April 12, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-2


               
       ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-2

உலகில் வேலை
செய்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : கஷ்டப்பட்டு
         வேலை செய்பவர்கள்
இரண்டு:  திறமையாக
         வேலை செய்பவர்கள்

திறமையாக வேலை
செய்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : வித்தியாசமான
         யோசனைகளை பயன்படுத்தி
         திறமையாக 
         வேலை செய்பவர்கள்

இரண்டு : வித்தியாசமான
          யோசனைகளை பயன்படுத்தியும்,
          பிறர் ஏற்றுக் கொள்ளத்தக்க
          வகையில்
          செயல்களைச் செய்தும்
          திறமையாக
          வேலை செய்பவர்கள்

உலகில் உள்ள
பெரும் தொழில் அதிபர்கள்
பெரும் பணக்காரர்கள்
அனைவரையும்
எடுத்துக் கொண்டால்
இவர்கள் அனைவரும்
கஷ்டப்பட்டு
உயர்ந்த நிலையை
அடைந்து இருக்க மாட்டார்கள்
திறமையாக வேலை
செய்தே உயர்ந்து
இருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்தவன்
உயர்ந்து இருக்க
வேண்டுமானால்
காலை முதல் மாலை வரை
கஷ்டப்பட்டு
வண்டி ஓட்டுபவன்
உயர்ந்த நிலை
அடைந்து இருக்க வேண்டும்

காலை முதல் மாலை வரை
விவசாயம் செய்து
கொண்டு இருப்பவன்
உயர்ந்த நிலை அடைந்து
இருக்க வேண்டும்

ஆனால்
காலை முதல் மாலை வரை
வண்டி ஓட்டுபவன்
வண்டி ஓட்டிக் கொண்டே
தான் இருக்கிறான்
காலை முதல் மாலை வரை
விவசாயம் செய்பவன்
விவசாயம்
செய்து கொண்டே தான்
இருக்கிறான்.

கஷ்டப்பட்டு வேலை
செய்பவன் வேலை செய்து
கொண்டு தான்
இருக்கிறான்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள்
உயர்ந்த நிலை அடைவது
என்பது கஷ்டம்
அவர்கள் க‌ஷ்டப்பட்டு
உழைத்துக் கொண்டே
இருக்க வேண்டியது தான்

சமுதாயத்தில் உள்ள
பலரும்
கஷ்டப்பட்டு உழைத்தால்
உயர்ந்த நிலை அடையலாம்
என்ற தவறான கருத்தை
சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.
வாழ்க்கையில் உயர்ந்த
நிலை அடைய
வேண்டுமானால்
திறமையாக வேலை
செய்ய வேண்டும்

ஒரு பள்ளியில்
ஒரு வகுப்பில்
தேர்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்தத் தேர்வை
பத்து மாணவர்கள் எழுதினர்
அந்தத் தேர்வில்
ஒரு வினா கேட்கப்பட்டது
அந்த வினாவிற்கு
மூன்று மதிப்பெண்கள்
கொடுக்கப்பட்டது

திருக்குறளை இயற்றியது யார்
இந்த கேள்வியின் பதிலுக்குத்
தான் மூன்று மதிப்பெண்கள்
கொடுக்கப்பட்டிருந்தது

இந்தக் கேள்வியை
படித்துப் பார்த்த
ஒன்பது  மாணவர்கள்
இது எவ்வளவு
எளிதான கேள்வி
மூன்று மதிப்பெண்களை
அப்படியே
எடுத்து விடலாம்
என்று மகிழ்ச்சி அடைந்தார்கள்

அதுவும் பத்து மாணவர்களில்
ஒன்பது மாணவர்கள்
மட்டுமே
இவ்வாறு யோசித்தனர்

---------இன்னும் வரும்
////////////////////////////////////////////////