March 31, 2019

5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            5-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

“போராளிகள்
தோற்பதில்லை
போராட்டங்கள் தான்
தோற்று இருக்கின்றன”
என்ற வரலாற்று உண்மை
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கைக்கு மிகத்
தெளிவாக பொருந்தும்

உலகில் எந்த ஒரு
இடத்திலும்
மக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து
விடப்பட்டாலோ
மக்களை இழிவாக
நினைத்து நடைமுறைக்கு
ஒவ்வாத செயல்கள்
அரங்கேற்றப் பட்டாலோ
மக்களை
அடிமைப்படுத்துவதற்குத்
தேவையான சதித்திட்டங்கள்
தீட்டப்பட்டாலோ
அங்கெல்லாம்
அநியாயங்களை தட்டிக்
கேட்பதற்கு உண்மையான
ஒரு போராளி அந்த
இடத்தில் உருவாகுகிறான்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களுக்கு
எதிராக - அந்த போராளி
பல்வேறு விதமான
போராட்டங்களை
முன்னிறுத்தி
நடத்துகிறான் - ஆனால்
பல போராட்ங்கள்
வெற்றி பெறாமல்
தோற்று விடுகின்றன

அந்த போராளி
சொல்லும் கருத்துக்கள்
உண்மையானவைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கின்றன - என்று
மக்கள் அவர்
பின்னால் அணிவகுத்து
நிற்கின்றனர்
அவரை முழுவதுமாக
நம்பி அவர் பின்னால்
மக்கள் செல்லத்
தயாராகி விட்டனர்

என்பதை உணர்ந்த
மக்களை அடிமைப்படுத்த
நினைக்கும் ஆதிக்க
வர்க்கம்- இந்த போராளி
உயிரோடு இருந்தால்
நமக்கு ஆபத்து என்று
பயந்து பல்வேறு
குற்றச்சாட்டுக்களை
அவர் மேல் சுமத்தி
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறது

மக்களுக்காக உண்மையாக
உழைக்கும் போராளிகளை
யாரும் விலை குடுத்து
வாங்க முடியாது
அதனால் அத்தகைய
போராளிகளை
கொன்று விடுகிறார்கள்

அந்தப் போராளியைக்
கொன்றாலும் - அவர்
சொல்லிச் சென்ற
கருத்துக்கள்  - அவர்
விட்டுச் சென்ற
செயல்கள் - அவர்
நடத்திய போராட்டங்கள்
ஆகியவற்றை மக்கள்
கொண்டு செல்வர்
மீண்டும் போராட்டங்களை
நடத்தத் துணிவர்

பல நூற்றாண்டுகள்
கடந்து அவரை நினைத்து
அவருடைய கருத்தைப்
பின்பற்றும் மக்கள்
அவரை நினைத்து
போற்றுவர்
அவர் முன்னெடுத்துச்
சென்ற போராட்டங்களை
நடத்த முற்படுவர்

மக்களை அடிமைப்படுத்த
நினைப்பவர்களை எதிர்த்து
போராட்டம் நடத்திய
போராளியின் போரட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும் அவர்
கொல்லப்பட்ட பிறகும்
மக்கள் அவருடைய
கருத்தை பின்பற்றி
நடந்து அவர் பின்னால்
நடக்கிறார்கள் என்றால்
அந்த போராளி
தோற்காமல்
மக்கள் மனதில்
என்றும் இருந்து
கொண்டு இருக்கிறார்
என்று பொருள்

அதைப் போல் தான்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி மக்களை
அடிமைப்படுத்துவதற்கு
தேவையான முயற்சிகளை
செய்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவ மதம்
தன் முயற்சிகளை
நிறுத்த வேண்டும்

கிறிஸ்தவ மதம்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
சர்ச்சுகள்
பைபிள்
ஆகியவற்றில் சீர்திருத்தம்
கொண்டு வர வேண்டும
என்று போராடியதால்
கிறிஸ்தவ மதத்தினரால்
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்

