October 28, 2019

பரம்பொருள்-பதிவு-77


                 பரம்பொருள்-பதிவு-77

அந்தணன் :
"என்னுடைய கறவைப்
பசுக்களை இடையன்
ஒருவன் பொறுப்பில்
ஒப்படைத்து மேய்ச்சலுக்கு
அனுப்பி வைத்தேன்,
சில கள்வர்கள் அவனுடைய
உடலில் பல்வேறு காயங்கள்
ஏற்படும்படி அடித்துப் போட்டு
விட்டு பசுக்களை ஓட்டி
சென்று விட்டனர் "

"மக்கள் குறைவின்றி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ;
எங்களுடைய ஆட்சியில்
நீதி நிலைபெற்று இருக்கிறது ;
இல்லாமை என்பதே
எங்கள் நாட்டில் இல்லை ;.
ஏழ்மை என்றால் என்ன
என்றே யாருக்கும் தெரியாது ;
பிறரை ஏமாற்றி வயிறு
வளர்க்கும் வஞ்சக நெஞ்சம்
கொண்டோர் தர்மர்
ஆட்சி செய்யும்
நாட்டில் இல்லை.;
திருடர்களும்
கொள்ளையர்களும்
பிறரை துன்புறுத்தி
இன்பம் காண்பவர்களும்
எங்கள் நாட்டில் இல்லை ;
எல்லா செல்வங்களும்
நிறைந்த வளம் மிகுந்த
நாடாக எங்கள்
நாடு இருக்கிறது ;
இல்லாதது என்று எதுவும்
இல்லை என்று
சொல்லத்தக்க வகையில்
வளத்திற்கு குறைவில்லாமல்
எங்கள் நாடு இருக்கிறது ;
மக்கள் அமைதியாகவும்
ஒருவொருக்கொருவர்
நட்புடனும் இருக்கின்றனர்
என்று சொல்லி
ஆட்சி செய்கின்றீர்கள்,
மக்களும் அவ்வாறே
நினைத்து நம்பிக்
கொண்டு இருக்கின்றனர் "

"ஆனால் இப்போது
நடந்தது என்ன ?
இடையனை அடித்துப்
போட்டு விட்டு என்
கறவைப் பசுக்களை
திருடிச் சென்ற அநியாயம்
தர்மர் ஆட்சியில்
நடைபெற்று இருக்கிறது  ;"

"கொள்ளையர்கள்
பெருகி விட்டனரா ? (அல்லது)
ஏழ்மை உருவாகி
விட்டதா ? (அல்லது)
நாட்டில் மக்கள்
தங்கள் பாதுகாப்பை
இழந்து விட்டார்களா ?(அல்லது)
மக்கள் பாதுகாப்பு அற்று
வாழும் சூழ்நிலை
உருவாகி விட்டதா ? (அல்லது)
அன்பு இறந்து விட்டதா ?
(அல்லது)
கருணை செத்து விட்டதா ?
(அல்லது)
கொடியவர்கள் உருவாகி
விட்டார்களா ? (அல்லது)
ஆட்சி செய்யும் தகுதியை
தர்மர் இழந்து விட்டாரா ?
(அல்லது)
தர்மர் தங்கள் மக்களை
பாதுகாக்க வேண்டும்
என்ற கடமையை
மறந்து விட்டாரா ?"

"மேய்ச்சலுக்கு அனுப்பி
வைத்த இடையனை
அடித்து காயப்படுத்தியதற்கும் ;
என்னுடைய கறவைப்
பசுக்களை கள்வர்கள்
களவாடி சென்றதற்கும் '
தர்மர் பதில்
சொல்ல வேண்டும் ;
இந்திரப் பிரஸ்தத்தை
ஆட்சி செய்யும் தர்மர்
எனக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு பதில்
சொல்ல வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;
எனக்கு நீதி வேண்டும் ;"

அர்ஜுனன் :
"தர்மருடைய ஆட்சியில்
யாருக்கும் அநீதி என்பது
இழைக்கப்பட்டதே இல்லை ;
இதனால் தர்மர் ஆட்சியில்
நீதி என்பது நிலை
பெற்று இருக்கிறது ; "
அந்தணனே அநீதி
என்பது தங்களுக்கு
இழைக்கப்பட்டிருக்கிறது
என்று நீங்கள்
கருதுவீர்களேயானால்
அநீதியை அழித்து
நீதியை நிலைநாட்ட
வேண்டியது என்னுடைய
பொறுப்பு - அதனால்
அந்தணனே சற்று
அமைதியாக இருக்கவும் ;
கோபத்தை விடுத்து
சற்று சாந்தம் கொள்ளவும் ;
தங்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதிக்கு தக்க நீதி
கண்டிப்பாக கிடைக்கும் ;"

"இடையனுக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கும் ;
தங்களுடைய
கறவைப் பசுக்கள்
கள்வர்களால் களவாடி
செல்லப்பட்டதற்கும் ;
தக்க தண்டனை
கண்டிப்பாக கிடைக்கும் ;
நானே நேரில் செல்கிறேன் ;
இந்த பிரச்சினையை
தீர்க்க அர்ஜுனனாகிய
நானே நேரில் செல்கிறேன்  ;
கள்வர்களுக்கு தக்க
தண்டனை வழங்கி
கறவைப் பசுக்களை
மீட்டு வருகிறேன் ;
இது சத்தியம் !!!
தாங்கள் அமைதியாக
தங்கள் இல்லம் சென்று
அமைதியாக
ஓய்வு எடுங்கள் நான்
இப்போதே கிளம்புகிறேன் ;
 கறவைப் பசுக்களை
மீட்டு வருகிறேன் ; "

----------என்று சொல்லி விட்டு
ஆயுத சாலையில்
வைத்திருந்த தன்னுடைய
ஆயுதங்களை எடுக்க
ஆயுத சாலைக்கு
சென்றான் அர்ஜுனன்"

"அப்போது தான்
அர்ஜுனனுக்கு ஒரு விஷயம்
நினைவுக்கு வந்தது  ;
ஆயுத சாலையை
பார்வையிட தர்மர்
சென்றிருக்கிறார் என்பதும் ;
அவரைத் தொடர்ந்து
திரௌபதியும்
ஆயுத சாலைக்கு சென்று
இருக்கிறார் என்பதும் ;
ஆயுத சாலையில்
தர்மரும் திரௌபதியும்
தனிமையில்
இருக்கிறார்கள் என்பதும் ;
அர்ஜுனனுடைய
நினைவுக்கு வந்தது."

"திரௌபதியும்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்திக் கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள் அந்த
அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக் கருதப்படும்;
அந்த குற்றச் செயலுக்கு
தண்டனையாக குற்றம்
இழைத்தவர் 12 மாதங்கள்
வனத்தில் பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;"

-------என்ற விதி
அர்ஜுனனுக்கு
நினைவுக்கு வந்தது ;
என்ன செய்வது என்று
தெரியாமல் தன்னுடைய
ஆயுதங்களை எப்படி எடுப்பது
என்று தெரியாமல் அர்ஜுனன்
மனக்குழப்பத்துடன்
ஆயுத சாலையின் வெளியே
நின்று கொண்டிருந்தான் ;"

"விதி தன்னுடைய
ஆட்டத்தை ஆட துவங்கி
விட்டதை உணர்ந்து
கொண்டான் அர்ஜுனன் "


--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 28-10-2019
//////////////////////////////////////////