December 28, 2019

பரம்பொருள்-பதிவு-106


             பரம்பொருள்-பதிவு-106

“சகாதேவன் அறையை
விட்டு வெளியே
வருகிறான் - அங்கே
பாண்டவர்கள், குந்தி,
கிருஷ்ணன் ஆகியோர்
இருக்கின்றனர்”

“பீமன் கோபத்துடன்
சகாதேவனிடம்
கேட்கிறான் ”

பீமன் :
“சகாதேவா !
துரியோதனன்
எதற்காக வந்தான் ;
என்ன காரணத்திற்காக
வந்தான் ; - எந்த
தப்பான நோக்கத்தை
நிறைவேற்றிக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக  உன்னைத்
தேடி வந்தான் ;
எந்த சதித்திட்டத்தைத்
தீட்டிக் கொண்டு - அதை
செயல்படுத்துவதற்காக
உன்னைத் தனிமையில்
சந்திக்க வந்தான் ;

சகாதேவன் :
“சோதிடம் பார்க்க
வந்தார் அண்ணா ! “

பீமன் :
“சோதிடம் பார்க்க
வந்தானா ?
சோதிடத்தில் எதைப்
பற்றிக் கேட்க
வந்திருந்தான் ?
அவன் கேட்ட
கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்லி விட்டாயா ?
அப்படி சொல்லி விட்டாய்
என்றால் என்ன
பதில் சொன்னாய் ? “

சகாதேவன் :
“சோதிடம் பார்க்க வந்தவர்
எதிரியாக இருந்தாலும்
அவர் கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
சொல்ல வேண்டும் என்பதும் ;
ஒருவருக்கு பார்த்து
சொன்ன சோதிடத்தின்
பலனை வேறு யாருக்கும்
சொல்லக்கூடாது என்பதும்
சோதிட விதி அண்ணா ! “

“துரியோதனன் அண்ணா
என்னிடம் என்ன
கேட்டார் என்பதையும்  ;
எதைப்பற்றி கேட்டார்
என்பதையும் ;
தயவு செய்து
என்னிடம் கேட்காதீர்கள் ;
சோதிட சாஸ்திரத்தின்படி
என்னால் பதில்
சொல்ல முடியாது ;
என்னை மன்னியுங்கள்
அண்ணா ! “

கிருஷ்ணன் :
“பீமா ! துரியோதனன்
என்ன கேட்க வந்திருப்பான்
என்பதைப் பற்றி நான்
உனக்கு சொல்கிறேன் “

“பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் போர்
நடக்கப் போவது என்பது
உறுதியாகி விட்ட நிலையில்
போரில் வெற்றி பெறுவதற்கு
களப்பலி எந்த நாளில்
கொடுக்க வேண்டும்
என்பதையும் ;
களப்பலியாக யாரை
கொடுக்க வேண்டும்
என்பதையும் ;
கேட்க வந்திருப்பான் “

“அது தானே சகாதேவா!
அதற்கு நீ பதில்
சொல்லவில்லை அல்லவா?”

சகாதேவன் :
(சகாதேவன் பதில்
எதுவும் சொல்லாமல்
அமைதியாக இருந்தான்)

பீமன் :
“அப்படி என்றால்
களப்பலி கொடுப்பதற்கு
உரிய நாள் எது
என்பதையும் ;
களப்பலியாக
யாரை கொடுக்க
வேண்டும் என்பதையும்  ;
குறித்துக் கொடுத்து
விட்டாயா ? சகாதேவா !
வாயைத் திறந்து
பேசு சகாதேவா “

சகாதேவன் :
(சகாதேவன் பதில்
எதுவும் சொல்லமல்
அமைதியாக இருந்தான் )

கிருஷ்ணன் :
“பீமா சகாதேவன் மேல்
கோபப்படுவதால்
ஒரு பயனும் இல்லை”

“சகாதேவன் எந்த நாளை
குறித்துக் கொடுத்திருப்பான்
வருகின்ற அமாவாசை
நல்ல நாள் என்று
குறித்துக் கொடுத்திருப்பான்.”

“அது மட்டுமல்ல பீமா !
சகாதேவன் களப்பலியாக
கொடுப்பதற்கு உரிய
ஆளையும் குறித்துக்
கொடுத்திருப்பான். ?”

பீமன் :
“களப்பலியாக கொடுப்பதற்கு
தகுந்த ஆளையுமா
குறித்துக் கொடுத்திருப்பான்”

கிருஷ்ணன் :
“ஆமாம் பீமா! ஆமாம் “

பீமன் :
“சகாதேவா!
களப்பலியாக கொடுப்பதற்கு
உரிய ஆளையும்
குறித்து கொடுத்தாயா
யார் பெயரை
குறித்துக் கொடுத்தாய்
யார் அவர்கள் சகாதேவா!”

கிருஷ்ணன் :
பீமா ! மீண்டும் மீண்டும்
சகாதேவனைக் கேள்விகள்
கேட்டு அவனைத்
தொல்லைப் படுத்தாதே !
அவனைக் கேட்டால்
நான் என் கடமையைச்
செய்தேன் என்பான் ;
தர்மரின் தம்பி அல்லவா
அதனால் சோதிடத்தின்
தர்மத்தை காத்திருக்கிறான் ;
தர்மத்திலிருந்து
வழுவாமல் தர்மத்தின் படி
நடந்திருக்கிறான் ; “

பீமன் :
“இப்போது என்ன
செய்வது கிருஷ்ணா
அவர்கள் யார் என்று
எப்படி தெரிந்து
கொள்வது கிருஷ்ணா ! “

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 28-12-2019
//////////////////////////////////////////