அவர் நடத்திய
போராட்டங்கள்
தோல்வியுற்றாலும்
அவர் பல நூற்றாண்டுகள்
கடந்தும் இன்னும் மக்கள்
மனதில் இருக்கிறார்

ஆம் ஜியார்டானோ
புருனோ என்ற போராளி
தோற்கவில்லை
அவர் நடத்திய போரட்டம்
மட்டுமே தோற்றது
என்பதை உணரும்போது
ஜியார்டானோ புருனோ
என்ற போராளியின்
போராட்ட வாழ்க்கை
நமக்கு புரிய
ஆரம்பிக்கும்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
நடத்திய போராட்டம்
வெற்றி பெறவில்லை
என்றாலும்
ஜியார்டானோ புருனோ
என்ற போராளி
தோற்கவில்லை
என்பதற்கு அவரை
சிறையில் வைத்து
சித்திரவதை செய்து
மன்னிப்பு கேட்கச்
சொல்லியும் அவர்
மன்னிப்பு கேட்காமல்
இருந்ததே சாட்சி
என்பதை இந்த
வீடியோவின் மூலம்
தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////



March 29, 2019

4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

              4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

இந்து மதத்தில் சாதி
என்ற ஒன்றை
பயன்படுத்தி
மனிதர்களுக்குள் ஏற்றத்
தாழ்வுகளை உருவாக்கி
மனிதனை மனிதன்
அடிமைப்படுத்தும் மிகவும்
இழிவான செயல் நடை
பெற்றுக் கொண்டிருந்ததை
கடுமையாக எதிர்த்தார்
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியார்

இந்த மதத்தில் நடை
பெற்று வரும் இத்தகைய
செயல்கள் திருத்தப்பட்டு
இந்து மதம் சீர்திருத்தப்பட
வேண்டும் என்றார்

“இந்து மதக் கோயில்களில்
காலம் காலமாக கடை
பிடிக்கப்பட்டு வரும்
மத பழக்க வழக்கங்களில்
உள்ள மூட நம்பிக்கைகள்
தகர்த்தெறியப்பட வேண்டும்
என்றார் ;”

“ இந்துக்களின் புனித
நூல்களில் உள்ள தவறுகள்
களைந்தெறியப்பட
வேண்டும் என்றார் ;”

“இந்துக்கள் கடை பிடித்து
வரும் வழிபாட்டு
முறைகளில் மாற்றங்கள்
கொண்டு வரப்பட
வேண்டும் என்றார்”

“இந்துக்களில் இந்து
மதத்தன்மை
கொண்டவர்கள்
தவிர்த்து - இந்து
மதப்பற்று
கொண்டவர்கள் அனைவரும்
தந்தை பெரியாரை
எதிர்த்தனர்;’

இந்து மதத்தை
எதிர்த்த காரணத்திற்காக
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியாரையே
இந்து மதப்பற்று
கொண்டவர்கள்
அவரை எதிர்த்து அவரை
இழிவு படுத்தினார்கள்
என்றால் (1548-1600)-ல்
உலகையே தன்
ஆளுகையின் கீழ்
வைத்திருந்த கிறிஸ்தவ
மதத்தை எதிர்த்த
ஜியார்டானோ
புருனோவை
எவ்வளவு எதிர்த்து
இருப்பார்கள் - இழிவு
படுத்தி இருப்பார்கள்

அதுவும் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுகிறவர்களை
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்வதும் ;
உயிரோடு எரித்துக்
கொல்லப்படுவதும் ;
போன்ற தண்டனைகள்
நிறைவேற்றப்பட்டுக்
கெண்டிருந்த காலத்திலேயே
ஜியார்டானோ புருனோ

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்னார் என்றால் ; ‘

“ சர்ச்சுகளில் கடை
பிடிக்கப்பட்டு
வரும் மத பழக்க
வழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“பைபிளில் உள்ள
கருத்துக்கள் தவறாக
உள்ள காரணத்தினால்
அவைகள் திருத்தப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;’

