July 08, 2019

பரம்பொருள்-பதிவு-37


                  பரம்பொருள்-பதிவு-37

" உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஆகம சாஸ்திர
விதிமுறைகளின் படி
கடவுள் சிலையாக
செதுக்கப்பட்டு ;
பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள் சிலைக்கு
உயிரூட்டப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
கடவுள் சிலையில்
உள்ள கடவுள் சக்தியானது
இயங்கும் சக்தியை பெறும்
வகையில் செயல்கள்
செய்து வைக்கப்பட்டு ;
அன்றாடம் செய்யப்படும்
பூஜைகள் ; அபிஷேகங்கள் ;
ஆகியவற்றின் மூலம்
கடவுள் சிலையானது
கடவுளாகவே மாற்றப்பட்டு ;
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலை - உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களில் உள்ள
அனைத்து கடவுள்
சிலைகளும் செய்து
கொண்டிருக்கின்றன ; "

" ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது  ;
என்ற உண்மையை
உணரக்கூடிய
அறிவு உள்ளவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கடவுள் மட்டுமே
தெரிகிறது ;
கல்லானது தெரிவதே
இல்லை ;

" ஆனால், ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது என்ற
உண்மையை உணரும்
அறிவு இல்லாதவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கல் மட்டுமே தெரிகிறது ;
கடவுள் தெரிவதே இல்லை ; "

"கும்பாபிஷேகத்தின் மூலம்
ஒரு கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலைச் செய்கிறது
என்றால்
கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் ;
தெரிந்து கொள்ளுங்கள் "

(12) மகாபிஷேகம் :
"கும்பாபிஷேகத்தை
நிறைவு செய்வதற்கு முன்
அதாவது கும்பாபிஷேகத்தை
முடிப்பதற்கு முன்
சூட்சும நிலையில் உள்ள
உயிர்களை நினைத்து
அவர்களுக்கு நன்றி
சொல்வதற்காக
செய்யப்படும் செயலுக்கு
மகாபிஷேகம்
என்று பெயர் "

" கலச நீரால்
அபிஷேகம் செய்தபின்
கடவுள் சிலைக்கு
பூர்ணாபிஷேகம் செய்து,
பூர்ண வைவேத்தியம்
படைத்து,
சோடசோபசாரம்
செய்ய வேண்டும் ;
இதனால் இதுவரை
யாகத்தில் பங்கு
கொண்டிருந்த
தேவர்களும் உயிர்களும்
திருப்தி அடைகின்றனர் ;
இது மகா அவிர்
நிவேதனமாகும் ;"

(13) மண்டலாபிஷேகம் :
" இதற்கு த்ரைபசஷிகம்
என்று பெயர்
மண்டலாபிஷேகம்
மூன்று பட்சங்கள்
செய்யப்படுகிறது "

" ஒரு பட்சம் என்பது
பதினைந்து நாட்களைக்
கொண்டது ஆகும் ;
மூன்று பட்சங்கள் என்பது
45 நாட்களைக்
கொண்டது ஆகும் ;"

" இந்த 45 நாட்களும் 
முறைப்படி
விசேஷமாய் ஆராதனை
நடத்தி முடிவில்
பூர்ணாபிஷேகம் செய்து
பின் காப்புக் களைதல்
மண்டலாபிஷேகமாகும் "

" இவ்வாறு 13 முக்கிய
செயல்களைப் பின்பற்றி
செய்யப்படும்
கும்பாபிஷேகத்தின்
மூலம் கல்லானது
கடவுளாகவே மாறுகிறது
என்பதை அனைவரும்
தெரிந்து கொண்டால்
கும்பாபிஷேகத்தின்
சிறப்பைத் தெரிந்து
கொள்ளலாம்

"கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் தெரிந்து
கொள்ள வேண்டும் என்றால்
சிறப்பு வாய்ந்த - ஒரு
பெண்ணின் வாழ்க்கை
வரலாற்றைத் தெரிந்து
கொள்ள வேண்டியது
அவசியம் ஆகும்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கை வரலாற்றைத்
தெரிந்து கொண்டாலே
கும்பாபிஷேகத்தின்
மகிமை தெரியும் "

"அந்தப் பெண் தான்…………………?
அந்தப் பெண்ணின்
பெயர் தான்………………………………………….?
அந்தப் பாவையின்
பெயர் தான்…………………………………………?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  08-07-2019
//////////////////////////////////////////////////////////