October 02, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-நன்றி-பதிவு-54



        இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-நன்றி-பதிவு-54  

                 “”பதிவு ஐம்பத்துநான்கை விரித்துச் சொல்ல 
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

அப்பொழுது , பேதுரு அவரிடத்தில் வந்து : ஆண்டவரே , என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால் , நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் ? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான் .
                                                ------மத்தேயு - 18 : 21
அதற்கு இயேசு : ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்கிறேன் .
                                                ------மத்தேயு - 18 : 22
எப்படியெனில் , பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது .
                                                ------மத்தேயு - 18 : 23
அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கினபோது , பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள் .
                                                ------மத்தேயு - 18 : 24
கடனைத் தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால் , அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும் , அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று , கடனைத் தீர்க்கும் படிக் கட்டளையிட்டான் .
                                                ------மத்தேயு - 18 : 25
அப்பொழுது , அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து , வணங்கி: ஆண்டவனே ! என்னிடத்தில் பொறுமையாயிரும் , எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான் .
                                                ------மத்தேயு - 18 : 26
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி , அவனை விடுதலைபண்ணி , கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான் .
                                                ------மத்தேயு - 18 : 27
அப்படியிருக்க , அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில் , தன்னிடத்தில் நுhறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு , அவனைப் பிடித்து , தொண்டையை நெரித்து : நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான் .
                                                ------மத்தேயு - 18 : 28
அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து : என்னிடத்தில் பொறுமையாயிரும் , எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று , அவனை வேண்டிக் கொண்டான் .
                                               ------மத்தேயு - 18 : 29
அவனோ சம்மதியாமல் , போய் அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்
                                                ------மத்தேயு - 18 : 30
நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர்  கண்டு , மிகவும் துக்கப்பட்டு ஆண்டவனிடத்தில் வந்து , நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள் .
                                                ------மத்தேயு - 18 : 31
அப்பொழுது , அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே , நீ என்னை வேண்டிக் கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் 
மன்னித்துவிட்டேன் .
                                                ------மத்தேயு - 18 : 32
நான் உனக்கு இரங்கினதுபோல , நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி ,”
                                                ------மத்தேயு - 18 : 33
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து , அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒபபுக் கொடுத்தான்.
                                                ------மத்தேயு - 18 : 34
நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார் .”
                                                ------மத்தேயு - 18 : 35

மன்னித்தல் என்பது மிகப் பெரிய செயல் .
தனக்கு துன்பம் செய்தவரை மன்னித்தல் என்பது
இரண்டு வேறுபட்ட நிலைகளில் நடந்து கொண்டிருக்கிறது.

ஓன்று : உதட்டளவில் மன்னிப்பது .
மற்றொன்று : உள்ளத்தளவில் மன்னிப்பது .
உதட்டளவில் மன்னிப்பவர்
தனக்கு துன்பம் செய்தவருக்கு எதிராக
செயல்களைச் செய்வதற்குரிய செயல்களை
உள்ளத்தளவில் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்.
உள்ளத்தளவில் மன்னிப்பவர்
தனக்கு துன்பம் செய்தவருடைய செயலை
நினைவில் கொள்ளாமல் அதனை மறந்து
தன் வேலைகளைச் செய்து கொண்டிருப்பார் .

