May 29, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14

நம் முன்னோர்கள்
மருத்துவத்தில்
இரண்டு வகையான
முறையைக் கையாண்டனர்

ஒன்று  : நோய் அணுகாமல்
         பாதுகாப்பது

இரண்டு : நோய் ஏற்பட்டால்
         சிகிச்சை அளித்து
         நோயைக்
         குணப்படுத்துவது

நாம் அன்றாடம்
உண்ணும் உணவுமுறைகள்
பெரும்பாலும்
நோயைக் குணப்படுத்தக்
கூடியவையாகவும்,
எதிர்பாராத விதமாக
நோய் ஏற்பட்டு விட்டால்
நோயைக் குணப்படுத்தும்
வகையிலும்
இருப்பது தான்
நம் உணவு முறையின்
சிறப்பு

கருவாடு
உடல் உஷ்ணத்தைக்
குறைக்கும்
உடலிலிருந்து
உஷ்ணம் வெளியேற
கருவாட்டைப்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

கருவாட்டில்
நோய் எதிர்ப்பு சக்தி
உண்டு

அன்றைய
கால கட்டங்களில்
வெப்பத்தினால்
ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
மருந்தாகப் பயன்படுத்தப்
பட்டது.

இன்று
மருத்துவத் துறையில்
மருந்து கண்டுபிடிக்கப்படாத
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
சிறந்த மருந்தாகப்
பயன்படுத்தப் பட்டு
வருகிறது

தொற்று
நோய்க்கிருமிகளின்
தாக்கத்தால்
நோய் ஏற்படாமல்
இருக்கவும்
நோய் ஏற்பட்டால்
குணமடைச் செய்வதற்கும்
கருவாட்டை
பயன்படுத்தி
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்
நம் முன்னோர்கள்

அதன் மூலம்
நோயின் பாதிப்பால்
பாதிக்கப்பட்ட
உடலை நோயின்
தாக்கத்திலிருந்து
காப்பாற்றிக் கொண்டனர்

நோயின் தாக்கம்
அதிகமாக இருப்பது
கை,கால்களில்
வீக்கம் இருப்பது
குண் விழுந்து
நடந்து செல்ல
முடியாமல் தவிப்பது
தவழ்ந்து செல்வது
போன்ற
நோய்க் குறியின்
பாதிப்பு ஏற்பட்டால்
அவற்றிலிருந்து
தங்களை
பாதுகாத்துக் கொள்ள
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்

இன்றும்
மருந்து கண்டுபிடிக்கப்
படாத
இத்தகைய நோய்களுக்கு
கருவாட்டுக்
குழம்பை செய்து
பயன்படுத்தி
தங்களை நோயிலிருந்து
காப்பாற்றிக் கொள்கின்றனர்
மக்கள்

இத்தகைய
காரணங்களினால் தான்
கூழ் உடன்
கருவாட்டுக்
குழம்பையும் சேர்த்து
மக்களை
சாப்பிடச் சொன்னார்கள்

நோய் எதிர்ப்பு
சக்தியை
உண்டாக்குவதற்காகவும்
நோய் அணுகாமல்
தடுப்பதற்காகவும்
நோய் வந்து விட்டால்
நோயைக்
குணப்படுத்துவதற்காகவும்
கருவாட்டுக் குழம்பை
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

கூழ் உடன்
கருவாட்டுக் குழம்பு
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
முருங்கைக் கீரையையும்
எதற்காக
பயன்படுத்தினர்
என்பதை பார்ப்போம்

----------இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////