May 27, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-13

நோய்த் தொற்று
ஏற்பட்ட கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்டாத
கிராமத்தை
வேப்பிலையின் மூலம்
பாதுகாத்தாலும்
அதையும் மீறி
சில சமயங்களில்
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தவர்களுக்கு
நோய்த் தொற்று
ஏற்பட்ட
வாய்ப்பு இருக்கிறது

அவ்வாறு
நோய்த் தொற்று
ஏற்பட்டால்
அந்த நோயைக்
குணப்படுத்துவதற்கும்
அந்த
நோய்த் தொற்று
மற்றவருக்கும்
பரவாமல் தடுப்பதற்கும்
மருந்துகளைப்
பயன்படுத்தாமல்
உணவின் மூலம்
நோயைக் குணப்படுத்தும்
முறையைக்
கையாண்டனர்
நம் முன்னோர்கள்

மருத்துவ குணம்
கொண்ட
உணவுகளில்
நோய் எதிர்ப்பு சக்தி
கொண்டவையாகவும்
நோயைக்
குணப்படுத்தக்
கூடியவையாகவும்
உள்ளவைகளில்
மிக முக்கியமாகக்
கருதப்படும்
மூன்று உணவுப்
பொருள்களை
தேர்ந்தெடுத்து
பயன்படுத்தினர்
அவைகளில்

ஒன்று கூழ்
இரண்டு கருவாட்டுக் குழம்பு
மூன்று முருங்கைக் கீரை

கூழ்
கேழ்வரகு, அரிசி,
உப்பு
ஆகியவற்றைக்
கொண்டு தயார்
செய்யப்படும்
கேழ்வரகு கூழ்
உடம்புக்கு
குளிர்ச்சியைத் தரும்
கேழ்வரகில் கால்சியம்
சத்து அதிகமாக
உள்ளதால்
எலும்புகளுக்கு
நல்லது
உடம்புக்கு வலுவைத்
தரும்

நோய் வந்தால்
உடல் பலவீனப்படும்
உடல் தளர்ச்சி
அடையும்
எழுந்து நடக்க
முடியாது

இதனை
சரிசெய்தவற்காக
இந்த கேழ்வரகு
கூழை தயார் செய்தனர்

மேலும்
கூழில்
தேவைப்படும்
மூலிகைப் பொருட்கள்
சிலவற்றைக் கலந்து
கூழ் தயார்
செய்தனர்

கூழை
பெரிய பெரிய  
அண்டாக்களில்
தயார் செய்தனர்
அந்த ஊரில்
எவ்வளவு
மக்கள் இருக்கிறார்களோ
அவ்வளவு
மக்களும்
சாப்பிடுவதற்கு
ஏற்றார்போல்
கூழ் தயார்
செய்தனர்

ஊரின் மையப்பகுதியிலோ
கல்யாண மண்டபத்திலோ
கோயிலிலோ
கூழை தயார் செய்தனர்

கூழுடன்
மேலும்
இரண்டு
பொருட்களையும்
அதாவது
கருவாட்டுக்
குழம்பையும்
முருங்கைக்கீரையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டும்
மருத்துவ குணம்
கொண்டவை
அதனால்
கூழுடன்
இவைகள்
இரண்டையும்
தயார் செய்தனர்

இவைகள்
இரண்டிலும் உள்ள
மருத்து குணங்கள்
எவை என
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////