உதட்டளவில் மன்னிப்பவர்  தான் கருணை உள்ளம் கொண்டவர்
என்பதை காட்டுவதற்காகவும் ,
சமுதாயத்தில் தன் அந்தஸ்தை உயாத்திக் கொள்வதற்காகவும் ,
சமுதாயத்தை தன் பக்கம் இழுப்பதற்காகவும் ,
தன் உயர்வை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் ,
தன் பெயரை உயர்த்திக் கொள்வதற்காகவும் ,
தான் இரக்கம் கொண்டவன் என்பதை சமுதாயம் நம்புவதற்காகவும் ,
தான் அன்பினால் நிரப்பப்பட்டவள் என்பதை
மக்கள் ஏற்றுக் கொள்வதற்காகவும் ,
தன்னுடைய மதிப்பை வளர்த்துக் கொள்வதற்காகவும் ,
தான் வாழ்வை செழிப்பான நிலையில் அமைத்துக் கொள்வதற்காகவும் ,
மக்கள் தன்னுடைய பேச்சை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல்
ஏற்றுக் கொள்வதற்காகவும் ,
மக்களைத் தனக்கு கீழே அடிமையாக வைத்துக் கொள்வதற்காகவும் ,
மக்கள் முன்னிலையில் , மக்கள் திரண்டிருக்கும் வேளையில் ,
மக்கள் குழுமியிருக்கும் சமயத்தில், பாசாங்கு செய்து
நல்லவன் போல் நடித்து உதட்டளவில் மன்னிப்பவர்
யாருமில்லா வேளையில் , தனித்திருக்கும் சமயத்தில் ,
தனக்கு எதிராக துன்பம் செய்தவனுடைய செயலை
உள்ளத்தளவில் நினைத்து ,
அவரை துன்பப்படுத்தக் கூடிய

அவரை அவமானப்படுத்தக் கூடிய ;
அவரை  வருத்தப்பட வைக்கக் கூடிய

அவரை கலங்க வைக்கக் கூடிய ;
அவரைக் கண்ணீர்  சிந்த வைக்கக் கூடிய ;
செயல்களைச் சிந்தித்து திட்டம் வகுத்து
செயல்களை நடத்திட காலம் பார்த்திருப்பார் ;
துரோக வேலை செய்ய துடித்துக் கொண்டிருப்பார் ;
குள்ளநரி  வேலை செய்ய திட்டம் வகுத்துக் கொண்டிருப்பார் ;
குழி பறிக்கும் வேலையில் இறங்கிக் கொண்டிருப்பார் ;
உதட்டளவில் மன்னிப்பவர்  செயல் இப்படித் தான் இருக்கும் .
உதட்டளவில் மன்னிப்பவர்  உதட்டளவில் மன்னித்து விட்டு
உள்ளத்தளவில் குழி பறிக்கும் வேலை செய்து கொண்டிருப்பார் .

உள்ளத்தளவில் மன்னிப்பவர்  தன் செயலால்
தன் நடவடிக்கையால் உயர்ந்து நிற்பார் .
உள்ளத்தளவில் மன்னிப்பவர்  தனக்கு எதிராக
துன்பம் செய்தவருடைய செயலை மன்னித்து விடுவதோடு
அதை மேலும் , மேலும் நினைக்காமல் மறந்து விடுவார் .
மன்னித்தல் என்பது மனித குணம் .
மறத்தல் என்பது தெய்வ குணம் .
உள்ளத்தளவில் மன்னிப்பவர்  தனக்கு 

துன்பம் செய்தவருடைய செயலை
மேலும் , மேலும் நினைக்காமல் மறந்து விடுவதால்
அவர்  தெய்வ நிலைக்கு உயர்த்தப் படுகிறார்.

உதட்டளவில் மன்னிப்பவர்  மன்னிப்பது போல நடிப்பவர்
தனக்கு எதிராக துன்பம் செய்தவருடைய செயலை மறக்காமல்
அதனையே நினைத்துக் கொண்டு அவருடைய செயலுக்கு எதிராக
திட்டங்களை மேலும் மேலும் தீட்டிக் கொண்டிருப்பதால்
விலங்கு நிலைக்கு தாழ்த்தப்படுகிறார் .
உதட்டளவில் மன்னிப்பவர்  விலங்கு நிலைக்கு தாழ்த்தப்படுகிறார் ;
உள்ளத்தளவில் மன்னிப்பவர்  தெய்வ நிலைக்கு உயர்த்தப் படுகிறார் ;
மனிதன் தனக்கு எதிராக ஒருவர்  செய்த
துன்பத்தை மன்னிக்கும் போது மனிதனாகிறான் ;
மறக்கும் போது தெய்வமாகிறான் ;
மறக்காத போது விலங்காகிறான்;

