August 18, 2024

ஜபம்-பதிவு-1022 மரணமற்ற அஸ்வத்தாமன்-154 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1022

மரணமற்ற அஸ்வத்தாமன்-154

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அஸ்வத்தாமன்

பசியால் வாடிய அஸ்வத்தாமன்

சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்ட அஸ்வத்தாமன்

தன்னுடைய திறமையால் வாழ்க்கையில் உயர்ந்த அஸ்வத்தாமன்

வீரத்தால் வீழ்ந்த முடியாத நிலையை அடைந்த அஸ்வத்தாமன்

மும்முர்த்திகளிடம் இருந்து மூன்று அஸ்திரங்களைப் பெற்ற ஒரே துவாபாரயுகத்தின் நாயகன் அஸ்வத்தாமன்

போன யுகத்திற்கும், இந்த யுகத்திற்கும் பாலமாக இருக்கும்

கடைசி மானிடன் அஸ்வத்தாமன்.

 

சிவ தொண்டில் தலை சிறந்த பக்தன் அஸ்வத்தாமன்

 

மந்திரத்தில் உயர்ந்த நிலை அடைந்த அஸ்வத்தாமன்

அரசனாக இருந்து நாட்டை ஆண்ட அஸ்வத்தாமன்

அரசர்களுக்கு சமமாக இருந்த அஸ்வத்தாமன்

அரசர்களையே ஆட்டி வைக்கும் நிலையில் இருந்த அஸ்வத்தாமன்

மனித குலம் வாழ வேண்டும் என்பதற்காக தன் சாவை

தினம் தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்ததால்

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டான் அஸ்வத்தாமன்.

 

எப்போதும் இந்த உலகம்

ஏழ்மை நிலையில் இருந்து

தன்னுடைய திறமையால்

உயர்ந்த நிலைக்கு வந்தவர்களை

தவறாகத் தான் சித்தரிக்கும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கம்

ஏழைகளை மேலே விடாது என்பதற்கும்,

அப்படியே வந்தாலும் அவர்களை வாழ விடாது என்பதற்கும்,

அப்படியே வாழ்ந்தாலும் அவர்களை அழிக்காமல் விடாது என்பதற்கும்,

அப்படியே அழிக்கவே முடியவில்லை என்றாலும்,

அவர்களை அவமானப்படுத்தும் என்பதற்கும்,

அப்படியே அவமானப்படுத்த முடியவில்லை என்றாலும்,

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்து

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதற்கும்

அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

திறமையானவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முடியும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்ககத்தால்

அஸ்வத்தாமனுக்கு எவ்வளவு தான்

கெட்ட பெயரை ஏற்படுத்தினாலும்

இன்றும் அனைவருடைய இதயங்களிலும்

வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

கி.பி.4044--ம் வருடம்

கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில்

அஸ்வத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்றும்

அதுவே மனித குலத்தின் அழிவு என்றும்

சொல்லப்படுகிறது.

 

பரிட்சித்து மகாராஜன் அரியணை ஏறியதும்

தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள

இமயம் புறப்பட்ட பாண்டவர்கள்

அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும்,

அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின்

கண்ணில் படவில்லை என்றும்

புராணங்கள் சொல்கின்றன.

 

காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பன் தான் அஸ்வத்தாமன்

காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்.

இறப்பு இல்லாத நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

யாராலும் அழிக்க முடியாதவனாக கதாநாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

ஏனென்றால்

அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1021 மரணமற்ற அஸ்வத்தாமன்-153 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1021

மரணமற்ற அஸ்வத்தாமன்-153

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

9-கிரகங்கள்,

12- வீடுகள்,

27 நட்சத்திரங்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மடிந்த உயிர்கள்

பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிர்கள்

இனி பிறந்து வாழப் போகின்ற உயிர்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

மேல் ஏழு உலகம்

கீழ் ஏழு உலகம்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

முப்பத்து முக்கோடி தேவர்களின் மேல்

ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

""என் நெற்றியிலிருந்து

எப்போது எல்லாம்

இரத்தம் வழிந்து

இந்தத் தரையில் விழுகிறதோ

அப்போது எல்லாம்  

அந்த இரத்ததைக்

குடிக்கக் கூடிய

ஒரு புழுவாக

நீயும் என்னுடன்

என்றும் இருப்பாய்,.""

