April 16, 2022

ஜபம்-பதிவு-743 (சாவேயில்லாத சிகண்டி-77)

 ஜபம்-பதிவு-743

(சாவேயில்லாத

சிகண்டி-77)

 

என்னை கொல்வது

என்ற முடிவுக்கு

பரசுராமர்

வந்து விட்டார்

 

அப்புறம் எப்படி

நான் ஏற்றுக்

கொள்ளாமல்

இருக்க முடியும்

 

என்னுடைய

வார்த்தைகளில்

உள்ள

உண்மைகளை

பரசுராமர்

ஏற்றுக் கொள்ளாத

காரணத்தினால்

பரசுராமரை

எதிர்த்து

நான் போர்

செய்கிறேன்

என்று

பரசுராமரிடம்

சொல்லி

விட்டேன்

 

நாளை

எனக்கும்

பரசுராமருக்கும்

மட்டுமே

நேருக்கு

நேராக

குருஷேத்திரத்தில்

போர்

நடக்க

இருக்கிறது

 

பரசுராமரிடம்

நேருக்கு

நேராக

தனியாக

போரிடப்

போகிறேன்

 

இந்த

விஷயத்தை

தங்களிடம்

சொல்லி விட்டு

செல்லலாம்

என்று

வந்தேன்

தாயே

 

சத்தியவதி :

பரசுராமனின்

இரத்தத்தைக்

கொண்டு

உனக்கு

ஏற்பட்ட

களங்கத்தை

துடை

மகனே

 

உன்னை

யாரும்

வெற்றி

கொள்ள

முடியாது

 

விரும்பினால்

மட்டுமே

மரணம்

ஏற்படும் என்ற

வரத்தைப் பெற்ற

உன்னை

எப்படி

கொல்ல முடியும்

 

உன்னைக்

கொல்லக்

கூடியவர்

இந்த

உலகத்தில்

இது வரை

பிறக்கவில்லை

 

இனி

பிறந்தால்

உண்டு

 

பரசுராமரின்

ரத்தத்தால்

உன்

களங்கத்தைக்

கழுவு

 

பீஷ்மன்

யார்

என்பதை

இந்த

உலகத்திற்கு

காட்டு

 

வெற்றியுடன்

திரும்பி வா

மகனே

உனக்காக

நான் காத்துக்

கொண்டிருப்பேன்

 

என் ஆசி

உனக்கு

எப்போதும்

உண்டு

 

(தாய்

சத்தியவதியிடம்

ஆசி பெற்ற

பீஷ்மர்

அங்கிருந்து

வெளியே

செல்கிறார்.)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-742 (சாவேயில்லாத சிகண்டி-76)

 ஜபம்-பதிவு-742

(சாவேயில்லாத

சிகண்டி-76)

 

அம்பையின்

விஷயத்தில் நான்

எந்தத் தவறும்

செய்யவில்லை.

தவறு செய்யாத

நான் எதற்காக

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

என்று சொன்னேன்

 

பிரம்மச்சரியம்

விரதம்

ஏற்ற என்னால்

அம்பையை

எப்படி திருமணம்

செய்து கொள்ள

முடியும்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள முடியாது

என்று சொன்னேன்

 

சத்தியவதி :

பரசுராமர்

கோப்பட்டிருப்பாரே

 

கோபத்தில் என்ன

பேசுவது என்று

தெரியாமல்

பேசியிருப்பாரே

 

பீஷ்மர் :

கோபத்தில்

தான் பேசினார்

 

என்ன பேசுகிறோம்

என்று தெரியாமல்

தான் பேசினார்

 

உண்மையை

உணராமல்

தான் பேசினார்

 

உண்மை எது

என்று அறிந்து

கொள்ளாமல்

தான் பேசினார்

 

தான் பேசுவது

தான் சரி என்று

நினைத்துக் கொண்டு

தான் பேசினார்

 

தான் பேசுவது

மற்றவர் இதயத்தை

காயப்படுத்துமே

என்பது தெரியாமல்

தான் பேசினார்

 

சீடனின் குணத்தை

உணர்ந்து

கொள்ளாமல்

தான் பேசினார்

 

அம்பையின்

பேச்சில் தான்

உண்மை இருக்கிறது

என்று நம்பிக்

கொண்டு

தான் பேசினார்

 

அம்பையை

முழுவதுமாக

நம்பியதால்

தான் பேசினார்

 

அம்பையின்

எண்ணத்தை

செயல்படுத்துவதற்காகத்

தான் பேசினார்

 

சத்தியவதி :

