December 08, 2011

ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2



 
         ராஜ ராஜேஸ்வரி-விரதம்-பதிவு -2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

விரதம் ஆரம்பிக்கும் முறை -1 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - ஒன்று கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல்நாள் காலை :
தேங்காய் , பூ , பழம் , வெற்றிலை பாக்கு , மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் , ஆப்பிள் , ஆரஞ்சு பழம், ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும் .
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வைத்தும் பூஜை செய்யலாம் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து , அகர்பத்தி ஏற்றி , சாம்பிராணி கொளுத்தி, தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி ,ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .

ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு:
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை ,பொங்கல் , வடை, அவல், பொரி , கடலை, வெல்லம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதம் ஆரம்பிக்கும் முறை -2 :
48 நாட்கள் விரதம் ஆரம்பிப்பதற்கு முன்னர்  முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை முறைகளில் முறை - இரண்டு கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆரம்பிக்கும் முதல் நாள்
இந்த பூஜை முறையை முதல் நாள் காலை , மதியத்திற்குள் முடித்து விட வேண்டும் .
தேங்காய் ,பூ , பழம், வெற்றிலை பாக்கு ,மஞ்சள் வைக்க வேண்டும் .
வாழைப்பழம் , எலுமிச்சை பழம் ,மாம்பழம் ,ஆப்பிள் ,ஆரஞ்சு பழம் ஆகியவற்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
வசதி இருந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எத்தனை பழங்கள் வேண்டுமானாலும் பூஜையில் வைக்கலாம் .
வெண்பொங்கல் (அல்லது) சர்க்கரை , பொங்கல் , வடை , அவல்பொரி கடலை, வெல்லம் ஆகியவற்றை  பூஜையில் வைக்க வேண்டும் .
மேலே சொல்லப்பட்டவைகளை பூஜையில் வைத்து அகர்பத்தி ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி ,தேங்காய் உடைத்து ,கற்பூரம் கொளுத்தி, ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் .
பூஜை செய்து முடித்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கான மந்திரத்தை 108 முறை கண்டிப்பாக உச்சாடணம் செய்ய வேண்டும் .


விரதத்தின் போது தினமும் கடைபிடிக்க வேண்டியவை :
48 நாட்கள் விரதம் இருக்கும் பொழுது தினமும் கடைபிடிக்க வேண்டிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது .

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானம் செய்யும் பொழுது வெற்றிலை பாக்கு ,ஒரு ஸ்வீட் (அல்லது) சர்க்கரை (அல்லது) வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு ,ராஜ ராஜேஸ்வரி யந்திரத்திற்கு ,கற்பூரத்தைக் காட்டி விட்டு ,அமர்ந்து 108 முறை (அல்லது) 1008 முறை ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை உச்சாடணம் செய்ய தொடங்க வேண்டும் .
மந்திர உச்சாடணம்  முடித்த பிறகு கற்பூரம் காட்டி விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் .

காலையிலும் , மாலையிலும் மேலே சொன்ன முறைகளைப் பயன் படுத்தி பூஜை செய்ய வேண்டும் .
முடிந்தால் காலை ,மதியம் ,மாலை ஆகிய மூன்று வேளைகளில் பூஜை செய்யலாம் .
சூரியன் உதிப்பதற்கு முன்பும் ,உச்சி வேளையிலும், சூரியன் அஸ்தமனம் அடைந்த பிறகும் ,பூஜை செய்வது சிறந்த பலன்களைத் தரும் .


48 நாட்களுக்குள் 1 லட்சம் மந்திரங்களை முடிக்கும் விதமாக மந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் .
தினமும் எவ்வளவு முறை மந்திரம் சொன்னால்,  48 நாட்களில் 1 லட்சம் ஆகும் என்று கணக்கிட்டு , ஒரு நாளைக்குரிய மந்திரங்களின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்ளுவது , சிறந்த பலன்களைத் தரும், மந்திரம் சித்தியாவதற்கு உரிய நிலைமைகளை உருவாக்கும்.

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                      போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”