February 16, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-உடையார்முன்-பதிவு-11





                இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-உடையார்முன்-பதிவு-11
      
                        “”பதிவு பதினொன்றை விரித்துச் சொல்ல
                                                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
                                   குடும்பத்தில் உள்ளவர்கள் ,
                                   உறவு முறைகள் ,
                                   நெருக்கமான நண்பர்கள் ,
                                    நெருக்கமில்லாத நண்பர்கள் ,
                                    வீட்டிச் சுற்றி இருந்தவர்கள்,
                                    வீட்டைச் சுற்றி இருந்து விட்டு சென்றவர்கள் ,
                                    அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் ,
ஏதேனும் விழா நடத்தினால்,
விழாவுக்கு நம்மை வரும்படி அழைத்தால்,
நாம் செய்ய வேண்டியவை யாவை ? என்பதை இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் கூறுகிறார் :


வசனம்-1:
நீ அழைக்கப் பட்டிருக்கும் போது போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே , உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்.”
                                                                       -----லுhக்கா - 14 : 10

பணம் பல வழிகளில் அடைந்து உயர்ந்தாலும் ;
செல்வச் செழிப்பில் திளைத்து மகிழ்ந்தாலும் ;
தொழில்கள் பல செய்து வெற்றி பெற்றாலும் ;
நிலங்கள் பலவற்றை வாங்கி வைத்திருந்தாலும் ;
வீடுகள் பலவற்றை கட்டி , நல்ல நிலைதனை அடைந்தாலும் ;
அறிவாளி என்று பலர்  பாராட்டினாலும் ;
புத்திசாலி என்று பலர்  சிறப்பித்தாலும் ;
ஏவல் செய்வதற்கு பணியாள் பல வைத்திருந்தாலும் ;
பதவி சுகத்தில் திளைத்தாலும் ;
அதிகார போதையில் மிதந்தாலும் ;
சமுதாயம் உயர்ந்தோன் என்று அடையாளக் குறி வைத்து
அழைக்கக் கூடிய தகுதிகள் பல பெற்றாலும் ;
பிறர்  உங்களை கையெடுத்து கும்பிடும் அளவுக்கு
மதிப்பு உங்களுக்கு இருந்தாலும் ;

திருமணம் சடங்கு விழாக்களுக்கு சென்றால் ,
அமர்வதற்கு என்று வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் நாற்காலிகளில் ,
கடைசி வரிசையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும் .

விழாவை நடத்துவோர் ,
விழாவை நடத்துபவருடைய குடும்பத்தார் ,
விழாவை நடத்துபவருடைய உறவினர்கள் ,
விழாவை நடத்துபவருடைய சுற்றத்தார் ,
நம்மை அடையாளம் கண்டு கொண்டு
அன்பாகவும் , அமைதியாகவும்  ,பண்பாகவும்
முன் வரிசையில் வந்து அமருங்கள் என்று நம்மை கேட்பார்கள் .

நாம் அதை மறுத்தால் ,
அவருடைய கோரிக்கையை , ஏற்க மணமில்லாமல் ,
கடைசி வரிசையிலேயே அமர்ந்து கொள்கிறேன் என்று சொன்னால்,
அவர்கள் அன்பின் மேலிட்டால்
அன்பு அதிகமாகி நம்மை
நம்முடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்று முன் வரிசையில் அமர வைப்பார்கள் .

இந்தக் காட்சியைக் காண்பவர்கள் ,
இந்தக் காட்சியைக் காணும் அன்பர்கள் ,
விழாவிற்கு வந்தவர்கள் ,
விழாவை சிறப்பிக்க வந்தவர்கள் ,
நம்மை ஆச்சரியக் கண் கொண்டு
வியப்பு மேலிட்டால் பார்த்து ,

சிறப்பான தகுதிகள் பலவற்றை கொண்டவராக இருப்பார் ;
சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பார் ;
விழாவுக்கு வந்திருப்பவர்களில் சிறந்தவராக இருப்பார் ;
சமுதாய அங்கீகாரத்தை பெற்றவராக இருப்பார் ;
அவ்வளவு பெற்றும் அவர்  அமைதியாக,  அடக்கமாக ,
எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் ,பின் வரிசையில் அமர்ந்திருக்கிறார்;
எவ்வளவு உயர்ந்தவர்  இவர் ,
மனதில் சிறந்தவர்  இவர் ,
அடக்கத்தில் அருமையானவர்  இவர் - என்று
இந்த சமுதாயமும் , சமுதாய மக்களும் விழாவுக்கு வந்திருப்பவர்கள் ;
அவரை நம்மை போற்றி புகழ்வார்கள் ;
ஆச்சரியக் கண் கொண்டு பார்ப்பார்கள்;
அதிசயத்தில் திளைப்பார்கள் ;
இதைத் தான் இயேசு ,
தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்கிறார் .