 

என்று சாபம் கொடுக்கிறேன்.

இது தான் என்னுடைய சாபம்

(என்று கடவுளுக்கே சாபம் இட்டான் அஸ்வத்தாமன்

இந்த உலகத்திலேயே

கடவுளிடம் இருந்து சாபம் பெற்றவனும் அஸ்வத்தாமன் தான்,

கடவுளுக்கே சாபம் கொடுத்தவனும் அஸ்வத்தாமன் தான்)

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1020 மரணமற்ற அஸ்வத்தாமன்-152 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1020

மரணமற்ற அஸ்வத்தாமன்-152

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரியோதனனுடன் பீமன் போர் புரியும் போது துரியோதனனின் இடுப்புக்குக் கீழே தொடையை அடித்து கொல்லச் சொன்னாய். பீமனும் அவ்வாறே செய்து துரியோதனனைக் கொன்றானே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து, ஜெயத்ரதன் வெளியே வந்ததும் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று சொல்லி

ஜெயத்ரதனை அர்ஜுனனை விட்டு கொல்லச் செய்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

பூரிசிரவஸ், சாத்தகி போர் செய்து கொண்டிருந்த போது அர்ஜுனனை வைத்து பூரிசிரவஸ் கையை வெட்டி எடுத்து சாத்தகி மூலம் பூரிசிரவஸ்ஸின் தலையை வெட்டச் செய்து பூரிசிரவஸ்ஸைக் கொன்றாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

அர்ஜுனனைக் கொல்வதற்காக கர்ணன் பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவச் செய்து கடோத்கஜனைக் கொன்று அர்ஜுனனின் உயிரைக் காப்பாற்றினாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

இவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்து விட்டு நல்லவன் போல நடிக்கிறாய்

இவ்வளவு அக்கிரமங்களையும், அநியாயங்களையும் செய்த நீ நல்லவன். சுயநலமாக இருக்கும் நீ நல்லவன்.

 

சொந்த அத்தையான குந்திதேவிக்காக அனைத்தையும் செய்யும் நீ நல்லவன்.

 

அத்தையின் மகன்களான பாண்டவர்களைக் காக்க போராடும் நீ நல்லவன்.

 

தர்மம் என்ற பெயரைச் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்யும்

நீ நல்லவன்

 

எந்த ஒரு விஷயத்திற்காகவும் ஆசைப்படாதவன்.

தந்தையின் மரணத்திற்காக பழி வாங்க நினைத்தவன்

நண்பன் துரியோதனன் மரணத்திற்காக அனைவரையும் கொன்றவன்

நீ செய்த தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டியவன்

நீ நல்லவன் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியவன்

உன் முகத்திரையைக் கிழித்தவன்

உன் போலி முகத்தை இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்படிச் செய்தவன்

உன் இரட்டை வேடத்தை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியவன்

இத்தகைய செயலைச் செய்த நான் கெட்டவன்.

 

நீ சாபம் கொடுத்தால் மற்றவர்களைப் போல்

நான் வாங்கி விட்டு

அமைதியாக சென்று விடுவேன் என்று நினைத்தாயா

 

நீ சாபம் கொடுத்தால் நான் வருந்துவேன் என்று நினைத்தாயா

 

உன் சாபத்தைக் கண்டு நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா

 

சாபம் கொடுத்தால் சாப விமோசனம் கொடு என்று

உன்னைக் கெஞ்சுவேன் என்று நினைத்தாயா

 

எதற்கும் அஞ்சாதவன் இந்த அஸ்வத்தாமன்

எதைப் பற்றியும் கவலைப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

பிச்சைப் போட்டுத்தான் பழக்கப்பட்டவன் இந்த அஸ்வத்தாமன்

பிச்சை எடுத்து பழக்கப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

தர்மத்தின் பெயரைச் சொல்லி சொல்லியே

அதர்மச் செயல்களைச் செய்து கொண்டிருக்கும் நீ சாபமிடலாம்

தர்மத்தையே பின்பற்றி தர்மத்தையே செய்து கொண்டிருக்கும்

நான் சாபமிடக்கூடாதா

 

கடவுள் மனிதனுக்கு சாபம் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை

ஆனால் மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது என்பது பெரிய விஷயம்

அத்தகைய ஒரு சாபத்தை நான் இப்போது உனக்கு கொடுக்கப் போகிறேன்

கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறேன்

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறான்

இந்த உலகத்தில் நடக்காத ஒரு விஷயம்

இனி இந்த உலகத்தில் நடக்க முடியாத ஒரு விஷயம்

மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது

இதோ நான் உனக்கு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த அஸ்வத்தாமன் உனக்கு சாபம் கொடுக்கிறேன்.