அம்பையின்

எண்ணமே உன்னைக்

கொல்வது தானே

 

பீஷ்மர் :

என்னைக்  கொல்வது

என்ற அம்பையின்

எண்ணத்தை

நிறைவேற்ற

பரசுராமர் முடிவு

செய்து விட்டார்

என்பதை

அவருடைய

வார்த்தையே

வெளிப்படுத்தியது

 

சத்தியவதி :

என்ன

வெளிப்படுத்தினார்

 

பீஷ்மர் :

தன் மனதில்

உள்ளதை அப்படியே

வெளிப்படுத்தினார்

 

பரசுராமரின்

வார்த்தைக்கு

மதிப்பு

கொடுத்து

அம்பையை

திருமணம்

செய்து

கொள்ளாத

காரணத்தினால்

நாளை

பரசுராமருக்கும்

எனக்கும்

குருஷேத்திரத்தில்

போர் என்று

சொன்னார்

 

அவருடைய

வார்த்தையை

ஏற்றுக் கொண்டேன்

 

சத்தியவதி :

குருவை எதிர்த்து

போரிட ஒத்துக்

கொண்டாயா

 

பீஷ்மர் :

என்னை

எதிரியாக

நினைத்து விட்டார்

 

எனக்கு எதிராக

நின்று போரிடத்

தயாராகி விட்டார்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-741 (சாவேயில்லாத சிகண்டி-75)

 ஜபம்-பதிவு-741

(சாவேயில்லாத

சிகண்டி-75)

 

பீஷ்மா

உன்னைப் பற்றி

பரசுராமருக்கு

தெரியவில்லை

உன் வீரம் என்ன

உன் அறிவு என்ன

உன் திறமை என்ன

என்பது பரசுராமருக்கு

தெரியவில்லை

 

தெரிந்திருந்தால்

உன்னை

குற்றவாளி என்று

சொல்லி

இருக்க மாட்டார்

 

இந்த உலகம்

எப்போதும்

சொன்னதைச்

செய்தவர்களைத் தான்

குற்றவாளி

என்று சொல்லும்

சொன்னவர்கள்

எதற்காக

சொன்னார்கள்

என்று ஆராய்ந்தும்

பார்க்காது

செய்தவர்களும்

எதற்காக

செய்தார்கள் என்று

யோசித்தும்

பார்க்காது

 

பீஷ்மா

நீயும் இதற்கு

விதிவிலக்கல்ல

சொன்னதைச்

செய்த உன்னை

பரசுராமர்

குற்றவாளி என்கிறார்

 

உன்னை

குற்றவாளி என்று

சொன்னதின் மூலம்

பரசுராமர்

மிகப்பெரிய

தவறினைச்

செய்து இருக்கிறார்

 

அவர்

செய்த தவறை

அவர் உணர்ந்து

கொள்ளும்படிச்

செய்ய வேண்டும்

 

நீ குற்றவாளி

இல்லை என்பதை

பரசுராமர்

ஏற்றுக் கொள்வதற்கு

நீ ஏதாவது

செய்தே ஆக

வேண்டும்

 

பீஷ்மர் :

என் விருப்பத்தின் படி

எதையும் செய்ய

முடியாது

 

நான் குற்றவாளி

இல்லை என்பதை

பரசுராமர்

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்றால்

பரசுராமர்

சொன்னதை நான்

செய்ய வேண்டும்

 

சத்தியவதி :

என்ன செய்ய

வேண்டும்

 

பீஷ்மர் :

அம்பையை

திருமணம்

செய்ய வேண்டும்

 

சத்தியவதி :

முடிந்து விட்டது

என்று நினைத்தது

தொடர்ந்து கொண்டு

இருக்கிறது

உன்னை விடாமல்

துரத்திக் கொண்டு

இருக்கிறது

நீ எங்கே

சென்றாலும்

அம்பை உன்னை

விட மாட்டாள்

போலிருக்கிறது

இதற்கு முடிவு

தான் என்ன

 

பீஷ்மர் :

முடிவைத்

தேடித் தான்

அம்பை

பரசுராமரைச் சரண்

அடைந்து இருக்கிறாள்

 

சத்தியவதி :

உன்னைத் திருமணம்

செய்வது

அம்பையின் முடிவு

கிடையாதே

 

பரசுராமர்

வெளிப்படுத்தியவை

அம்பையின்

வார்த்தைகள்

கிடையாதே

 

அம்பை உன்னை

கொல்வதாகத் தானே

சபதம் எடுத்து

இருக்கிறாள்

உன்னை

திருமணம் செய்வேன்

என்று சபதம்

எடுக்கவில்லையே

 