வசனம் -2,3 :
ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப் பட்டிருக்கும் போது , பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே ; உன்னிலும் கனமுள்ளவன் ஒரு வேளை அவனால் அழைக்கப் பட்டிருப்பான்.”
                                                                    ------லுhக்கா - 14 : 8

அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து; இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போக வேண்டியதாயிருக்கும்.”
                                                                --------லுhக்கா - 14 : 9

நாம் நம்மை தாழ்த்திக் கொண்டு கடைசி வரிசையில் அமராமல் ,
ஆணவத்தை மண்டையில் ஏற்றிக் கொண்டு ,
கர்வத்தை மனத்தில் பதித்துக் கொண்டு ,
          அறிவில் தெளிந்தவன் ;
          ஆன்மீகத்தில் உயர்ந்தவன் ;
          இன்பத்தைத் துய்ப்பவன் ;
          ஈகையில் சிறந்தவன் ;
          உண்மையே பேசுபவன் ;
          ஊருக்கெல்லாம் உழைப்பவன்;     
          எளிமையில் விளங்குபவன் ;
          ஏழ்மைக்கு உதவுபவன் ;
          ஐயத்தை விளக்குபவன் ;
          ஓற்றுமையை உணர்த்துபவன் ;
          ஓர்மையில் தெளிந்தவன் ;
          ஓளஷதத்தில் சிறந்தவன் ;
          எஃதையும் வெல்லுபவன் ;
என்று தன்னை நினைத்துக் கொண்டு ,

அறிவு தெளிவு பெறாமல் ,
சிந்தனை சீர்திருத்தம் பெறாமல் ,
முன் வரிசையில் சென்று அமர்ந்தால் ,
நம்மை விட உயர்ந்தவர்  யாரேனும் விழாவுக்கு வந்தால் ,
விழாவை நடத்துவோர்  நாற்காலி இல்லை அமர இடம் தேவை - என்ற
காரணங்களைக் காட்டி நம்மை பின் வரிசையில் உள்ள நாற்காலியில்
சென்று அமரச் சொல்வர் .

விழாவுக்கு வந்திருப்போர் ,
இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் ,
வினாக் குறிகளை விழிகளில் தேக்கிக் கொண்டு பார்க்கும்;
சுட்டெரிக்கும் சுடர் நெருப்பில் நமது மனம் வெந்து சாம்பலாகும் ;
அவமானத்தால்  தலை கவிழும் ;
            இதயம் உடையும்;          
            கோபம் எழ நேரம் பார்க்கும் ;
            கண்ணீர்த் துளிகள் கண்களை விட்டு
            இந்த உலகத்தை எட்டி பார்க்க நேரம் பார்க்கும் ;
அதனால் தான் இயேசு ,
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் என்கிறார் .



வசனம்-4 :
 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் , தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான் என்றார்.”
                                                                      - லுhக்கா - 14 : 11
பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு ,அதிகாரம்-  என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை தாழ்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் உயர்த்தப் படுவான் .

பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு, அதிகாரம்-  என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் தாழ்த்தப் படுவான்.

என்கிறார்  இயேசு .



திருவள்ளுவர்:
          “””””உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
                  கடையரே கல்லா தவர்”””””
                                                       ----திருவள்ளுவர்---திருக்குறள்----
                
                                       பணம் படைத்தவனிடம் ,
                                      பணம் இல்லாதவன் ,
                                      பணிந்து தான் இருக்க வேண்டும் .

                    அதிகாரம் உள்ளவனிடம் ,
                    அதிகாரம் இல்லாதவன் ,
                   அடங்கித்தான் இருக்க வேண்டும் .

                                     பதவி உள்ளவனிடம் ,
                                    பதவி இல்லாதவன் ,
                                    ஒடுங்கித்தான் இருக்க வேண்டும் .

                உயர்ந்தவனிடம் ,
                தாழ்ந்தவன் ,
                அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .


பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
இவைகள் இல்லாதவன்
பணிந்து ,அடங்கி ,அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .
என்ற எழுதப்படாத ஒரு விதி இந்த சமுதாயத்தில் இருக்கிறது .

