July 16, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-43


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-43

கிருஷ்ணருக்கு சுதாமா
என்ற ஒரு
நண்பர் இருந்தார்
அவர் அழுக்கு
உடைகளை அணிந்து
இருந்ததால் ஊரிலுள்ளோர்
அவரை குசேலர்
என்று அழைத்தனர்  
கிருஷ்ணரும், குசேலரும்
உஜ்ஜையினில் உள்ள
சாந்தீபனி முனிவரின்
ஆசிரமத்தில்
ஒன்றாகக் குருகுலக்
கல்வி பயின்றார்கள்
இருவரும் குருகுலக்
கல்வியை முடித்தவுடன்
தனித்தனியாக பிரிந்து
தங்களுடைய
இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

குசேலர் மனைவியின்
பெயர் சுட்சாமா
சுட்சாமா என்றால்
ஒட்டிய வயிறை
உடையவர் என்று
பொருள்.
சுட்சாமா சுசீலை
என்றும் அழைக்கப்பட்டார்

குசேலர் பரம ஏழை
தனது மனைவி
மக்களுடன்
ஏழ்மையில் வாடினார்.
குழந்தைகள் படும்
துன்பத்தைப் பார்க்க
முடியாமல்
ஒருநாள் சுசீலை
குசேலரிடம் நெருங்கி
பகவான் கிருஷ்ணர்
ஒரு சமயம் உங்கள்
நண்பராக இருந்தார்
என்று தாங்கள்
ஏற்கனவே கூறியுள்ளீர்கள்
துவாரகை நகரில்
இருக்கும் கிருஷ்ணரைப்
பார்த்து நம் வறுமை
நீங்குவதற்கு ஏதேனும்
உதவி கேட்டால்
என்ன என்று கேட்டாள்.

அதற்கு குசேலர்
எனக்கும் கிருஷ்ணருக்கும்
உள்ள உறவு
எதிர்பார்ப்பு
இல்லாத உறவு
எனக்கு வேண்டும்
என்று நான்
இதுவரை கிருஷ்ணரிடம்
எதையும் கேட்டதில்லை
என்றார் குசேலர்.

அதற்கு சுசீலை
உங்களுக்காக கேட்க
வேண்டாம்
நம்முடைய குழந்தைகளின்
பசியை போக்குவதற்காக
அவரை பார்த்து விட்டு
வாருங்கள் என்றாள்

தன்னுடைய மனைவி
மக்களுக்காக கிருஷ்ணரை
சந்திக்கச் செல்வதாக
ஒப்புக் கொண்டார் குசேலர்.
அவருக்கு காணிக்கையாக
கொடுக்க வீட்டில்
ஏதேனும் இருக்கிறதா
வெறும் கையுடன்
நான் என் நண்பனை
எப்படி பார்க்க முடியும்
என்றார் குசேலர்.

கொடுப்பதற்கு வீட்டில்
ஒன்றும் இல்லை
இருந்தாலும் சுசீலை
பக்கத்து வீடுகளுக்கு
சென்று நான்கு
பிடி நெல்
கடன் வாங்கி வந்து
அதை இடித்து
அவலாகச் செய்து
தன்னுடைய வீட்டில்
உள்ள கிழிசலான
புடவையை எடுத்து
அதை சிறியதாக
கிழித்து எடுத்து
அவலை அதில்
வைத்து கட்டினாள்
அதை தன்
கணவரிடம் கொடுத்து
அனுப்பினாள்

அதை எடுத்துக் கொண்டு
குசேலர் துவாரகை
நோக்கி நடந்தார்.
துவாரகைக்கு நடை
பயணமாக சென்றார்.
கிருஷ்ணருடன் தான்
பழகிய நாட்களை
நினைத்தபடியே நடந்தார்

துவாரகையில் உள்ள
கோபுரங்களையும்
அதன் செழிப்பையும்
கண்டு வியந்து நடந்தார்.
கிருஷ்ணர் ராஜாவாக
இருக்கிறாரே
தன்னை அடையாளம்
கண்டு கொள்வாரா
அரண்மனைக்குள்
செல்ல முடியுமோ
முடியாதோ
என்னை உள்ளே
செல்வதற்கு
அனுமதிப்பார்களா
என்று சிந்தனை
செய்து கொண்டு
அரண்மனையை
நெருங்கினார்.

அரண்மனை வாயிற்
காவலர்களை நெருங்கினார்
தான் கிருஷ்ணரை
பார்க்க வந்த
செய்தியை சொன்னார்
நீங்கள் அரண்மனைக்குள்
செல்லலாம்
உங்களைப் போல
சாதுக்கள் வந்தால்
நேராக வரச்சொல்லி
கிருஷ்ணர்
ஆணையிட்டிருக்கிறார்
என்ற விவரத்தைச் சொல்லி
அவரை வாயிற்காவலன்
அழைத்துக்
கொண்டு சென்று
ஒரு இடத்தில்
குசேலரை நிற்க
வைத்து விட்டு
கிருஷ்ணர் இருக்கும்
இடம் நோக்கி
சென்றார்

கிருஷ்ணரிடம்
தங்களைப் பார்க்க
ஒருவர் வந்திருக்கிறார்
தங்களோடு படித்தவராம்
பெயர் சுதாமாவாம்
என்று சொல்லி
முடிக்கும் முன்பே
கிருஷ்ணர் துள்ளிக்
குதித்து எழுந்து ஓடி
குசேலர் இருக்கும்
இடம் சென்று
அவரைக் கட்டி
அணைத்து
ஆனந்தக் கண்ணீர்
வடித்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் தன்னுடைய
நண்பர் குசேலரை
அரண்மனைக்குள்
அழைத்து வந்து
உயர்ந்த ஆசனத்தில்
அமர வைத்து
ராஜ உபசாரம்
செய்தார்
கிருஷ்ணருடன்
அவரது மனைவி
ருக்மணியும் சேர்ந்து
குசேலருக்கு
பணிவிடை
செய்தார்கள்

----------இன்னும் வரும்
---------16-07-2018
//////////////////////////////////////////////////////////