June 12, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-23


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-23

சொல்லின் செல்வர்
என்றால்
இடம், காலம்,
சூழ்நிலை அறிந்து பேசுபவர்
சொல்லின் செல்வர்
என அழைக்கப்படுவார்

இராமாயணத்தில்
அனுமார்
சொல்லின் செல்வர்
என அழைக்கப்படுகிறார்
இராமாயணத்தில்
அனுமார் பல இடங்களில்
பேசும் பேச்சை வைத்து
அவரை நாம் ஏன்
சொல்லின் செல்வர்
என்று அழைக்கிறோம்
என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்

சீதை எங்கிருக்கிறார்
என்பதை கண்டறியச்
சென்ற அனுமார்
சீதை இருக்கும்
இடம் அறிந்து
அவரைக் கண்டு
அவரிடம் பேசி விட்டு
அந்த செய்தியை
இராமரிடம் தெரிவிக்க
வருகிறார்

இராமரும்
சீதையைக் கண்டறியச்
சென்ற அனுமார்
சீதையைக் கண்டாரா
பேசினாரா
சீதை எந்த நிலையில்
இருக்கிறார் என்பதைத்
தெரிந்து கொள்ள
ஆவலாய் காத்துக்
கொண்டு இருக்கிறார்

அனுமார் இராமரிடம்
சீதையைப் பார்த்த
செய்தியைச் சொல்ல
அவர் முன் நிற்கிறார்
இராமர் அனுமார்
சீதையைப் பார்த்தாரா
பார்க்கவில்லையா என
தவிப்புடன் இருக்கிறார்
இருவரும் நேருக்கு
நேராக சந்தித்துக்
கொள்கின்றனர்

அப்பொழுது அனுமார்
சொல்கிறார்
“””””கண்டனென்”””””
என்று அனுமார்
ஒரே ஒரு வார்த்தை தான்
சொன்னார்
சீதையைக் கண்டனென்
என்று கூட சொல்லவில்லை
கண்டனென் என்று
மட்டுமே சொல்லி
சற்று நிறுத்தினார்
அதில் அனைத்தும்
அடங்கி இருக்கிறது

அனுமார் எதற்காக
சென்றார்
சீதையைக் கண்டறிவதற்கு
கண்டனென் என்ற ஒரு
வார்த்தையில்
சீதையைப் பார்த்தேன் என்று
சொல்லி விட்டார்

இராமருக்கு திருப்தி
அதன் பிறகு தான்
சீதை எப்படி
இருக்கிறார் என்பதை
அனுமார் கீழ்க்கண்ட
வாக்கியத்தின் மூலம்
சொல்கிறார்

“””””கண்டனென் கற்பினுக்கு
அணியைக் கண்களால்”””””””
என்கிறார்
இந்த வார்த்தையில்
மூன்று விதமான
அர்த்தங்கள் உள்ளது

“””கண்டனென்”””
என்றால்
நான் சீதையைப்
பார்த்தேன்
என்று பொருள்

“”””கண்டனென் கற்பினுக்கு
அணியை””””
என்றால்
கற்புக்கு இலக்கணமாக
இருக்கும்
சீதையைக் கண்டேன்
என்று பொருள்
அதாவது சீதை
கற்பு நெறியுடன் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்
என்பதை சொல்கிறார்


“””””கண்டனென் கற்பினுக்கு
அணியைக் கண்களால்”””””
என்றால்
கற்புக்கு இலக்கணமாக
இருக்கும் சீதையை
என்னுடைய கண்களால்
கண்டேன் என்று
அனுமார் சொல்ல
வரவில்லை

கண்களை வைத்து
ஒருவர் உண்மை
பேசுகிறாரா அல்லது
பொய் பேசுகிறாரா
என்பதைக் கண்டு
பிடித்து விடலாம்
கண்கள் தான்
ஒருவருடைய குணநலன்களைக்
காட்டும் கண்ணாடி

சீதை கற்புடன் இருக்கிறார்
என்பதை சீதையின்
கண்களில் இருந்து
தெரிந்து கொண்டேன்
என்கிறார் அனுமார்

இராமரின் மனம் அறிந்து
சீதையைக் கண்டேன்
என்பதையும்
சீதை கற்புடன்
இருக்கிறார் என்பதையும்
வார்த்தைகள் மூலம்
இடம், காலம், சூழ்நிலை
அறிந்து பேசியதால்
அனுமாரை நாம்
சொல்லின் செல்வர்
என்கிறோம்

ஒரு வாக்கியத்தில்
மூன்று வெவ்வேறு
விதமான அர்த்தங்களை
புரிந்து கொள்ளும்
வகையில் எழுதிய
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
பாராட்டப் பட
வேண்டியவர்

இதிகாசத்திலும்
தமிழை வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////