“ கிறிஸ்தவர்கள் பின்பற்றி
வரும் இறை வழிபாட்டில்
உ.ள்ள குறைகள்
நிவர்த்தி செய்யப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“ ஜியார்டானோ புருனோ
எத்தகைய நெஞ்சுரம்
படைத்தவராக இருந்திருக்க
வேண்டும் ;

மரணத்தைக் கண்டு
பயப்படாத மாமனிதராக
இருந்திருக்க வேண்டும் ;

தன்னுடைய கொள்கைக்காக
எல்லாவற்றையும்
இழக்கத் துணிந்த
பேராற்றல் படைத்தவராக
இருந்திருக்க வேண்டும் ;

கிறிஸ்தவ மதத்தால்
மக்களை
அடிமைப்படுத்துவதற்காக
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் தடுக்கப்பட
வேண்டும் என்ற
காரணத்திற்காக - கிறிஸ்தவ
மதத்தையே எதிர்க்கத்
துணிந்த மனதைரியம்
படைத்த ஒருவராக
இருந்திருக்க வேண்டும் ;

பிற உயிர்கள் வாழ்வதற்காக
தன்னுடைய உயிரை
தரத் தயாராக இருந்த
கருணை உள்ளம்
கொண்டவராக
இருந்திருக்க வேண்டும் ;

என்பதை நாம் சற்று
சிந்தித்துப் பார்த்தோமேயானால்
ஜியார்டானோ புருனோவைப்
பற்றி நாம் தெள்ளத்
தெளிவாக புரிந்து
கொள்ள முடியும் !

ஜியார்டானோ புருனோவின்
புரட்சிகரமான வாழ்க்கை
வரலாறு நிறைவு
பெற்றாலும்-அவர்
விட்டுச் சென்ற நினைவுகள்
நம் மனதை விட்டு
என்றும் அகலாது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

March 28, 2019

3-ஜியார்டானோ புருனோ உருவான கதை


           3-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

திரைப்படத் துறையில்
பணிபுரியும் பலர்
என்னுடைய நண்பர்கள்-அதில்
திரைக்கதை வசனம்
எழுதுபவர்களில் மிகவும் திறமை
வாய்ந்த ஒருவர் என்னுடைய
நண்பர் அவரை போனில்
தொடர்பு கொண்டு பேசினேன்

நான் அவரிடம் ஜியார்டானோ
புருனோ என்பவருடைய
வாழ்க்கை வரலாற்றை
எழுதிக் கொண்டு வருகிறேன்
விசாரணைக் காட்சிகளை
திரைக்கதை வசனம் வடிவில்
எழுதலாம் என்று இருக்கிறேன்
சரியாக வருமா பார்த்துச்
சொல்லுங்கள் - நான் அந்த
கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள் என்றேன்

அவர் சொல் என்று
சொன்னவுடன் நான்
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை
எளிமையாக புரியும்படி
சொன்னேன்-அமைதியாக
கேட்டுக் கொண்டிருந்த அவர்
கதையை நான் சொல்லி
முடித்ததும் என்னிடம்
பேசத் தொடங்கினார்

திரைக்கதை வசனம்
எழுதும் போது எளிமையானதாக
இருப்பதை எடுத்து எழுத
வேண்டும் குடும்ப கதை
காதல் கதை எழுதினால்
எளிமையாக எழுதுவதற்கு
உதவிகரமாக இருக்கும்
வரலாற்றுக் கதையை
கற்பனையில் எழுதலாம்
உண்மை வரலாற்றுக் கதையை
அதுவும் ஜியார்டானோ புருனோ
போன்ற சிக்கலான வரலாற்றுக்
கதையை எழுதக் கூடாது

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு என்பது
சிக்கலான கதை அதற்கு
சரியான விதத்தில் திரைக்கதை
வசனம் எழுதவில்லை என்றால்
கதை காமெடி படமாகிவிடும்
ஏற்கனவே கொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவை
மீண்டும் கொன்றதாகி விடும்

