December 30, 2019

பரம்பொருள்-ஜபம்-107


            பரம்பொருள்-ஜபம்-107

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்கள்
யார் என்பதையும் ?
அவர்களுடைய பெயர்கள்
என்ன என்பதையும் ?
நானே உனக்குச்
சொல்கிறேன் பீமா ! "

பீமன் :
"சொல் கிருஷ்ணா சொல்
யார்? என்று சொல்
கிருஷ்ணா சொல் "

கிருஷ்ணன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய தகுதி
படைத்தவர்கள் - இந்த
ஈரேழுலோகத்திலும்
மொத்தமே மூன்று பேர்கள்
மட்டுமே உள்ளனர் பீமா ! "

பீமன் :
"மொத்தமே மூன்று
பேர்கள் மட்டுமே
உள்ளனரா கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஆமாம் பீமா !
ஆமாம்"

பீமன் :
"யார் அந்த மூன்று
பேர்கள் கிருஷ்ணா"

கிருஷ்ணன் :
"ஒன்று அர்ஜுனன்
இரண்டாவது அரவான்"

பீமன் :
மூன்றாவது யார்
கிருஷ்ணா ?"

கிருஷ்ணன் :
"வேறு யார்
நானே தான் பீமா !
களப்பலி கொடுப்பதற்கு
தகுதி உடைய மூவரில்
நானும் ஒருவன் என்பதை
நினைவில் கொள் பீமா! "

பீமன் :
"கிருஷ்ணா!  உன்னையுமா
களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய
பட்டியலில் சேர்த்து
இருக்கிறார்கள் - என்ன
கொடுமை இது கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"ஏன் என்னை
சேர்க்கக் கூடாதா பீமா!"

"நீ நினைப்பது போல்
களப்பலியாக யாரை
வேண்டுமானாலும் ;
விருப்பப்படுபவர்களை
எல்லாம் தேர்ந்தெடுத்து
களப்பலி கொடுத்து
விட முடியாது ; "

"களப்பலி
கொடுப்பதற்கென்றே
வரையறுக்கப்பட்ட
விதிமுறைகள் இருக்கின்றன ;
அதற்கென்று சில
தகுதிகள் இருக்கின்றன;
அத்தகைய தகுதிகளைக்
கொண்டவர்கள் யார்
இருக்கிறார்கள்
என்பதைக் கண்டறிந்து
அத்தகையவர்களை
மட்டுமே கண்டு பிடித்து
களப்பலி கொடுத்தால்
மட்டுமே போரில்
வெற்றி பெற முடியும் "

பீமன் :
"எத்தகைய தகுதிகளைப்
பெற்றிருக்க வேண்டும்
கிருஷ்ணா ! "

கிருஷ்ணன் :
"32 லட்சணங்கள்
கொண்டவராக
இருக்க வேண்டும் :
எதிர்ரோமம் படைத்தவராக
இருக்க வேண்டும் ;
இந்த இரண்டு
விதிகளையும் பூர்த்தி
செய்பவர்கள் – நான் ;
அர்ஜுனன் ; அரவான் ;
ஆகிய மூன்று பேர்கள்
மட்டுமே! - ஆகவே
தான் களப்பலியாக
கொடுக்கக்கூடியவர்கள்
பட்டியலில் எங்கள்
மூன்று பெயரையும்
சேர்த்து இருக்கிறார்கள் ;"

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாள்
எந்த நாள் என்பதையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
உடையவர்கள் யார்
என்பதையும் ;
சகாதேவன்
குறித்துக் கொடுத்து 
துரியோதனன் அதை
தெரிந்து கொண்டு
சென்று விட்டான் ; "

"களப்பலி கொடுப்பதற்கு
ஏற்ற நாளில்
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியுடையவரை 
துரியோதனன்
களப்பலியாக கொடுத்து
விட்டான் என்றால் ;
துரியோதனனை
யாராலும் வெற்றி
கொள்ளவே முடியாது ;
துரியோதனனை எதிர்த்து
யார் போரிட்டாலும்
அவர்கள் அனைவரும்
தோல்வியையே தழுவுவர்
என்பது உண்மை ; "

"தர்மா இனி நாம்
போர் செய்வதால் ஒரு
பயனும் இல்லை "

"இப்போதே போரின் முடிவு
தெரிந்து விட்டது - ஆமாம்
துரியோதனன் தான் போரில்
வெற்றி பெறப்போகிறான்
என்பது தெரிந்து விட்டது"

"ஆகவே பாண்டவர்களாகிய
நீங்கள் தோற்பது என்பது
உறுதியாகி விட்டது"

"இனிமேல் போர் செய்ய
வேண்டிய அவசியமே இல்லை ;
வெற்றி என்பது
ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு
விட்ட பிறகு - நாம்
போர் செய்வதால்
ஒரு பயனும் இல்லை."

"ஆகவே நீங்கள் அனைவரும்
போர் செய்யாமல்
மீண்டும் காட்டுக்கே
செல்வதே மேல்
போர் செய்து
ஏன் தோல்வியை
தழுவப் போகிறீர்கள் ".

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 30-12-2019
//////////////////////////////////////////