June 10, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 22


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 22

உலகத்தால் மறக்கப்பட்ட
பத்தினிகள் பலபேர்களுடைய
வாழ்க்கை வரலாற்றைப்
பார்த்தோம்
அவர்களில் வித்தியாசமானவர்
கண்ணகி


கோவலன் கண்ணகியை
விட்டு பிரிந்து
மாதவியை நாடிச் சென்றான்
பிறகு கோவலன்
தான் செய்தது
தவறு என்பதை
உணர்ந்து
கண்ணகியிடம் சென்று
மன்னிப்பு கேட்டதால்
கண்ணகி கோவலனை
தன் கணவனாக
ஏற்றுக் கொண்டாள்

தவறுக்கும் தப்புக்கும்
வித்தியாசம் இருக்கிறது
தவறு என்பது
தெரியாமல் செய்வது
தப்பு என்பது
தெரிந்து செய்வது


தண்ணீர் உள்ள பானை
நம்மை அறியாமல்
கை தவறி கீழே
விழுந்தால்
அதற்குப் பெயர் தவறு
தண்ணீர் உள்ள பானையை
நாம் கோபத்தில்
கீழே போட்டு உடைத்தால்
அதற்கு பெயர் தப்பு

தவறு என்பது
தெரியாமல் செய்வது
தப்பு என்பது
தெரிந்து செய்வது

கோவலன் தெரியாமல்
செய்த தவறை மன்னித்து
கோவலனை
கணவாக
ஏற்றுக் கொண்டாள் கண்ணகி

அதன் பிறகு
கோவலன்
செய்யாத குற்றத்திற்காக
கொலை செய்யப்பட்டான்

கோவலன்
மாதவியுடன் இருக்கும் போது
கொலை செய்யப்பட்டிருந்தால்
கணவனுக்காக நீதி கேட்டு
கண்ணகி சென்று
இருக்க மாட்டாள்
ஆனால் கோவலன்
மாதவியிடம் சென்றது
தவறான செயல்
என்பதை உணர்ந்து
கண்ணகியிடம்
மன்னிப்பு கேட்டு
கண்ணகியிடம் சேர்ந்த பிறகு
கோவலன் கொல்லப்பட்டதால்
கண்ணகி நீதி கேட்டு
பாண்டியன் நெடுஞ்செழியனிடம்
சென்றாள்

தன் கணவன்
நல்லவனாக இல்லை
என்றாலும்
குடித்து விட்டு
வீட்டை பார்க்காதவனாக
இருந்தாலும்
சம்பாதிக்காமல் குடும்பத்தை
காப்பாற்றாதவனாக
இருந்தாலும
ஊர் சுற்றுபவனாக
இருந்தாலும்
மனைவி கணவனுக்கு
துன்பம் என்றால்
ஓடி வந்து
சேவை செய்வாள்
அது தான்
மனைவியின் இயல்பு

அதைத் தான்
கண்ணகியும் செய்தாள்
ஆராயாமல் தீர்ப்பு
சொல்லப்பட்டு
கொல்லப்பட்ட தன்
கணவன் கோவலனுக்காக
நீதி கேட்டு சென்றாள்

கோவலன் குற்றமற்றவன்
என்பதை அறிந்தவுடன்
சிம்மாசனத்தில் இருந்து
வீழ்ந்து உயிர் விட்டான்
பாண்டியன் நெடுஞ்செழியன்

மன்னன் தவறு
செய்தான் என்றால்
தவறு செய்யும் ஒருவரை
மக்கள் மன்னராக
வைத்திருந்தார்கள்
என்று அர்த்தம்

தவறான ஒருவர்
மன்னராக இருந்தால்
மக்கள் தொடர்ந்து
அவதிப்பட நேரும்

மக்கள் மன்னன் செய்த
தவறை சுட்டிக்
காட்டாமல் இருந்தால்
மன்னன் மக்களைப்
பற்றி கவலைப்படாமல்
மக்களுக்கு எதிராக
எப்போதும் தவறு
செய்து கொண்டிருப்பான்

தவறு செய்த
மன்னனை மக்கள்
தட்டிக் கேட்கவில்லை
என்ற காரணத்திற்காகவும்
தன் கணவன்
தவறு செய்து விட்டு
திருந்தி வந்து
செய்யாத குற்றத்திற்காக
கொலை செய்யப்பட்டான்
என்ற காரணத்திற்காகவும்
தன் கணவனுக்காக
மதுரை மக்களை
கொன்றாள் கண்ணகி

இது தான் கொலையும்
செய்வாள் பத்தினி
என்பதற்கு அர்த்தம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////