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறேன்.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1019 மரணமற்ற அஸ்வத்தாமன்-151 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1019

மரணமற்ற அஸ்வத்தாமன்-151

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமா!

ஸ்யமந்தகமணி இருந்த வரை தான் உன்னால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. நோயற்று வாழ முடிந்தது. நோய் உன்னை அண்ட முடியாமல் இருக்க முடிந்தது.

உன் நெற்றியிலிருந்து ஸ்யமந்தகமணி எடுக்கப்பட்ட பிறகு இனி உன்னால் சந்தோஷமாகவே இருக்க முடியாது. சந்தோஷம் உன்னை விட்டு விலகி சென்று விடும்.

 

அது எடுக்கப்பட்ட நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தபடி தான் இருக்கும். வழிந்து கொண்டே தான் இருக்கும்.

 

அதை உன்னால் நிறுத்தவே முடியாது. நீ கஷ்டத்தில் துன்புறுவாய். வேதனை உன்னை வாட்டும். நோயால் அவதிப்படுவாய். அதை தீர்க்க முடியாமல் கஷ்டப்படுவாய்.

 

இது தான் என்னுடைய சாபம்.

(கடவுள் அஸ்வத்தாமனுக்கு சாபம் இட்டார்.)

 

அஸ்வத்தாமன் : உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தைக்காக மட்டும் கவலைப்படுகிறாயே இந்தப் போரில் எத்தனைப் பேர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

கணவனை இழந்து எத்தனை பெண்கள் விதவை ஆகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

தந்தையை இழந்து எத்தனை குழந்தைகள் தவித்து இருப்பார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாயா? இல்லையே?

மற்றவர்களைப் பற்றி உனக்குக் கவலையில்லை. உனக்கு கவலை எல்லாம் உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீது தான்.

உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையை இறக்காமல் காப்பாற்றுவேன் என்கிறாயே

அந்தக் குழந்தையை இறப்பிலிருந்து காப்பாற்றுவேன் என்கிறாயே

அந்தக் குழந்தை இறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு உயிர் கொடுப்பேன் என்கிறாயே

பாண்டவர்களின் சந்ததியை அழிக்காமல் காப்பாற்றுவேன் என்கிறாயே

ஏன் உத்தரையின் வயிற்றில் வளரும் குழுந்தை தான் பாண்டவர்களின் வாரிசா.

பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகள் இறந்தார்களே. ஏன் அவர்களுக்கு உயிர் கொடுக்கவில்லை. ஏன் அவர்கள் ஐவரும் பாண்டவர்களின் வாரிசுகள் இல்லையா?

பீமனின் மகன் கடோத்கஜன். கடோத்கஜனை சக்தி ஆயுதத்தால் கொல்லச் செய்தாயே ஏன் அவன் பாண்டவர்களின் வாரிசு இல்லையா?

பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன், கடோத்கஜனுக்கும், அகிலாவதிக்கும் பிறந்தவன் பார்பாரிகன். அந்த பார்பாரிகனைக் கொன்றாயே ஏன் அவன் பாண்டவர்களின் வாரிசு இல்லையா?

இவர்கள் அனைவரையும் நீ பாண்டவர்களின் வாரிசாகக் கருதவில்லை. உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையை மட்டும் தான் நீ பாண்டவர்களின் வாரிசாகக் கருதுகிறாய்.

அதனால் தான் அந்தக் குழந்தையை காப்பாற்றத் துடிக்கிறாய். அந்தக் குழந்தை இறந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கத் துடிக்கிறாய்.

ஏனென்றால் உன்னுடைய தங்கை சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தவன் அபிமன்யு. அந்த அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறக்கப்போகும் குழந்தை உன்னுடைய தங்கையின் வாரிசு,

அதனால் தான் உன் தங்கையின் வாரிசைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாய்.