அத்தகைய மன்னிப்பைப் பற்றி ,மன்னிக்கும் தன்மையைப் பற்றி ,
மன்னிக்கும் விதம் பற்றி , எத்தகைய முறைகளை பின்பற்றி
மன்னிக்க வேண்டும் என்பதனைப் பற்றி ,
விளக்கங்கள் பெறுவதற்காக பேதுரு இயேசுவினிடத்தில் வந்து
என் சகோதரன் எனக்கு எதிராக
குற்றங்களைச் செய்தால் நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்
ஏழுதரம் மட்டும் மன்னித்தால் போதுமா? என்றான்.
அதற்கு இயேசு ஏழு தரம் அல்ல ஏழெழுபது தரம் மட்டும்
என்று உனக்குச் சொல்கிறேன் என்றார் .
கேட்கப்பட்ட கேள்வியில் உள்ள ஏழுதரம் என்பது
எண்ணிக்கையைக் குறிப்பது .
விடையளிக்கப் பட்டதில் உள்ள ஏழெழுபது தரம் என்பது
எண்ணிக்கையைக் குறிப்பதல்ல .
ஏழுதரம் என்பது எண்ணிக்கைக்கு உட்பட்டது ;
ஏழெழுபது தரம் என்பது எண்ணிக்கைக்கு உட்பட்டதல்ல ;

குறிப்பட்ட எண்ணிக்கை வரை ஒரு செயலானது
நம் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் .
அதே செயலானது குறிப்பிட்ட எண்ணிக்கையை கடந்து விட்டால்
நம் ஆளுகைக்கு உட்பட்டு இருக்காது
அது அனிச்சைச் செயலாகி விடும் .
இயேசு குறிப்பிடும் ஏழெழுபது தரம் என்பது
மன்னித்தல் அனிச்சைச் செயலாகி விட வேண்டும்
என்பதை குறிப்பதற்காகத் தான்   .
முதல் முறை மன்னிக்கும் போது மனமானது சிந்திக்கும்
மன்னிக்கலாமா? வேண்டாமா என்று
இரண்டாவது முறை , மூன்றாவது முறை என்று
படிப்படியாக மன்னிக்கும் போது மனமானது
மன்னித்தலுக்கு பழகி விடும் .
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இயங்கிக் கொண்டு
மன்னித்துக் கொண்டு இருக்கும் மனம்
குறிப்பிட்ட எண்ணிக்கையை  கடந்து விட்டால்
மன்னித்தலுக்கு பழகி விட்டால்
மன்னித்தல் அனிச்சைச் செயலாகி விடும் .
மன்னித்தல் அனிச்சைச் செயல் ஆவது என்பது மிக உயர்ந்த நிலை .
இத்தகைய ஒரு உயர்வான நிலையை ஒருவன்
அடைய வேண்டும் என்பதற்குத் தான்
இயேசு ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டும் அதாவது
மன்னித்தல் அனிச்சைச் செயலாகி விட வேண்டும் என்கிறார் .

இதனை ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் :
ராஜாவுக்கு ஒப்பாயிருந்த ஒருவர்  
தன் ஊழியக்காரர்களின் கணக்குகளைச்  சரிபார்த்தலின் காரணமாக
பதினாயிரம் தாலந்து கடன் வாங்கிய ஒருவனை
அவன் முன் கொண்டு வந்தார்கள்.
கடனைத் தீர்க்கக் கூடிய நிலையில் அவன் இல்லை என்பதை
உணர்ந்து கொண்டதால் அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன்
அவனுக்கு சொந்தமான பெண் ஜாதி , பிள்ளை அனைத்தையும் விற்று
கடனை அடைக்க வேண்டும் என்றார் .
அந்த ஊழியக் காரன் தன் நிலையை விளக்கி காட்டி ,
தன் ஏழ்மையை எடுத்து காட்டி ,
தன் வறுமையை சுட்டி காட்டி ,
தன் பரிதாப நிலையை சொல்லி காட்டி ,
தன் மேல் இரக்கம் கொண்டு ,
தன் மேல் கருனை கொண்டு ,
தன் மேல் கோபத்தைக் காட்டாமல் ,
பொறுமையாக இருக்கும் படியும்
அவ்வாறு பொறுமை கொண்டு
தன் மேல் கருனை காட்டினால்
தான் பட்ட கடனை தீர்க்கிறேன் என்றான் .

