August 18, 2024

ஜபம்-பதிவு-1020 மரணமற்ற அஸ்வத்தாமன்-152 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1020

மரணமற்ற அஸ்வத்தாமன்-152

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரியோதனனுடன் பீமன் போர் புரியும் போது துரியோதனனின் இடுப்புக்குக் கீழே தொடையை அடித்து கொல்லச் சொன்னாய். பீமனும் அவ்வாறே செய்து துரியோதனனைக் கொன்றானே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து, ஜெயத்ரதன் வெளியே வந்ததும் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று சொல்லி

ஜெயத்ரதனை அர்ஜுனனை விட்டு கொல்லச் செய்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

பூரிசிரவஸ், சாத்தகி போர் செய்து கொண்டிருந்த போது அர்ஜுனனை வைத்து பூரிசிரவஸ் கையை வெட்டி எடுத்து சாத்தகி மூலம் பூரிசிரவஸ்ஸின் தலையை வெட்டச் செய்து பூரிசிரவஸ்ஸைக் கொன்றாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

அர்ஜுனனைக் கொல்வதற்காக கர்ணன் பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவச் செய்து கடோத்கஜனைக் கொன்று அர்ஜுனனின் உயிரைக் காப்பாற்றினாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

இவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்து விட்டு நல்லவன் போல நடிக்கிறாய்

இவ்வளவு அக்கிரமங்களையும், அநியாயங்களையும் செய்த நீ நல்லவன். சுயநலமாக இருக்கும் நீ நல்லவன்.

 

சொந்த அத்தையான குந்திதேவிக்காக அனைத்தையும் செய்யும் நீ நல்லவன்.

 

அத்தையின் மகன்களான பாண்டவர்களைக் காக்க போராடும் நீ நல்லவன்.

 

தர்மம் என்ற பெயரைச் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்யும்

நீ நல்லவன்

 

எந்த ஒரு விஷயத்திற்காகவும் ஆசைப்படாதவன்.

தந்தையின் மரணத்திற்காக பழி வாங்க நினைத்தவன்

நண்பன் துரியோதனன் மரணத்திற்காக அனைவரையும் கொன்றவன்

நீ செய்த தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டியவன்

நீ நல்லவன் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியவன்

உன் முகத்திரையைக் கிழித்தவன்

உன் போலி முகத்தை இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்படிச் செய்தவன்

உன் இரட்டை வேடத்தை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியவன்

இத்தகைய செயலைச் செய்த நான் கெட்டவன்.

 

நீ சாபம் கொடுத்தால் மற்றவர்களைப் போல்

நான் வாங்கி விட்டு

அமைதியாக சென்று விடுவேன் என்று நினைத்தாயா

 

நீ சாபம் கொடுத்தால் நான் வருந்துவேன் என்று நினைத்தாயா

 

உன் சாபத்தைக் கண்டு நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா

 

சாபம் கொடுத்தால் சாப விமோசனம் கொடு என்று

உன்னைக் கெஞ்சுவேன் என்று நினைத்தாயா

 

எதற்கும் அஞ்சாதவன் இந்த அஸ்வத்தாமன்

எதைப் பற்றியும் கவலைப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

பிச்சைப் போட்டுத்தான் பழக்கப்பட்டவன் இந்த அஸ்வத்தாமன்

பிச்சை எடுத்து பழக்கப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

தர்மத்தின் பெயரைச் சொல்லி சொல்லியே

அதர்மச் செயல்களைச் செய்து கொண்டிருக்கும் நீ சாபமிடலாம்

தர்மத்தையே பின்பற்றி தர்மத்தையே செய்து கொண்டிருக்கும்

நான் சாபமிடக்கூடாதா

 

கடவுள் மனிதனுக்கு சாபம் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை

ஆனால் மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது என்பது பெரிய விஷயம்

அத்தகைய ஒரு சாபத்தை நான் இப்போது உனக்கு கொடுக்கப் போகிறேன்

கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறேன்

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறான்

இந்த உலகத்தில் நடக்காத ஒரு விஷயம்

இனி இந்த உலகத்தில் நடக்க முடியாத ஒரு விஷயம்

மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது

இதோ நான் உனக்கு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த அஸ்வத்தாமன் உனக்கு சாபம் கொடுக்கிறேன்.

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறேன்.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

No comments:

Post a Comment