January 13, 2019

திருக்குறள்-பதிவு-85


                       திருக்குறள்-பதிவு-85

ஜியார்டானோ புருனோ :
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கிறிஸ்தவ
மதத்தில் உள்ள
நம்பிக்கைகளுக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

இப்படித்தான்
தீர்ப்பு வழங்க
வேண்டும்
என்று முன்கூட்டியே
தீர்மானித்து விட்டு ,
என்னை
குற்றவாளி என்று
நிரூபிப்பதற்காக
விசாரணை
என்ற பெயரில்
சாட்சியங்களை
உருவாக்க
முயற்சி செய்து
கொண்டிருப்பது
தெரிகிறது. “

விசாரணைக் குழு :
Father Bruno………!
போதும்
நிறுத்துங்கள்……………………!
போதும்
நிறுத்துங்கள்………………………!
போதும்………………………..
நி……றுத்துங்……………கள்………!!

ஜியார்டானோ புருனோ :
“ நான்
எழுதிய புத்தகத்தில்
உள்ள எந்த
ஒரு பக்கத்தையும்
கிழிக்காமல்
முழுமையான
புத்தகத்தை
முழுமையாக
கொண்டு வாருங்கள் “

“ தேவாலயத்தில்
(Church)
உள்ள அனைத்து
அறிஞர்களையும்
(Scholar)
அழைத்து வாருங்கள் “

“ நான் எழுதிய
புத்தகத்தில் உள்ள
அனைத்து
கருத்துக்களைப் பற்றியும்
அவர்கள்
ஒவ்வொருவரிடமும்
விவாதிக்க
நான் தயாராக
இருக்கிறேன் “

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோ கேட்ட
கேள்விக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக்
குழுவில் உள்ள
அனைவரும்
மௌனமாக
இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக
இருந்தது)

ஜியார்டானோ புருனோ :
“ அமைதியாக
இருந்த
விசாரணைக்குழு
அதிகாரிகளைப்
பார்த்து,
ஜியார்டானோ
புருனோ கேட்டார்
உங்களுக்கு
உண்மையில்
என்ன தான்
வேண்டும்………?
என்னிடம்
நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள்…………!

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக் குழுவில்
உள்ள அனைவரும்
மௌனமாக இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக இருந்தது)
///////////////////////////////////////////////////

“ஜியார்டானோ
புருனோவின்
மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களின்
மேல்
ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல்
விசாரணையானது
முடிவடைந்தது “

“ முதல் விசாரணை
முடிவு அடைந்ததும்
ஜியார்டானோ
புருனோ
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டு
சிறையில்
அடைக்கப்பட்டார் “

---------  இன்னும் வரும்
---------  13-01-2019
/////////////////////////////////////////////////////////////