அந்த ஊழியக்காரனுடைய ஏழ்மையையும்
அவன் கூறிய வார்த்தைகளையும் கருத்தில் கொண்டு
அவருடைய ஆண்டவன் மனது இரங்கி
அவனை விடுதலை பண்ணி
அவனுடைய கடனையும் மன்னித்துவிட்டான் .

மன்னிக்கப்பட்ட ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில்
தன்னிடத்தில் கடன் பட்ட ,
தன்னிடத்தில் நுhறு வெள்ளிப் பணம் கடன்பட்ட ,
தன் வேலைக்காரர்களில் ஒருவனைக் கண்டு
கோபாவேசத்துடனும் ,
கொந்தளிக்கும் ஆத்திரத்துடனும் ,
மதி இழந்த நிலையிலும் ,
சிந்தனை தடுமாறிய காரணத்தினாலும் ,
அறிவு வேலை செய்யாத தன்மையினாலும் ,
தன்னிடம் கடன் பட்ட வேலைக்காரனின்
தொண்டையைப் பிடித்து நெரித்து
நீ என்னிடம் பட்ட கடனை உடனே எனக்குக்
கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்றான் .
கடன் பட்டவன் ஊழியக்காரன் காலில் விழுந்து
என் மேல் கருணை கொண்டு பொறுமையாயிரும்
என்னிடம் இரக்கம் காட்டினால்
நான் பட்ட கடனை உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று
ஆண்டவனிடம் ஊழியக்காரன் எப்படி வேண்டுதல் விடுத்தானோ?
அவ்வாறே ஊழியக்காரனிடத்தில்
அவன் வேலைக்காரன் வேண்டுகோள் விடுத்தான்.

ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத,
எதையும் சிந்திக்காத அந்த ஊழியக்காரன்
தன்னிடம் கடன்பட்ட அந்த வேலைக்காரனை
கடனை அடைக்கும் பொருட்டு அவனைக் காவலில் போட்டு வித்தான்.
நடந்த நிகழ்வுகளை நடந்த செயல்களைக் கண்டு
வேதனையுற்று வருத்தப்பட்ட அவனுடன் வேலை செய்யும்
மற்ற வேலைக்காரர்  நடந்த நிகழ்வுகளை , நடந்த தகாத செயல்களை ,
ஆண்டவனிடத்தில் வந்து தெரிவித்தார்கள்.
இந்த செய்திகளை எல்லாம் கேள்விப்பட்ட ஆண்டவன்
தன் ஊழியக் காரனை அழைத்து
பொல்லாத மனம் கொண்டவனே !
தவறான எண்ணம் கொண்டவனே !
நீ உன் ஏழ்மையை என்னிடம் சொல்லி
வேண்டிக் கொண்டதன் காரணமாக நான் உன் கடன்களை மன்னித்தேன்.
நான் எப்படி உன் கடன்களை மன்னித்தேனோ ?
அவ்வாறே நீயும் , உன்னிடம் கடன்பட்ட உன் வேலைக்காரனுடைய
கடன்களையும் நீ மன்னித்திருக்க வேண்டும்.
அவ்வாறு நீ செய்யாமல் உன்னிடம் கடன்பட்ட உன் வேலைக்காரனை
கொடுமையான செயலுக்கு உட்படுத்தி இருக்கிறாய் ;
வருத்தப்பட வைத்து இருக்கிறாய் ;
மனவேதனைக்கு ஆளாக்கி இருக்கிறாய் ;
சோக நிலைக்கு தள்ளிவிட்டு இருக்கிறாய் ;
துன்பத்திற்கு ஆளாக்கி விட்டு இருக்கிறாய் ;
கொடுஞ்செயல் புரிந்து இருக்கிறாய் ;
தவறு இழைத்து இருக்கிறாய் ;
என்று கோபம் அடைந்து ஊழியக்காரனை நோக்கி ,
நான் உன் கடனை எப்படி மன்னித்தேனோ ?
அப்படியே நீயும் உன்னிடம் கடன் பட்ட உன் வேலைக்காரனுடைய
கடனை மன்னிக்காமல் பெரிய தவறினை செய்து இருக்கிறாய் .
மன்னிக்க முடியாத குற்றத்தினை புரிந்து இருக்கிறாய்
ஆகவே நான் உன் கடனை மன்னிக்க மாட்டேன் என்று
அவனுடைய ஆண்டவன் அவன் பட்ட கடனையெல்லாம்
தனக்குக் கொடுத்துத் தீர்க்கும் வரைக்கும் 
உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான் .