பீஷ்மர் :

பரசுராமர்

அம்பையின் முடிவைச்

சொல்லவில்லை

தன்னுடைய

முடிவைச் சொல்லி

இருக்கிறார்

 

சத்தியவதி :

சரியான முடிவாகத்

தெரியவில்லையே

 

பீஷ்மர் :

அதைத் தான்

நானும் சொன்னேன்

உங்கள் முடிவு

சரியான முடிவு

கிடையாது

உங்கள் முடிவை

என்னால் ஏற்றுக்

கொள்ள முடியாது

என்று சொன்னேன்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-740 (சாவேயில்லாத சிகண்டி-74)

 ஜபம்-பதிவு-740

(சாவேயில்லாத

சிகண்டி-74)

 

குற்றமற்றவருக்குத்

தான் குற்றவாளி

என்று சொல்வதற்கு

உரிமை இருக்கிறது

குற்றம் செய்தவருக்கு

குற்றவாளி என்று

சொல்வதற்கு

உரிமை இல்லை

 

ஒருவரை

குற்றவாளி என்று

சொல்கிறவர்

எந்த தவறும்

செய்யாதவராக

இருக்க வேண்டும்

எந்த குற்றமும்

செய்யாதவருக்குத்

தான்

குற்றவாளி என்று

சொல்வதற்கு

உரிமை உண்டு.

 

குற்றவாளியான

பரசுராமர் உன்னை

குற்றவாளி

என்று சொல்வதற்கு

உரிமையும் இல்லை

அந்த வார்த்தையை

சொல்வதற்கு

அவருக்கு

அருகதையும் இல்லை

 

பீஷ்மா

நீ சொன்ன

வேலைகளைச்

செய்தவன்

 

சொன்ன வேலைகளைச்

செய்தவன்

எப்படி

குற்றவாளியாக

இருக்க முடியும்

 

உடல்நிலை

சரியில்லாமல் இருந்த

விசித்திரவீர்யனுக்காகவும்

அஸ்தினாபுரத்தின்

பரம்பரை

பட்டுப் போகாமல்

இருக்க வேண்டும்

என்பதற்காகவும்

நீ என்னுடைய

அனுமதி பெற்று

அம்பையை

சிறை எடுத்தாய்

அஸ்தினாபுரத்தின்

அனுமதியுடன்

சிறை எடுத்தாய்

விசித்திரவீர்யன்

உடல் நலக்

குறைவாக இருந்த

காரணத்தினால்

விசித்திரவீர்யனுக்காக

சிறை எடுத்தாய்

விசித்திரவீர்யனின்

அனுமதியுடன்

சிறை எடுத்தாய்

சொன்ன வேலையைச்

செய்தவன் நீ

 

நீ எப்படி

குற்றவாளியாக

இருக்க முடியும்

பரசுராமர் எப்படி

உன்னை குற்றவாளி

என்று சொல்ல

முடியும்

 

அம்பையை எதற்காக

சிறை எடுத்தாய்

என்ன காரணத்திற்காக

சிறை எடுத்தாய்

என்ற உண்மையை

அறியாதவர்கள் தான்

உன்னை குற்றவாளி

என்பார்கள்

 

ஏன் பரசுராமர்

உண்மையை ஆராய்ந்து

அறியவில்லையா

 

அல்லது

 

உண்மை எது

என்பதை ஆராய்ந்து

அறிய வேண்டும்

என்பது

பரசுராமருக்குத்

தெரியாதா

 

அல்லது

 

உண்மையை

அறியும் திறன்

அவருக்குக்

குறைந்து விட்டதா

 

அல்லது

 

தான் என்ற ஆணவம்

அவரை யோசிக்க

விடாமல்

செய்து விட்டதா

 

அல்லது

 

யோசிக்கும் திறனை

அவர் இழந்து

விட்டாரா

 

அல்லது

 

வயதானதால்

சிந்தை மழுங்கி

விட்டதா

 

ஒருவரை

குற்றவாளி என்று

சொல்வதற்கு முன்

ஆராய்ந்து பார்த்து

சொல்ல

வேண்டும் என்பது

அவருக்கு தெரியாதா

 

நாம் சொல்லும்

வார்த்தைகள்

மற்றவர்கள் மனதை

மகிழ்ச்சியடையச்

செய்யும் படி

இருக்க வேண்டும்

பிறரை

வருத்தம்படும்படி

இருக்கக் கூடாது

என்பது அவருக்கு

தெரியாதா

 

சமுதாயம்

தன்னை புகழ்கிறது

தன்னை

உயர்ந்த நிலையில்

வைத்திருக்கிறது

என்ற காரணத்திற்காக

தன் எதிரில்

இருப்பவர் யார்

என்று தெரிந்தும்

இப்படி பேசலாமா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-739 (சாவேயில்லாத சிகண்டி-73)

 ஜபம்-பதிவு-739

(சாவேயில்லாத

சிகண்டி-73)

 

(தாய் சத்தியவதி

அறைக்குள்

பீஷ்மர் நுழைகிறார்.

