January 23, 2019

திருக்குறள்-பதிவு-87


                        திருக்குறள்-பதிவு-87

சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசுகிறார்……………………………..!

“ பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றி வரவில்லை ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்னபடி,
சூரியனை மையமாக
வைத்தே பூமி
சுற்றி வருகிறது ;
மற்ற கிரகங்களும்
சூரியனை மையமாக
வைத்தே சுற்றி வருகிறது ;”

“ இதைப் போல் எண்ணற்ற
சூரியக் குடும்பங்கள்
இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி
இருக்கிறது ;
இந்த பிரபஞ்சம்
எல்லையற்றது ; “

“கடவுள்  நமக்கும் மேலே
எல்லாவற்றுக்கும்
மேலே இல்லை ;
கடவுள் எல்லா
இடங்களிலும் ,
எல்லா உயிர்களிலும் ,
எல்லாப் பொருட்களிலும் ,
உள்ளும், புறமும்
நிரம்பி இருக்கிறான் ;
இறைவன் இல்லாமல்
எந்த ஒன்றும் இயங்காது ;
இந்த தத்துவத்தை
புரியாத மதவாதிகள்
சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தை
அறியாமை நிறைந்த
பல்கலைக் கழகமாக
மாற்றி வைத்து
இருக்கிறார்கள் ; ”

“ மதக் கோட்பாடுகளை
கல்வியின் மீது
திணிக்காதீர்கள் ;
மதவாதிகளின்
கட்டுப் பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்கள்
மூலம் கற்பிக்கப்படும்
கல்வியே சுதந்திரமான
கல்வியாக இருக்கும் ;
அங்கே தான் சுதந்திரமான
தத்துவமும், அறிவியலும்
பிறக்கும் “

 “இத்தகைய ஒரு
கல்வி இந்த சமுதாயத்திற்கு
கிடைக்குமானால்
சார்போன் (Sorbonne)
மற்றும் அனைத்து
பல்கலைக் கழகங்களிலும்
அறியாமை விலகி
விடுவதோடு
மட்டுமல்லாமல்
மதக்கோட்பாடுகள்
கல்வியை அடிமைப்
படுத்திக் கொண்டிருக்கும்
நிலையும் இருக்காது  ;
மனிதன் சுயமாக
சிந்தித்து தூய்மையான
ஆத்மாவைக் கொண்டு
சுதந்திரமாக வாழக்கூடிய
நிலையும் உருவாகும் “

 “பள்ளிக் கூடங்களிலும் ;
கல்லூரிகளிலும் ;
பல்கலைக் கழகங்களிலும் ;
அனைத்து கல்வி
நிலையங்களிலும் ;
வரையறுக்கப்பட்ட
அணுகுமுறைகளைக்
கொண்ட மதத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள
கல்வி தேவையற்றது “

“ அறிவைப் பெற வேண்டும்
என்று யாரெல்லாம்
தேடி வருகிறார்களோ…………..?
அவர்களுக்கு எல்லாம்
அனைத்து கல்வி
நிலையங்களும்
கல்வி கற்பிக்க
வேண்டுமே ஒழிய……………..
மதத்தைப் போதிக்கும்
மதவாதிகளின் கூடாரமாக
கல்வி நிலையங்கள்
இருக்கக் கூடாது………..? “

“ மதவாதிகளின் கட்டுப்
பாட்டில் இயங்கிக்
கொண்டிருக்கும் அனைத்து
கல்வி நிலையங்களிலும்
மதம் என்பது
தான் இருக்கும்- அங்கே
கல்வி என்பது
சிறிதும் இருக்காது - அங்கே
குழந்தை முதலே
மதவெறி தான்
கற்பிக்கப்படுமேயொழிய
கல்வி என்பது
கற்பிக்கப்படுவது இல்லை
அவைகள்
மதவெறியர்களைத் தான்
உருவாக்குகிறதே தவிர
மனிதத் தன்மையுள்ள
மனிதனை
உருவாக்குவது இல்லை “

“ மதத்தன்மையுள்ள
குடும்பத்தில்
பிறந்த குழந்தைக்கு
எப்படி மதம் சார்ந்த
உணர்வுகள் ஊட்டி
வளர்க்கப்படுகிறதோ ;
அவ்வாறே ,
மதவாதிகளின்
கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
அனைத்து கல்வி
நிலையங்களிலும்
மதவெறி என்பது
ஊட்டி வளர்க்கப்படுகிறது ; “

“ மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்கிக் கொண்டிருக்கும்
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மனிதன் என்ற
நிலையில் உள்ளவன்
மிருகம் என்ற
நிலையை அடைகிறான் ;
ஆனால்,
மதத்தின் கட்டுப்பாட்டில்
இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும்
கல்வியின் மூலம்
மிருகம் என்ற
நிலையில் உள்ளவன்
மனிதன் என்ற
நிலையை அடைகிறான் ; “

“ மதவாதிகளின்
கட்டுப்பாட்டில் இயங்காத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
சமதர்ம சமுதாயம்
உருவாகும் ;  
இத்தகைய சமதர்ம
சமுதாயத்தில் ஒரு
குழந்தை பிறக்கும் போது
அந்த குழந்தை ஒரு புதிய
மனிதனாக பிறக்கும் ;
பிறந்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
மனிதன் புதிய மனிதனாக
மாற்றமடைவான் 

“ மதத்தின் கட்டுப்
பாட்டில் இல்லாத
கல்வி நிலையங்களால்
கற்பிக்கப்படும் சுதந்திரமான
கல்வியின் மூலமே
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;
புதிய மனிதன் பிறப்பான் ;

ஆமென்……………….!
ஆமென்……………….!
ஆமென்……………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-01-2019
/////////////////////////////////////////////////////////////