March 13, 2019

திருக்குறள்-பதிவு-125


                     திருக்குறள்-பதிவு-125

“உலகமே உற்றுக்
கவனித்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கும் நாளான
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம்
9-ம் தேதி அதிகாலை
சூரியன் உதிக்க
ஆரம்பித்து விட்டது ;
விடியல் விடியத்
தொடங்கி விட்டது ;
உயிர்கள் விழிக்கத்
தொடங்கி விட்டது ;”

“ வீடுகளிலும் ;
தெருக்களிலும் ;
கடைகளிலும் ;
மக்கள் கூடும்
அனைத்து இடங்களிலும் ;
மக்களுடைய
பேச்சுச் சத்தமோ
மக்களுடைய
காலடி ஓசையோ
எதுவுமே கேட்கவில்லை ;
மக்கள் அனைவரும்
தங்களுடைய வீட்டின்
கதவுகள் ;
ஜன்னல்கள் ; ஆகிய
அனைத்தையும்
அடைத்து வைத்து
விட்டு வீட்டிற்குள்
அமைதியாக இருந்தனர் “

“மக்கள் அனைவரும் தங்கள்
உயிரை கைகளில் பிடித்துக்
கொண்டு என்ன
நடக்கப் போகிறதோ என்ற
அச்சத்துடன் இருந்த
காரணத்தினால் - யாரும்
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ”

“தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தது ;
அந்த நகரம் முழுவதும்
மயான அமைதி நிலவியது ;

“சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக
மேலேறத் தொடங்கியது ;”

“ அந்த நேரத்தில் யாரும்
எதிர்பாராத வகையில்
தெருக்களில் மக்கள்
பேசும் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
வீட்டிற்குள்
இருந்தவர்களுக்கு கேட்டது “

“ நேரம் ஆக ஆக
மக்களுடைய
பேச்சுச் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
அதிகரித்துக்
கொண்டே வந்தது; “

“ மக்கள் அனைவரும்
கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டை விட்டு வெளியே
வரத் தொடங்கினர் ;
அவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தை நோக்கி
சென்று அந்த இடத்தில்
ஒன்றாக கூடினர் “

“ அந்த இடத்தில் உள்ள
வீடுகளில் உள்ளவர்கள்
தங்கள் வீடுகளிலுள்ள
கதவுகளையும் ;
ஜன்னல்களையும் ;
திறந்து வெளியே நடக்கும்
நிகழ்வுகளை பார்த்துக்
கொண்டு இருந்தனர் ;
மாடிகளில் ஏறி நின்று
கொண்டு பார்த்துக்
கொண்டு இருந்தனர் ; “

“அந்த இடம் முழுவதும்
மக்கள் வெள்ளத்தால்
நிரம்பி வழிந்தது ;
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்கள் மட்டுமல்ல
மக்களும் அதிக அளவில்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ;”

“ கத்தோலிக்க திருச்சபையின்
எச்சரிக்கையையும் மீறி
ஏராளமானவர்கள் அந்த
இடத்தில் கூடி இருந்தனர் “

“சிறுவர் முதல் முதியோர்
வரை வயது பேதம்
இல்லாமல் அந்த இடத்தில்
கூடி இருந்தனர் “

“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
உண்மையானது ;
நியாயமானது ; - என்று
நினைத்து அவரைப்
பின்பற்றுபவர்கள் ;
தலை சிறந்த
தத்துவ மேதைகள் ;
சிறந்த அறிஞர்கள் ;
புகழ் பெற்ற பேச்சாளர்கள் ;
என்று கணக்கிலடங்காதவர்கள்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ; “

“ மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே நிரம்பி
வழிந்து கொண்டிருந்தது ;
மக்கள் தொடர்ந்து
அந்த இடத்தை நோக்கி
வந்து கொண்டு இருந்தனர் ; “

“ வெயிலின் தாக்கம்
அதிகமாக இருந்தது ;
மக்கள் அனைவரும்
வெயிலின் வெம்மையிலிருந்து
தங்களை பாதுகாத்துக்
கொள்வதற்காக
தாங்கள் கொண்டு வந்த
குடையை பிடித்துக் கொண்டு
நின்று கொண்டு இருந்தனர் ; “

“ பலத்த கரகோஷங்களுக்கு
இடையே மக்களுடைய
ஆரவாரங்களுக்கிடையே
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை ;
வாத்திகனைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ள சிலை ;
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
திறக்கப்பட்டது ;”

“ அடிமை விலங்கை
அறுத்தெறிய வந்த
புரட்சியாளர் ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

“ மதவெறிக்கு
அடிபணியாத மாமேதை ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

என்று அங்கு கூடியிருந்த
மக்கள் எழுப்பிய கரகோஷம்
அந்த நகரத்தையே
அதிர வைத்தது.

“ சிலையைத் திறந்து
வைத்து - அறிஞர்கள்
ஆற்றிய உரை வரலாற்று
முக்கியத்துவம் கொண்டவை
அவைகள்……………………………….!”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  13-03-2019
//////////////////////////////////////////////
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு
திறக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின்
சிலை இது தான்
///////////////////////////////////////////////