September 07, 2018

திருக்குறள்-பதிவு-15


                        திருக்குறள்-பதிவு-15

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாக நடத்தப்பட்ட
கூட்டங்களும்,
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராக நடத்தப்பட்ட
போராட்டங்களும்,
உச்ச நிலையை
அடைந்தது.

உலகத்தையே
புரட்டிப்போட்ட
டார்வினின் புத்தகம்
வெறும் 230 பக்கங்கள்
மட்டுமே கொண்டது
இந்தப் புத்தகம்
ஏற்படுத்திய
சூறாவளிக் காற்றில்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
தவறா அல்லது
சரியா என்று
நினைக்கும்
அளவிற்கு வந்து
விட்டது

பைபிளில் சொல்லப்பட்ட
கடவுளின் வார்த்தைகள்
சர்ச்சைக்கு உள்ளாவதையும்,
கேள்விக் குறியாவதையும்,
விரும்பாத கிறிஸ்தவ
பாதிரியார்கள்
டார்வின் புத்தகத்தை
கடுமையாக எதிர்த்தனர்.

கடவுளால்
உருவாக்கப்பட்டவன்
தான் மனிதன்
அத்தகைய மனிதன்
குரங்கிலிருந்து
வரவே முடியாது
அதற்கு வாய்ப்பே
இல்லை
இதனைப் பற்றி
பொது மேடையில்
விவாதிக்கத்
தயாரா என்று
கிறிஸ்தவ பாதிரியார்கள்
டார்வின்
ஆதரவாளர்களுக்கு
சவால் விட்டனர்

கிறிஸ்தவ
பாதிரியார்களின்
சவாலை ஏற்றுக்
கொண்டனர்
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
டார்வினின் புத்தகத்தைப்
பற்றி விவாதம் நடத்த
இரண்டு அணியினரும்
1860-ஆம் வருடம்
ஜுன் மாதக் கடைசியில்
ஒரு நாளைத்
தேர்ந்தெடுத்தனர்

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தில்
பிரிட்டிஷ் சங்கத்தின்
சார்பில்
இந்த உலகப்
 பிரசித்திபெற்ற
விவாதம் நடக்கவிருந்தது

ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தைச் சுற்றி
 பல மைல்
தொலைவு வரை
மனிதக் கூட்டமாக
இருந்தது
எங்கு நோக்கிலும்
மனிதத் தலைகளாகவே
காட்சியளித்தது
கடவுள் மனிதனைப்
படைத்தாரா அல்லது
மனிதன் குரங்கிலிருந்து
வந்தானா
என்பதைத் தெரிந்து
கொள்ளும் ஆவலில்
பல்லாயிரக்கணக்கான
மக்கள் ஒரே
நேரத்தில் திரண்டதால்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தின் விழா
மன்றத்தில் விவாதத்தை
நடத்த முடியாமல்
போனது

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்திற்கு
மாற்றாக
உடனடியாக
ஆக்ஸ்போர்டு லைப்ரரி
மியூசியம் இருந்த
பெரிய கட்டிடம்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அந்த கட்டிடத்தில்
விவாதத்தை
நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது

மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே
நிரம்பி வழிந்தது
வெளிநாடுகளில் இருந்து
வந்திருந்த விஞ்ஞானிகள்
அனைவரும் நடைபெறப்
போகும் நிகழ்வுகளை
காண்பதற்காக
காத்திருந்தனர்

மனிதன் என்பவன்
ஆண்டவனால் படைக்கப்
பட்டவன் என்று
வாதிடுவதற்கு,
மதத்துறையில்
சிறந்து விளங்குபவரும்,
மக்களிடையே
பிரபலமானவருமான
சோபிசாம் என்று
அழைக்கப்படும்
பிஷப் வில்பர்போர்ஸ்
அமர்ந்திருந்தார்

குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்ற
டார்வின் கோட்பாட்டை
ஆதரித்து பேசுவதற்காக
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்திற்கு
அடிப்படை காரணமான
சார்லஸ் டார்வின்
இந்த விவாத
மண்டபத்திற்கு வரவில்லை
அவர் தன்னுடைய
வீட்டில் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

டார்வினின் ஆதரவாளர்கள்
டார்வினை சந்தித்து
தாங்கள் விவாதத்தில்
கலந்து கொள்ள
விவாத மண்டபத்திற்கு
வர வேண்டும்
என்று கேட்டுக் கொண்டதற்கு
சார்லஸ் டார்வின்
சொன்ன வார்த்தைகள்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது

--------- இன்னும் வரும்
--------- 07-09-2018
/////////////////////////////////////