February 01, 2020

பரம்பொருள்-பதிவு-121


            பரம்பொருள்-பதிவு-121

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்காக- நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
துரியோதனன்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்கால உலகம்
இருள்மயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த
உலகம் வசைபாடும்"

"ஆனால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள்
வெற்றி பெற்று
விட்டார்கள் என்றால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த உலகம்
தெய்வமென வழிபடும் "

"அதனால் நீ
துரியோதனனுக்காக
களப்பலியாகக் கூடாது  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
வேண்டும் - என்று
நான் உன்னை
கேட்கமுடியாது?"

"ஏனென்றால் நீ
ஏற்கனவே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறாய் "

"இப்போது
துரியோதனனிடம்
சென்று
துரியோதனனுக்காக
களப்பலி ஆக
மாட்டேன் என்று
நீ சொன்னால் 
துரியோதனனுக்கு
நீ செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆவாய் "

"ஆனால், துரியோதனன்
வரவில்லை என்ற
காரணத்திற்காக
பாண்டவர்களுக்காக நீ
களப்பலியானாய் என்றால்
துரியோதனனுக்கு நீ
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டாய் "

"அதனால் தான் நான்
உன்னை கேட்கிறேன்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா ?"

அரவான் :
“நீங்கள் கேட்டதில்
எந்தவித முடிவும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லையே ! “

“அது அல்லது இது
என்று விடை
காண முடியாத
கேள்வியுடன் நிற்கிறது”

கிருஷ்ணன் :
“நம்முடைய
வாழ்க்கையில்
நமக்கு எதிராக
எதிர்ப்படுபவை எல்லாம்
அது அல்லது இது
என்ற நிலையில்
தான் இருக்கும் “

“சிலவற்றை நாம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;

சிலவற்றை காலம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;”

“நீ துரியோதனனுக்காக
களப்பலியாகப்
போகிறாயா அல்லது
பாண்டவர்களுக்காக
களப்பலியாகப்
போகிறாயா என்பதை
காலம் தான் தீர்மானம்
செய்ய வேண்டும் “

“அதனால் வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடு அது போதும் “

“மற்றதை காலம்
பார்த்துக் கொள்ளும்”

அரவான் :
"நான் கொஞ்சம்
யோசிக்க வேண்டும்?"

கிருஷ்ணன்  :
"அதர்மத்தை
நிலைவாட்டுவதற்காக
துரியோதனன்
உன்னை நாடி வந்து
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா?
என்று கேட்டபோது
யோசிக்காமல்
களப்பலியாகிறேன் ;
என்று வாக்கு
கொடுத்த - நீ
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
தர்மத்தை
நிலை நாட்டுவதற்காக
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா ?
என்று நான் கேட்கும்
போது மட்டும் எப்படி
நீ யோசிக்க
வேண்டும் என்கிறாய் ?"

"எதற்கு
யோசிக்க வேண்டுமோ?
அதற்கு எல்லாம்
யோசிக்காமல்
விட்டு விட்டு - எதற்கு
யோசிக்கக் கூடாதோ
அதற்கு எல்லாம்
யோசிக்க வேண்டும்
என்கிறாய் கேட்கவே
விசித்திரமாக இருக்கிறது "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------01-02-2020
//////////////////////////////////////////