April 16, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3


  
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-3



இந்த ஒன்பது
மாணவர்களும்
மனப்பாடம் செய்தவர்கள்
திருக்குறளை இயற்றியது
திருவள்ளுவர்
என்று தொடர்ந்து
பலமுறை
மனப்பாடம் செய்தவர்கள்
விழுந்து விழுந்து
மனப்பாடம் செய்தவர்கள்

திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்ற வரியை
தொடர்ந்து
திரும்ப திரும்ப மனப்பாடம்
பண்ணி வைத்திருந்த
காரணத்தினால்
சாப்பிட்டதை
அப்படியே
வாந்தி எடுத்த மாதிரி
திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர்
என்று ஒன்பது
மாணவர்களும்
பதில் எழுதினர்

மூன்று மதிப்பெண்கள்
இந்தக் கேள்வியின் பதிலுக்கு
கொடுத்து இருக்கிறார்களே
நாம் எழுதும்
இந்த பதில் போதுமா
என்று யாரும்
நினைக்கவில்லை
இது சரியான பதிலா
என்று கூட
ஒன்பது மாணவர்களும்
நினைக்கவில்லை
படித்ததை
அப்படியே
எழுதி விட்டார்கள்
மனப்பாடம் செய்ததை
அப்படியே கக்கி விட்டார்கள்
இது தான் கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்
செய்யும் செயல்

தாங்கள் என்ன
கற்றுக் கொண்டோமோ
அதை அப்படியே
செய்வார்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள்

பத்து மாணவர்களில்
ஒரு மாணவன்
மட்டும் வித்தியாசமான
யோசனையை பயன்படுத்தி
எழுதினான்

தமிழ் மறை,
உத்தர வேதம்,
தெய்வ நூல்,
திருவள்ளுவம்,
திருவள்ளுவப்பயன்,
முப்பால்,
பொய்யாமொழி,
வாயுரை வாழ்த்து,
பொதுமறை,
பொருளுரை,
முதுமொழி,
உலகப்பொது மறை,
என்று பல்வேறு பட்ட
சிறப்புப் பெயர்களால்
அழைக்கப்படும்
திருக்குறளை
தெய்வப் புலவர்,
செந்நாப்போதார்,
பொய்யில் புலவர்,
நாயனார்,
நான்முகனார்,
மாதானுபங்கி,
முதற்பாவலர்,
திருநாவலர்,
தேவர்,
வான்புகழ் கொண்ட
பெருந்தகையார்
என்று பல்வேறு
பெயர்களால்
சிறப்பிக்கப்படக்கூடிய
திருவள்ளுவர்
என்பவர் இயற்றினார்

இவ்வாறு பதில் எழுதிய
ஒரு மாணவனுக்கு
மூன்றுக்கு மூன்று
மதிப்பெண்கள்
கிடைத்தது

ஒன்பது மாணவர்களும்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

மூன்றுக்கு மூன்று
மதிப்பெண் பெற்ற
மாணவன் மட்டுமே
வித்தியாசமான
யோசனைகளை பயன்படுத்தி
திறமையாக 
வேலை செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு

கஷ்டப்பட்டு வேலை
செய்தவன்
மூன்றுக்கு
ஒரு மதிப்பெண் பெற்றான்
ஆனால்
வித்தியாசமாக யோசித்து
திறமையாக வேலை
செய்பவன்
மூன்றுக்கு மூன்று மதிப்பெண்
பெற்றான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////