ஓவ்வொருவரும் தன் சகோதரன் செய்த தவறுகளை ,
பிழைகளை , குற்றங்களை , மனப்பூர்வமாக மன்னித்தால் ,
என்னுடைய பரம பிதாவும் , உங்களுடைய தப்பிதங்களை மன்னிப்பார் .

நமக்கு துன்பங்களை கொடுக்கும்
பிறருடைய பிழையை நாம் மன்னித்தால்
நம்முடைய பிழையை பரமபிதா மன்னிப்பார்
என்கிறார்  இயேசு .        



திருவள்ளுவர் :

           “””நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
           அன்றே மறப்பது நன்று”””
                                  -----திருவள்ளுவர்----திருக்குறள்-----

ஒருவர்  நமக்கு செய்யும் செயலில் இரண்டு நிலைகள் உள்ளன :
ஒன்று : நல்லவைகளை செய்தல் .
மற்றொன்று : தீயவைகளை செய்தல் .

ஒருவர்  நமக்கு செய்யும் செயல்களில்
நல்லவைகளைச் செய்யும் போது
அதனை மறக்காமல் நினைத்தலும் ,
தீயவைகளைச் செய்யும் போது
அதனை நினைவில் நிறுத்தாமல்
மறத்தலும் உயர்வான நிலை .

அன்பும் , கருணையும் கொண்டவர்களால் மட்டுமே
ஒருவர்  நமக்கு செய்யும் நல்லவைகளை நினைத்தலும்
தீயவைகளை மறத்தலும் முடியும் .
அன்பும் , கருணையும் இல்லாதவர்களால் ஒருவர்
நமக்கு செய்யும் நல்லவைகளை நினைத்தலும்,
தீயவைகளை மறத்தலும் என்பது இயலாத காரியம் ;
முடியாத காரியம் ; நடவாத காரியம் ;

எல்லோராலும் , எக்காலத்திலும் மற்றவர்  நமக்கு செய்யும்
நல்லவைகளை நினைத்தலும் ,
தீயவைகளை மறத்தலும் முடியாது .
ஒரு சிலரால் மட்டுமே உயர்ந்த குணங்கள்
பெற்றவர்களால் மட்டுமே ;
இரக்க சுபாவம் கொண்டவர்களால் மட்டுமே ;
அன்பில் கரைந்தவர்களால் மட்டுமே ;
மற்றவர்கள் நமக்கு செய்யும் நல்லவைகளை நினைக்கவும் ,
தீயவைகளை மறக்கவும் முடியும் .

நல்லவைகளை நினைக்கவும் ,
தீயவைகளை மறக்கவும் வேண்டுமென்றால்
இரண்டிற்கும் உள்ள உண்மையான வேறுபாட்டை
நாம் அறிய வேண்டும் ; உணர வேண்டும் ;
ஆய்ந்து மனம் தெளிய வேண்டும் ;
அனுபவ ரீதியாக விளக்கம் பெற வேண்டும் ;
புத்தி தெளிய வேண்டும் ;
அவ்வாறு இல்லையெனில் ,
வேறுபடுத்தி அறியும் திறன் நமக்கு இல்லையெனில்
மற்றவர்  நமக்கு செய்யும் செயல்களில் உள்ள
நல்லவை எவை? தீயவை எவை? என்பதை
வேறுபடுத்தி உணரும் அறிவு நமக்கு இல்லையெனில் ,
நல்லவைகளை நினைத்தலும்
தீயவைகளை மறத்தலும் என்பது இயலாத காரியம் .