ஆரம்பத்தில் திரைக்கதை
வசனம் எழுத ஆரம்பிப்பவர்கள்
எளிமையான கதையாக
எடுத்து எழுத வேண்டும்
இதைப்போன்ற கதைகளை
தேர்வு செய்வது என்பது
தவறாக முடிந்து விடும்
என்று அவர் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே
நான் சரி நீங்கள் எதுவும்
சொல்ல வேண்டாம் நான்
எழுதுகின்ற கதையை
உங்களுக்கும் அனுப்புகிறேன்
படித்துப் பாருங்கள் என்று
கோபத்துடன் போனை
வைத்து விட்டேன்

ஆனால் யோசித்து பார்த்ததில்
அவர் சரியாகத் தான்
சொன்னார் நான் கோபப்பட்டது
தான் தவறு என்று உணர்ந்தேன்

திரைக்கதை வசனம்
சரியாக அமையவில்லை
என்றால் ஜியார்டானோ
புருனோ என்ற புரட்சியாளரின்
வாழ்க்கை வரலாறு
நகைப்புக்கு இடமாகிவிடும்
எனவே, திரைக்கதை வசனம்
சரியாக அமைய வேண்டும்
என்று பெரு முயற்சி
எடுத்து விசாரணைக்
காட்சிகளை எழுதினேன்

ஒவ்வொரு விசாரணைக்
காட்சியும் வித்தியாசமான
திரைக்கதையுடன் அமைத்தேன்
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட
17-02-1600 அன்று வரை
அனைத்து விசாரணைக்
காட்சிகளையும் மிகுந்த
கவனத்துடன் எழுதினேன்
17-02-2019 பல்வேறு தடைகளுக்கு
மத்தியில் ஜியார்டானோ
புருனோவை உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட காட்சிக்கான
பதிவையும், வீடியோவையும்
பதிவு செய்து விட்டேன்

அன்றைய நாளில் இரவு
10.30 மணிக்கு எனக்கு
ஒரு போன் கால் நான்
கோபப்பட்ட திரைக்கதை
வசனம் எழுதும் என்
நண்பர் நான் உன்னிடம்
கொஞசம் பேச வேண்டும்
என்றார்- பேசுங்கள் என்றேன்

அவர் பேசினார்
“ உன்னுடைய திரைக்கதை
வசனத்தால் எழுதப்பட்ட
ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு
அனைவருக்கும் பிடிக்கும்”

“அதைப்போல ஜியார்டானோ
புருனோவை யாருக்கெல்லாம்
பிடிக்காதோ அவர்களை
எல்லாம் அழைத்து வந்து
நீ எழுதிய திரைக்கதை
வசனம் கொண்ட ஜியார்டானோ
புருனோ வாழ்க்கை வரலாற்றை
படிக்கச் சொன்னால்
ஜியார்டானோ புருனோவை
பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்
அதற்குக் காரணம் திரைக்கதை
வசனத்தில் நீ கையாண்டிருக்கும்
தமிழ் என்று அவர் சொன்ன
போது அவர் என் மேல் உள்ள
அன்பால் அவ்வாறு சொன்னார்
என்பதை உணர்ந்து கொண்டேன்

 “தன்னிடம் என்ன திறமை
இருக்கிறது என்பதை
கண்டுபிடிப்பதற்கு காலம்
பல வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுக்கிறது ! - அந்த
வாய்ப்புகளை பயன் படுத்திக்
கொண்டு தன்னிடம்
என்ன திறமை இருக்கிறது
என்பதை கண்டு பிடித்து
செயல்படுத்தத் தெரிந்தவனால்
மட்டுமே மக்கள் மனதில்
இடம் பிடிக்கவும் முடியும் ;
இந்த உலகத்தையே தன்னை
நோக்கி திரும்பிப் பார்க்க
வைக்கவும் முடியும்;-தன்னிடம்
என்ன திறமை இருக்கிறது
என்பதை கண்டு பிடிக்க
முடியாதவன் இந்த உலகத்தை
பார்த்தவாறு இருக்க வேண்டியது
தான் என்ற ரகசியத்தை
தெரிந்து கொண்டேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்