November 14, 2011

அபிஷேகம்


அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்
கோயில்களில் தெய்வ சிலைகளுக்கு  அபிஷேகம் செய்வதைப் பார்த்திருப்போம் பல்வேறு விதமான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப் படுகிறது எந்த பொருளைக் கொண்டு நாம் அபிஷேகம் செய்கிறோமோ அந்த பொருளுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும்
ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்

நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் சுகம் கிடைக்கும்
பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியாகும்
பசுவின் தயிரில் அபிஷேகம் செய்தால் புத்ர விருத்தி ஏற்படும்
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் அழிவார்கள்
விபூதியினால் அபிஷேகம் செய்தால் போக வாழ்வும் மோட்சமும் கிடைக்கும்
வலம்புரி சங்கினால் நீர் அல்லது பாலினால் அபிஷேகம் செய்தால் தீவினைகள் நீங்கும்
சந்தனமும் பன்னீரும் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வ வசதி பெருகும்
கலச நீரினால் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும்
மாம்பழத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவித வெற்றியையும் பெறலாம்
சொர்ணாபிஷேகம்  செய்தால் எல்லாவித லாபங்களும் ஏற்படும்
பஞ்சகவ்யம் ( பால் தயிர்  நெய் கோமியம் சாணம் ) இதில் அபிஷேகம் செய்தால் பாபம் போகும்
பஞ்சாமிர்தம் ( கற்கண்டு சர்க்கரை நெய் பழம் தேன்) இவைகள் கலந்து அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்
இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்ப வாழ்க்கை நலம் பெறும்
சந்தனத்தில் அபிஷேகம் செய்தால் எல்லா ஐஸ்வரியமும் கிடைக்கும்
பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்
மஞ்சள் துhளினால் அபிஷேகம் செய்தால் ராஜவசியம் ஏற்படும்
கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்
தேனில் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்
வாழைப் பழத்தினால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிப்பு ஏற்படும்
அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வு ஏற்படும்
சித்தனாதி தைலத்தால் அபிஷேகம் செய்தால் மனநிம்மதி பெறலாம்
நறுமணப் பொடியால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை நீங்கும்
எலுமிச்சை பழச்சாறினால் அபிஷேகம் செய்தால் பகை நீங்கும்



அபிஷேகம் - கடவுள் - கிழமை
பலன்கள் பலவற்றை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் அபிஷேகத்தை எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு செய்ய வேண்டும் என்பதை பற்றிப் பார்ப்போம்

விநாயகருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்
சிவபெருமானுக்கு திங்கள் கிழமைகளில் செய்ய வேண்டும்
முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும்
விஷ்ணுவிற்கு புதன் கிழமைகளில் செய்ய வேண்டும்
தட்சிணாமூர்த்திக்கு வியாழன் கிழமைகளில் செய்ய வேண்டும்
சக்தி தெய்வத்திற்க்கு வெள்ளி கிழமைகளில் செய்ய வேண்டும்
கண்ணபிரானுக்கு சனி கிழமைகளில் செய்ய வேண்டும்


நவகிரகங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்
துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்
(ராகு காலத்தில் குங்கும அர்ச்சனை ஞாயிற்றுக் கிழமையிலும் செய்யலாம்)