நல்லவை , தீயவை வேறுபடுத்தி அறியும் திறன் இல்லையென்றால்
வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருக்கும் ;
துன்பம் சூழ்ந்ததாக இருக்கும் ;
கவலை நிரம்பியதாக இருக்கும் ;
கண்ணீர்  நனைந்ததாக இருக்கும் ;
துயரம் படைத்ததாக இருக்கும் ;

மற்றவர்  நமக்கு செய்யும் செயல்களில் உள்ள
நல்லவை எவை? தீயவை எவை? என்பதை அறியும் அறிவு
முதலில் நமக்கு இருக்க வேண்டும்
அதனை அறிந்து கொள்ளும் அறிவு நமக்கு இல்லையென்றால்
வாழ்க்கையை நடத்துவது என்பது கடினமாக இருக்கும்.

மற்றவர்  நமக்கு செய்யும் நல்லவைகள் என்றால்
துன்ப நேரத்தில் கை கொடுத்தல்;
இக்கட்டான சூழ்நிலையில் அருகிலிருத்தல் ;
வீழ்ச்சியுற்ற நேரத்தில் துhக்கி விடுதல் ;
துயருற்ற நேரத்தில் துயரைத் துடைத்தல் ;
நோயுற்ற நேரத்தில் உதவிகள் செய்தல் ;
பொருளாதார நிலையில் தாழ்வுற்ற போது
பொருளாதார நிலையை சரி செய்தல் ;
பாடம் புரியாத நிலையில் பாடத்தை
எளிய வகையில் விளக்குதல் ;
போன்றவை நல்லவைகள் என்ற சொல்லுக்குள்
மற்றவர்  நமக்கு செய்யும் நல்லவைகள்
மற்றவர்  நமக்கு செய்யும் உதவிகள்
என்ற நிலைக்குள் பொதுவாக கொண்டுவரப் படுகின்றன .

உதவிகள் என்றாலே பொதுவாக சுற்றத்தார் 
பெரும்பாலும் நண்பர்களே உதவிகள் செய்வார்கள்
என்ற நிலையும் , கருத்தும் உலவி வருகிறது .
முக்கியமாக சிலர்  செய்யும் அடிப்படை நல்லவைகள்
உதவிகள் கருத்தில் கொள்ளப்படாமல் ,
எண்ணத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ,
சமுதாயத்திற்கு சுட்டிக் காட்டப்படாமல் ,
மற்றவர்  மனங்களில் ஆழப்பதியும் படி எடுத்துக் காட்டப்படாமல் ,
இருப்பதால் சில உண்மையான நல்லவைகள்
சில அடிப்படையான உதவிகள்
புறக்கணிக்க முடியாத ,
நிராகரிக்க முடியாத ,
உதாசீனப்படுத்த முடியாத ,
தவிர்த்து செல்ல முடியாத ,
உதவிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும்
உணர்ந்து கொள்ள முடியாமலும் இருக்கிறது .

ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று ,
இந்த சமுதாயத்தில் நம்மை ஒரு மனிதனாக்கி
உலவ விட்டு , பசி ஏற்பட்ட போது பசியை நீக்கியும் ,
தேவை எவை என உணர்ந்து தேவையை பூர்த்தி செய்தும் ,
வாழும் வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பின் திருவுருவமான அன்னையை
அவள் நமக்கு செய்த செயல்களை
கடமை என்ற வார்த்தைக்குள் அடக்கி விட்டதால்
அன்னையானவள் நாம் இந்த உலகத்திற்கு வர காரணமாக இருந்து
நம் மேல் பொழிந்த அன்பை நமக்கு செய்த நல்லவைகளை
நாம் என்றென்றும் எக்காலத்திலும் நினைக்க வேண்டும்
என்பதை மறந்து விடுகிறோம் .

அன்னை நமக்கு செய்த செயல் கடமை என்ற வார்த்தைக்குள்
சிலர்  அடக்கி விட்டதால் அவள் நமக்கு செய்த நல்லவைகளை
நாம் நினைவில் வைக்கத் தவறி விடுகிறோம்.