அது சமுதாயத்தை மட்டுமில்லை
மக்கள் மனங்களையும் அரித்து விட்டிருக்கிறது .
இதை மாற்ற நினைத்தவர்கள்
சீர்திருத்த முற்பட்டவர்கள் தான்
மாண்டு போனார்களே ஒழிய
சமுதாயம் மாறவில்லை;
மக்கள் திருந்தவில்லை ;
அறியாமை விலகவில்லை ;
அறிவொளி பரவவில்லை ;
சமுதாயம் தன்னுடைய சட்ட திட்டங்களை மாற்றவில்லை ;
சமுதாயம் தன்னுடைய கொடுமைக்கார முகமூடியைக் கழற்றவில்லை ;

பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
உள்ள சமுதாய மேன்மைக்கான
அடையாளக் குறியீடுகள் உள்ளவனிடம்

அவைகள் இல்லாதவன்
பணிந்து ,வணங்கி ,அடங்கி
அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .

நான் அடங்கிப் போக மாட்டேன் ,
எனக்கு மானம் இருக்கிறது ,
சுயமரியாதை இருக்கிறது ,
தன்மானம் இருக்கிறது ,
என்று வீர வசனங்கள் பேசி ,

கொடுமை கண்டு ஆர்த்தெழுவேன் ;
மடமை முன் மண்டியிட மாட்டேன் ;
சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன் ;
மானத்தை மண்டியிடச் செய்து விட்டு வாழ மாட்டேன் ;

என்று வீண் வசனம் பேசி திரிந்து கொண்டு ,
இந்த அவனியில் எந்த மூலையிலும் சென்று ,
நிம்மதியாக வாழ முடியாது .

பணம் படைத்தவனிடம் பல்லிளிக்கிறது சமுதாயம் ;
பதவி உள்ளவனிடம் அடிபணிகிறது சட்டம் ;
அதிகாரம் உள்ளவனிடம் வளைந்து கொடுக்கிறது நீதி ;
என்ற நிலை இச் சமுதாயத்தில்
இருக்கும் வரை ,
உடையவனிடம் இல்லாதவன்
பணிவாகத் தான் இருக்க வேண்டும் .
அத்தகையை ஒரு நிலையை நம் வாழ்க்கையில்
ஏற்படுத்திக் கொண்டால் தான்
நாம் நம் வாழ்க்கையை
நிம்மதியாக , அமைதியாக ஓட்ட முடியும் .


அதைப் போல ,
அறிவு விளக்கம் பெற்றவனிடம் ;
புத்தி தெளிவு பெற்றவனிடம் ;
ஞானத் தன்மை அடைந்தவனிடம் ;
சிந்தனை சீர்பெற்று விளங்குபவனிடம் ;
கலைகளை கசடறக் கற்றவனிடம் ;
மறைபொருளை மறைப்பின்றி உணர்ந்தவனிடம் ;
சூட்சுமத்தின் ரகசியத்தை அறிந்தவனிடம் ;
இன்பத்தின் இனிமையை அனுபவித்தவனிடம் ;
துன்பத்தைக் களைய படித்தவனிடம் ;

இத்தகைய தன்மைகள் உள்ளவனிடம்
இத்தகைய தன்மைகள் இல்லாதவர்கள்
இத்தகைய தன்மைகளில்
எத்தகைய தன்மையை பெறவேண்டும்
என்று நினைக்கிறார்களோ,


அத்தகையவரிடம் சென்று ,
அன்பாக ,பணிவாக ,அடக்கமாக
உடையவன் முன் இல்லாதவன் எவ்வாறு
தன் வாழ்விற்கு
தேவையான நிம்மதியைப் பெற்றுக் கொண்டு
அமைதியாக இருக்கிறானோ ?
நிம்மதியாக வாழ்க்கையை நடத்துகிறானோ ?

அத்தகைய ஒரு நிலையில் ,
அடிமையாக இருந்து ,
அமைதியாக இருந்து ,
பணிவாக இருந்து ,
தனக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் .

இத்தகைய ஒரு நிலையில் ,
அமைதியாக ,அடக்கமாக , பணிவாக
அடிமையாக இருந்து கற்க முடியாது என்றால்
அவரால் வாழ்க்கையில்
எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது .

தனக்குத் தெரியாத ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்பவன் சீடன்
கற்றுக் கொள்ள  நினைப்பவனுக்கு கற்றுக் கொடுப்பவர்  குரு
என்பதை மனதில் கொண்டால் இயற்கையாகவே
அமைதி பணிவு வந்து விடும்
என்கிறார் திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;
தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான் ;
என்கிறார் .


அவ்வாறே
திருவள்ளுவரும் , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்திற்குத் தேவையானவைகளை  பெற்றுக் கொள்வதால்,
இந்த சமுதாயத்தால் மதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாமல் , உயர்த்திக் கொள்கிறவன் இந்த சமுதாயத்திற்கு தேவையானவைகளைப்  பெற முடியாமல் போவதால் ,
இந்த சமுதாயத்தால் அவமானம் அடையக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான்;
என்கிறார்.


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பதிவுபதினொன் றுந்தான்முற்றே “”