அதனால் தான் உன்னுடைய தங்கை உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாண்டவர்களின் வாரிசு என்கிறாய்.

இதனால் தான் உனக்கு உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தை மட்டுமே பாண்டவர்களின் வாரிசாகத் தெரிகிறது. வேறு யாரும் பாண்டவர்களின் வாரிசாக உனக்குத் தெரியவில்லை,

இந்த விஷயம் தெரியாமல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பாண்டவர்களும் உன்னை நல்லவன் என்று சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறார்கள்

இத்தகைய காரணத்தினால் தான் நீ பாஞ்சாலிக்குப் பிறந்தவர்களைக் காப்பாற்றவில்லை. கடோத்கஜனைக் காப்பாற்றவில்லை. கடோத்கஜனின் மகனைக் காப்பாற்றவில்லை.

உன் இரத்தத்தை மட்டும் காப்பாற்ற வருகிறாய். அந்தக் குழந்தையைத் தான் பாண்டவர்களின் வாரிசு என்கிறாய் உனக்கு என்ன ஒரு சுயநலம்

இது தெரியாமல் உன்னை அனைவரும் போற்றுகின்றனர் வணங்கின்றனர்

சூழ்ச்சியின் வடிவமாக இருப்பவன் நீ!

தர்மரை விட்டு பீஷ்மரை எப்படி கொல்வது என்று கேட்டு வரச் சொன்னாய் பெண் எதிரே வந்தாலோ, ஆணிலிருந்து பெண்ணாக மாறியர் வந்தாலோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர் வந்தாலோ, யார் வந்தாலும் நான் போரிட மாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு சிகண்டியை வைத்து பீஷ்மரை வீழ்த்தி அவரை இயங்க விடாமல் செய்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

தர்மரை வைத்து அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்று பொய் சொல்ல வைத்து திருஷ்டத்யும்னனை வைத்து என் தந்தையாகிய துரோணரைக்  கொன்றாய் அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

தர்மரை வைத்து சல்லியனை பின்னால் இருந்து கொல்ல வைத்தாய் அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

குந்தி தேவியை கர்ணனிடம் அனுப்பி பாண்டவர்கள் ஐவரில் அர்ஜுனனை மட்டும் கொல்ல வேண்டும் மற்றவரை கொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்க வைத்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் ஒரு முறைக்கு மேல் விடக்கூடாது என்று குந்திதேவியை கர்ணனிடம் சத்தியம் வாங்கச் சொன்னாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

கர்ணன் ஆயுதம் இல்லாமல் இருந்த போது அர்ஜுனனை விட்டு கர்ணைனைக் கொல்லச் சொன்னாறே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1018 மரணமற்ற அஸ்வத்தாமன்-150 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1018

மரணமற்ற அஸ்வத்தாமன்-150

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

மந்திரத்தில் யாரும் தொட முடியாத உச்சத்தைத் தொட்டாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

எத்தனை கோயில் கோயிலாக அலைந்தாலும்,

எத்தனை சாமிகளைக் கும்பிட்டாலும்,

எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும்  

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

பாவத்தின் பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்

பாவத்தைச் செய்து விட்டு அதன் விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,

பாவமன்னிப்பு யாரும் யாருக்கும் தரமுடியாது,

பாவமன்னிப்பால் பாவத்தை யாராலும் தீர்க்க முடியாது,

என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

ஞானம், சமாதி என்ற நிலையை அடைந்தவர்களாக இருந்தாலும்,

முக்தி என்ற நிலையை அடையாதவர்களாக இருந்தாலும்,

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

அஸ்வத்தாமா!

மரணமற்ற அஸ்வத்தாமா

உனக்கு மரணமில்லை என்ற காரணத்தினால் தானே இத்தகைய ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தாய்.

உன் நெற்றியில் இருக்கும் ஸயந்தகமணி இனி உனக்கு சொந்தம் இல்லை. அது இருந்ததால் தானே எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்தாய்.

இனி அது உனக்கு சொந்தம் இல்லை. அதை வைத்திருக்கும் தகுதியும் உனக்கு இல்லை. அது உலகத்தின் பொக்கிஷம். எடுத்துக் கொடுத்து கொடு.

