக
செல்லும் காற்றினால்
எழும் மெல்லிசையைப்
போன்ற குரலுடனும் !"

"சூரிய ஒளி பட்டு
மின்னும் வைரத்தைப்
போன்ற பொலிவுடனும் !"

விளங்கிய அக்குழந்தைக்கு
சிவநேசர் " பூம்பாவை "
என்று பெயரிட்டார்.

"ஆமாம் !
அந்த பெண்ணின் பெயர்
தான் பூம்பாவை !
அந்த பாவையின் பெயர்
தான் பூம்பாவை ! "

 "பாவை என்றால்
பெண் என்று பொருள் ;
பூம்பாவை என்றால்
பூவில் உள்ள அனைத்து
தன்மைகளையும் தன்னுள்
கொண்ட பெண் என்று பொருள் "

" பூம்பாவை
அழகு ததும்பும்
மங்கையாக ;
நற்குணங்களைக் கொண்ட
நங்கையாக ;
செல்வத்தில் மிதக்கும்
தாரகையாக ;
வளரத் தொடங்கினாள் "

" பூம்பாவைக்கு ஏழு வயது
நிரம்பியபோது - அவள்
பெண்ணுக்குரிய அனைத்து
குணநலன்களையும் கொண்டு
ஏழு வயதில் பெண்கள்
விளையாடும் அனைத்து
விளையாட்டுக்களையும்
விளையாடினாள் ; "

பூம்பாவை
" ன்பில் இவளை மிஞ்ச
யாரும் இல்லை என்று
சொல்லத்தக்க விதத்தில்
சிறந்து விளங்கினாள் ! "

"ளுமை செய்பவர்களும்
அடங்கி ஒடுங்கி பணிந்து
சேவகம் செய்யும் வகையில்
ஆளுமையில் உயர்ந்து
விளங்கினாள் ! "

" ல்லாதவருக்கு
மனமுவந்து வழங்குவதில்
கருணையின்  வடிவமாக
விளங்கினாள் ! "

" வதில் வரலாறு படைத்து
கடையேழு
வள்ளல்களுக்கெல்லாம்
முதன்மையானவளாக
விளங்கினாள் ! "

லகம் முழுவதும்
தேடினாலும் காணக்கிடைக்காத
அமைதியின் திருவுருவமாக
விளங்கினாள் !”

ரே வியக்கும் வகையில்
அருங்குணங்கள் பலவற்றைக்
கொண்டவளாக விளங்கினாள் !”

" ழுத்துக்களால் எழுதி
விளக்க முடியாத பண்பைப்
பெற்று பணிவுடன் விளங்கினாள் ! "

" ழைகளின் துயர்
துடைக்க ஓடுவதில்
முன்னிலையில் நிற்பதில்
தலைசிறந்து விளங்கினாள் ! "

" ந்து நிலங்களிலும்
தேடினாலும் கண்டுபிடிக்க
முடியாத அறிவில்
சிறந்தவளாக விளங்கினாள் ! "

" ருவரோடும் ஒப்பிட்டுக்
காட்ட முடியாத உயர்ந்த
ஒழுக்கங்களைக்
கொண்டவளாக விளங்கினாள் ! "

" ம்கார நாதத்தின்
திருஉருவமாகப் பிறந்து அதன்
விளக்கமாக விளங்கினாள் ! "

" ஷதமாக இருந்து
அனைவருடைய மனநோயை
விலக்கிய தெய்வத்தாயாக
விளங்கினாள் ! "

" பூம்பாவையின்
அருங்குணங்களையும்
அவளுடைய - அருமை
பெருமைகளையும் உணர்ந்த
சிவநேசர் பூம்பாவையை
மணந்து கொள்பவன்
என்னுடைய அளவிட
முடியாத அனைத்து
செல்வத்திற்கும்
உரியவனாவான்
என்று கூறினார் "

" இந்தக் காலகட்டத்தில்
திருஞான சம்பந்தர்
பாண்டியனுடைய வெப்பு
நோயை நீக்கியதையும் ;
அதனைத் தொடர்ந்து
திருஞான சம்பந்தர்
சமணர்களை அனல் வாதில்
வென்றதையும் ;
அதனைத் தொடர்ந்து
திருஞான சம்பந்தர்
சமணர்களை புனல் வாதில்
வென்றதையும் ;
அதனைத் தொடர்ந்து
திருஞான சம்பந்தரிடம்
தோற்றுப்போன 8000
சமணர்களை பாண்டிய
மன்னன் கட்டளைப்படி
கழுவில் ஏற்றியதையும் ;
அதனைத் தொடர்ந்து
மதுரையில் உள்ள அனைத்து
மக்களும் திருநீறு அணிந்து
புனிதர்கள் ஆனார்கள்
என்பதையும் ;
அதனைத் தொடர்ந்து
சமண மதத்தின் இருள் நீங்கி
சைவ மதத்தின் ஞான ஒளி
எங்கும் பரவியது என்பதையும் ;
அங்கிருந்து வந்த பலர்
சிவநேசரிடம் எடுத்து
உரைத்தார்கள் ;"

" திருஞானசம்பந்தரின்
தெய்வீகத் தன்மையைக்
கேட்டுத் தெரிந்து கொண்ட
சிவநேசர் அளவற்ற மகிழ்ச்சி
கொண்டு இச்செய்தியை
கொண்டு வந்த அனைவருக்கும்
பொன்னும் பொருளும்
வாரி வழங்கினார் !
திருஞான சம்பந்தர் இருக்கும்
திசை நோக்கி தொழுது
மண் மீது விழுந்து எழுந்து
என்னுடைய சுற்றத்தார்
உறவினர்கள் நண்பர்கள்
மட்டுமல்ல இந்த ஊரில்
உள்ள அனைவரும் நான்
சொல்வதைக் கேட்டுக்
கொள்ளுங்கள் ! - தெய்வத்
திருமேனி கொண்ட
திருஞான சம்பந்தருக்கு
என்னையும் ;
என்னுடைய பொருளையும் ;
என்னுடைய மகளையும் ;
தந்தேன் என்றார் "

" பூம்பாவை
திருஞான சம்பந்தரை
மண முடிப்பதற்காகவே
வளர்க்கப்பட்டாள் ;
திருஞான சம்பந்தருக்காகவே
வளர்ந்தாள் ;"

" திருஞான சம்பந்தரின் மேல்
கொண்ட அன்பினாலும்
அளவற்ற பக்தியினாலும்
மரியாதையினாலும் அவர்
நினைவாகவே வாழ்ந்தார்
சிவநேசர் "

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 13-07-2019
//////////////////////////////////////////////////////////