 

பீஷ்மர் வருத்தத்தில்

இருப்பதைக்

கண்டு கொண்ட

தாய் சத்தியவதி

பீஷ்மரிடம் பேசத்

தொடங்குகிறாள்.)

 

சத்தியவதி :

எந்தப் பிரச்சினை

வந்தாலும் எதிர்த்து

நின்று போராடி

வெற்றி பெறக்கூடிய

வல்லமை படைத்த

பீஷ்மன்

வருத்தப்படுவதைப்

பார்க்கும் போது

எனக்கு

வியப்பாக இருக்கிறது

 

மகனே பீஷ்மா

உன்னை

வருத்தப்பட

வைத்தது எது

 

பீஷ்மர் :

என்னைப் பார்த்து

ஒருவர்

சொல்லிய சொல்

 

சத்தியவதி :

என்ன சொல்

 

பீஷ்மர் :

குற்றவாளி

என்ற சொல்

 

சத்தியவதி :

உன்னைப் பற்றி

அறியாதவர்

சொல்லி இருப்பார்

 

பீஷ்மர் :

என்னைப் பற்றி

அறிந்தவர் தான்

சொன்னார்

என்னை

குற்றவாளி என்று

 

சத்தியவதி :

சொன்னது யார்

 

பீஷ்மர் :

பரசுராமர்

 

சத்தியவதி :

எதற்காக

அவ்வாறு சொன்னார்

 

பீஷ்மர் :

அம்பையை

சிறை எடுத்த

தவறினைச் செய்து

அம்பையின்

வாழ்க்கை

பாதிப்பு அடைவதற்கு

நான் காரணமாகி

விட்டேனாம்

அதனால் என்னை

குற்றவாளி

என்கிறார்

 

சத்தியவதி :

வேறு என்ன

சொன்னார்

 

பீஷ்மர் :

குற்றவாளியான

என்னுடன் அவர்

தொடர்பு

கொண்டிருந்தால்

குற்றவாளியுடன்

தொடர்பு

கொண்டிருக்கிறார்

என்று இந்த

உலகம் அவரை

கேவலமாகப்

பேசும் என்கிறார்

 

அவருடைய புகழுக்கு

களங்கம்

ஏற்படும் என்கிறார்

 

அவருடைய பெயர்

பாதிப்பு அடையும்

என்கிறார்

 

அவருடைய

முன்னேற்றம்

தடைபடும் என்கிறார்

 

என் தரப்பு

நியாயங்களை

செவி கொடுத்தே

கேட்க மாட்டேன்

என்கிறார்

 

அவருக்கு என்று

ஒரு நியாயம்

வைத்திருக்கிறார்

அது சரியானது

தானா என்பதைக்

கூட ஆராயாமல்

பேசுகின்றார்.

 

தான் சொல்வது

தான் சரி

தான் செய்வது

தான் சரி என்று

இருக்கின்றார்

 

உண்மை எது

பொய் எது

என்று ஆராயாமல்

அவருடைய

வார்த்தைக்கு

நான் கட்டுப்பட

வேண்டும் என்கிறார்

 

அவர் சொல்வதை

நான் செய்ய

வேண்டும் என்கிறார்

 

சத்தியவதி :

பீஷ்மா

உன்னை குற்றவாளி

என்று சொல்வதற்கு

பரசுராமருக்கு எந்த

தகுதியும் கிடையாது

 

ஷத்திரியர்களைக்

கொன்று

பிணங்களாகக்

குவித்தவர்

அவர்களுடைய

இரத்ததை ஆறாக

ஓட விட்டவர்

 

கொல்வது ஒன்றையே

தொழிலாகக் கொண்டு

கணக்கிலடங்காத

குற்றங்களைச் செய்தவர்

உன்னை எப்படி

குற்றவாளி என்று

சொல்லலாம்

 

உன்னை குற்றவாளி

என்று சொல்வதற்கு

அவருக்கு என்ன

தகுதி இருக்கிறது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////