அஸ்வத்தாமன் : என்னுடைய ஸ்யமந்தகமணியை, என்னுடன் பிறந்த என்னுடைய ஸ்யமந்தகமணியை, என்னை காப்பாற்றிக் கொண்டிருந்த அந்த ஸ்யமந்தகமணியை,  யாரும் தொட வேண்டும். தொடுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. குறிப்பாக பாண்டவர்களுக்கு அந்தத் தகுதி கிடையவே கிடையாது.

கர்ணனுடைய கவச குண்டலங்களை எப்படி நயவஞ்சகமாக பெற்று அவனைக் கொன்று விட்டீர்களோ. அதைப் போல் என்னுடைய ஸ்யமந்தகமணியைப் பெற்று என்னை கொல்லப் பார்க்கிறீர்கள்

என்னை நயவஞ்சகமாக யாரும் கொல்லவும் முடியாது. என்னை கொல்லக் கூடிய சக்தியும் யாருக்கும் கிடையாது.

ஏன் நீங்கள் கடவுளாக நினைக்கும் அந்த கிருஷ்ணனுக்கும் கிடையாது.

ஏனென்றால் நான் மரணமற்றவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

என்னைக் கொல்ல முடியாது என்ற காரணத்தால், என்னிடமிருந்து என்னுடைய ஸ்யமந்தகமணியை பிரித்து எனக்கு கஷ்டத்தை உண்டாக்க முடிவு செய்து விட்டீர்கள். அதனால் என்னுடைய ஸ்யமந்தகமணியை கேட்கிறீர்கள்.

இதற்கு மேல் நான் மனிதர்களுடன் வாழ விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை.

நல்லவர்கள் போல் நடிக்கும் மனிதர்களுடன்,

சுயநலத்துடன் வாழும் மனிதர்களுடன்,

தான் வாழ பிறரை கெடுக்கும் பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,

பாவம் என்று தெரிந்தும் துணிந்து பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,

பணம் பதவி அதிகாரத்திற்காக பாவம் செய்யும் மனிதர்களுடன்,

தர்மம் என்று சொல்லிக் கொண்டு

அதர்மச் செயல்களைச் செய்யும் மனிதர்களுடன்,

இனி நான் வாழ விரும்பவில்லை

 

கடவுளே இந்த உலகத்தில் பிறந்து வந்தாலும்

சூழ்ச்சி செய்து தான் வாழ வேண்டும்

என்ற நிலை உண்டான பிறகு,

 

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி

அதர்மச் செய்யும் கடவுளர்கள்

இந்த உலகத்தில் வாழும் நிலை உண்டான பிறகு,

 

இந்த உலகத்தில்

உண்மையானவர்கள்,

நேர்மையானவர்கள்,

நல்லவர்கள்

வாழ வழி இல்லாமல் போன பிறகு

 

இந்த மனிதர்களுடன் வாழ நான் விரும்பவில்லை

மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகிறேன்.

நாட்டை விட்டு காட்டிற்குள் செல்லவே விரும்புகிறேன்.

 

நான் இந்த உலகத்தில் பிறந்த கடமை முடிந்து விட்டது.  நான்  இந்த உலகத்திற்கு வந்த வேலையை முடித்து விட்டேன். இதற்கு மேல் நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.

இதற்கு மேல் அந்த ஸ்யமந்தகமணி எனக்குத் தேவையில்லை. அதை வைத்திருக்கவும் நான் விரும்பவில்லை.

நான் என்னுடைய ஸ்யமந்தகமணியை பிச்சையாகப் போடுகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். 

(என்று அஸ்வத்தாமன் தன்னுடைய நெற்றியில் இருந்த ஸ்யமந்தகமணியை வெட்டி எடுத்து கிருஷ்ணனுக்கு பிச்சை போட்டான்.

கிருஷ்ணன் அந்த ஸ்யமந்தகமணியை பிச்சையாகப் பெற்றுக் கொண்டான்.)