அறிவு பெற்று , புத்தி தெளிந்து , சிந்தனையில் உயர்ந்து ,
சமுதாயத்தில் போட்டி போட்டு
உயர்நிலை அடைவதற்கும் ;
உன்னத நிலை பெறுவதற்கும் ;
நிலையான வாழ்வு பெறுவதற்கும் ;
வளமான நிலை பெறுவதற்கும் ;
இன்பத்தில் திளைப்பதற்கும் ;
உயர்வுகள் பெறுவதற்கும் ;
மகிழ்வுகள் அரங்கேறுவதற்கும் ;
துயரங்கள் தொலைந்து ஓடுவதற்கும் ;
சிறந்த நிலை அடைவதற்கும் ;
ஏற்ற செயல்கள் செய்து மகன் - மகள் வாழ
தன் இன்பம் துறந்து , தன் துயரை ,
தன் இழப்பை  , தன் கண்ணீரை ,
மகன் - மகள் மேல் செலுத்தாமல்
அவர்கள் நிலை உயர ; அவர்கள் வாழ்வு சிறக்க ;
பாடுபடும் தந்தையின் செயல்களை கடமை என்ற வார்த்தைக்குள்
சில சுயநல கிருமிகள் அடக்கி விட்டதால் ,
தந்தை நமக்கு செய்யும் நல்லவைகளை , உதவிகளை
கவனிக்கத் தவறி விட்டோம் ; மறந்து விட்டோம் ;

சகோதரருக்குள் அண்ணன் , தம்பி உறவுக்குள்
அக்கா , தங்கை பாசத்திற்குள்
இருக்கும் அன்பின் எல்லைகளை ;
உணர்வின் நிகழ்வுகளை ;
பாசத்தின் விளக்கங்களை ;
நல்லவைகளின் வெளிப்பாடுகளை ;
உதவிகளின் பரிமாணங்களை ;
கடமை என்ற வார்த்தைக்குள்
அடக்கி சகோதர , சகோதரி பாசங்களை
உண்மையாக உணர தவறி விட்டோம் .

தாய் நமக்கு செய்தவைகளை ,
தந்தை நமக்கு வழி காட்டியவைகளை ,
சதோதர ,சகோதரிகள் நமக்கு வெளிப்படுத்தியவைகளை ,
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் ;
அவர்கள் செய்த உதவிகளை நினைக்க வேண்டும் ;
நல்லவைகளின் தன்மையை உணர வேண்டும் ;

மற்றவர்  நமக்கு செய்யும்
நண்பர்கள் நமக்கு செய்யும்
சுற்றத்தார்  நமக்கு செய்யும்
நல்லவைகளை உதவிகளை மட்டும் அல்ல
தாய் , தந்தை , சகோதர , சகோதரிகள் ஆகியோர்  செய்யும்
நமக்கு செய்யும் நல்லவைகளை
நினைவில் வைக்க வேண்டும் மறக்க கூடாது .
தாய் , தந்தை , சகோதர , சகோதரிகள் நமக்கு செய்வதை
கடமை என்ற வார்த்தைக்குள் குறுகிய எண்ணம் கொண்டு ,
சுயநல மமதை கொண்டு  அடக்கிடாமல்
அவர்கள் நமக்கு செய்த செய்து கொண்டிருக்கும்
செய்ய முனைந்து கொண்டிருக்கும்
செயல்களை நினைவில் வைக்க வேண்டும் மறக்க கூடாது .

அவர்கள் செய்த , நமக்கு மற்றவர்கள் செய்த
நல்லவைகளை உதவிகளை மறக்கக் கூடாது .
நல்லவைகளை மறத்தலே பாபத்திற்கான முதல் வித்து ஆகும் .
மறத்தல் பாவத்தை உண்டாக்கி விடும்
பாவத்தை உண்டாக்கி பாவத்திற்கான பலனை
ஒருவர்  அடையும் படிச் செய்து விடும்
எனவே ஒருவர்  நமக்கு செய்யும் உதவிகளை மறக்கக் கூடாது .

தாய் எனக்கு நல்லவை செய்யவில்லை ;
தந்தை எனக்கு நல்வழி காட்டவில்லை ;
சகோதர சகோதரிகள் என் மேல் விருப்பம் காட்டவில்லை ;
அவர்கள் எனக்கு தீயவைகள் செய்தார்கள் நல்லவை செய்யவில்லை
என் சகோதர , சகோதரியின் மேல் காட்டிய அன்பை
என் தாய் என் மேல் காட்டவில்லை.
என்னுடன் பிறந்தவர்களுக்கு வாழும் வழி
என் தந்தை காட்டினார்  எனக்கு காட்டவில்லை .