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1017 மரணமற்ற அஸ்வத்தாமன்-149 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1017

மரணமற்ற அஸ்வத்தாமன்-149

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆனால், நல்லவன் போல் நடித்த அர்ஜுனனை என் தந்தை நம்பி விட்டார். அதனால் தான் பிரம்மாஸ்திரத்தை முழுவதுமாக அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

 

இத்தகைய காரணத்தினால் தான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தும் வித்தை எனக்குத் தெரியும், திரும்ப அழைத்துக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியாது.

 

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள்.

 

வேத வியாசர் : பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைக்கும் வித்தை தெரியவில்லை என்றால் அதன் பாதையை மாற்று. அதை எதன் மீதாவது செலுத்து.

 

அஸ்வத்தாமன் : இரவிலே பாண்டவர்களைக் கொல்ல வந்த போது கிருஷ்ணன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அப்போது பாண்டவர்கள் தப்பித்தார்கள். ஆனால் பாண்டவர்களின் வாரிசை கொன்று விட்டேன்.

 

இப்போதும் பாண்டவர்களைக் கொல்ல வந்தேன். ஆனால், வேத வியாசரான தாங்கள் அவர்களைக் காப்பாற்றி விட்டீர்கள். என்னால் பாண்டவர்களைக் கொல்ல முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய வாரிசைக் கொல்கிறேன்.

 

உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி செலுத்துகிறேன். உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்கிறேன். பாண்டவர்களின் வாரிசு இந்த உலகத்தில் இல்லாமல் அழிக்கிறேன்.

 

பாண்டவர்களைப் போல அந்த குழந்தையும் இந்த உலகத்தில் பிறந்து சூழ்ச்சி செய்து வாழ வேண்டாம்.

 

அதனால் பிரம்மாஸ்திரமே உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் போய் கொன்று விடு.

 

(பிரம்மாஸ்திரம் உத்தரை இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி சென்று உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுகிறது)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமா எவ்வளவு கொடுமையான செயலைச் செய்து இருக்கிறாய்?

ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் இல்லையா?

அஸ்வத்தாமன் : எதைப் பாவம் என்கிறாய். நான் செய்தது பாவம் கிடையாது. பாவத்துடன் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

பாண்டவர்களாகிய பாவிகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தேடிக் கொண்ட பாண்டவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

அதுவும் அர்ஜுனனின் வாரிசைக் கொல்வது பாவமே கிடையாது.

குழந்தை பிறந்து, வளர்ந்து பாண்டவர்களைப் போல் சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தான் தேடிக்கொள்ளப் போகிறது.

அந்த குழந்தையைப் பாவம் பிடித்து கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான் உத்தரையின் குழந்தையைக் கொன்றேன்.

கிருஷ்ணன் : நீ கொன்று விட்டால் குழந்தை இறந்து விடும் என்று நினைத்தாயா?

குழந்தையைக் காப்பாற்ற யாரும் இல்லை என்று நினைத்தாயா?

குழந்தைக்கு உயிர் கொடுக்க யாரும் இல்லை என்று நினைத்தாயா?

நான் இருக்கிறேன். இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

குழந்தையை உயிரோடு எழுப்ப நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வாரிசுக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வம்சத்தை அழியாமல் காப்பதற்கு நான் இருக்கிறேன்.

பாணடவர்களுக்காக நான் இருக்கிறேன்.

பாண்டவர்களையும், பாண்டவர்களின் வம்சத்தையும் அழியாமல் பாதுகாக்க நான் இருக்கிறேன்.

நான் இருக்கும் வரை பாண்டவர்களையும், பாண்டவர்கள் வம்சத்தையும் யாரும் ஒன்றும் செய்து விடவும் முடியாது. அழித்து விடவும் முடியாது.

அஸ்வத்தாமா!

நீ செய்த செயல் எவ்வளவு கொடுமையான செயல் தெரியுமா

யாரும் செய்யாத செயல் தெரியுமா

யாருமே செய்ய யோசிக்கக் கூடிய செயல் தெரியுமா

இதுவரை இந்த செயலை யாரும் செய்ததில்லை தெரியுமா

நான் உனக்கு தரப்போகும் சாபம் இந்த உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

வருங்காலத்தில் இந்தகைய ஒரு செயலை செய்ய யாரும் யோசிக்கவே கூடாது செய்ய முயற்சி செய்யவே கூடாது.

பாவம் செய்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பணம் பதவி அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////