அவர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு இருந்தனர்
உயர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்
இழப்புகளை சரி செய்து கொண்டனர்
என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்று
தாய் , தந்தை , சகோதர , சகோதரிகள்
தனக்கு நல்லவை செய்யவில்லை
தீயவைகள் செய்ததாகவும்
தன் நிலை கொண்டு தீர்மானித்தோ
தன் அறிவு கொண்டு தீர்மானித்தோ
தன் செயல் கொண்டு தீர்மானித்தோ
சிந்தனை கொண்டு இருந்தால்
அவை உண்மையாகவோ அல்லது
உண்மையின் ஆடை கொண்டு போர்த்தி இருந்தாலோ
தீயவை என்று தீர்மானிக்கப் பட்டவைகளை
மற்றவர்  நமக்கு செய்யும் தீயவை என்று உணர்ந்தவைகளை
அன்றே மறந்து விட வேண்டும்
நினைவில் வைக்கக் கூடாது .
அன்றே என்றால் அக்கணமே என்று பொருள் .
அக்கணமே மறந்து விட வேண்டும் என்று பொருள்.

மற்றவர் நமக்கு செய்யும் தீயவைகளை
நினைவில் நிறுத்தாமல் மறந்து விடுவதன் மூலம்
ஒருவன்  புண்ணியம் சேர்த்துக் கொள்கிறான்

மற்றவர் நமக்கு செய்யும் நல்லவைகளை மறக்காமல்
நினைவில் கொள்வது புண்ணியங்களை கொண்டுவரும்

நன்றன்று என்றால் நல்லது கிடையாது என்று பொருள் .
அதாவது நமக்கு செய்யும் நல்லவைகளை
மறப்பது நல்லது கிடையாது என்று பொருள்.
நல்லவைகளை மறந்தால் பாவப் பதிவுகளை உண்டாக்கும் .
நல்லவைகளை மறக்காமல் நினைவில் வைத்தால்
புண்ணிய பதிவுகளை உண்டாக்கும் .

மற்றவர்கள் நமக்கு செய்யும் தீயவைகளை மறக்காமல்
நினைவில் நிறுத்தினால் பாவப் பதிவுகளை உண்டாக்கும் .
மற்றவர்கள் நமக்கு செய்யும் தீயவைகளை
நினைவில் நிறுத்தாமல் மறந்தால்
புண்ணியத்திற்கான பதிவுகளை உண்டாக்கும் .
அது எவ்வாறெனில் நல்ல எண்ணங்கள்
நல்ல பதிவுகளை உண்டாக்கும் ;
தீய எண்ணங்கள் தீய பதிவுகளை உண்டாக்கும் ;
நல்ல பதிவுகள் நம்மை நல்வழியில் நகர்த்தி
புண்ணிய செயலுக்கு நம்மை தயார்  படுத்தி
புண்ணிய பதிவுகளை உண்டாக்கும் ;.
தீய பதிவுகள் நம்மை தீயவழியில் நகர்த்தி
பாவ செயலுக்கு நம்மை தயார் படுத்தி
பாவ பதிவுகளை உண்டாக்கும் ;

ஆகவே ஒருவர்  மற்றவர்  நமக்கு செய்யும்
நல்லவைகளை நினைக்க வேண்டும்
தீயவைகளை மறக்க வேண்டும் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :
இயேசு ,
மற்றவர்  நமக்கு செய்யும் தீயவைகளை மறக்க வேண்டும் .
நல்லவைகளை நினைவில் நிறுத்தாமல் மறந்தால்
அதற்குரிய விளைவுகளை அனுபவித்தே
தான் ஆக வேண்டும் என்கிறார் .

அவ்வாறே ,
திருவள்ளுவரும் ,
மற்றவர்கள் நமக்கு செய்யும் நல்லவைகளை மறக்காமல்
நினைவில் நிறுத்த வேண்டும்
தீயவைகளை நினைவில் நிறுத்தாமல் மறக்க வேண்டும்
என்கிறார் .


          “””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுஐம்பத்துநான்கு ந்தான்முற்றே “”