February 03, 2019

திருக்குறள்-பதிவு-96


                        திருக்குறள்-பதிவு-96

(பாதர் டிராகாக்லியோலோ
போப் கிளமெண்ட்-VIII
அவர்களை அவருடைய
அறையில் நேரில்
சந்தித்தார்.
இருவரும் பேசுகிறார்கள்)

போப் கிளமெண்ட்-VIII ;
“யார் இந்த ஜியார்டானோ
புருனோ…………………………………? “

பாதர் டிராகாக்லியோலோ :
“ஜியார்டனோ புருனோ
தத்துவம், வானியல்,
மருத்துவம், இயற்கை
அறிவியல், இறையியல்,
The Art of Memory
ஆகியவற்றில் 
புலமை பெற்றவர்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“ சுருக்கமாக அவரை
ஒரு அறிவாளி என்று
சொல்லுங்கள்…………….! “

பாதர் டிராகாக்லியோலோ :
“ அறிவாளி என்ற
வார்த்தைக்கு
தகுதியானவர் தான் “

போப் கிளமெண்ட்-VIII ;
“ அவர் தன்னுடைய
குணத்தை மாற்றிக்
கொள்ள மாட்டாரா……………? “

பாதர் டிராகாக்லியோலோ :
“அவருடைய
குணத்தைத்தான் மாற்ற
முயற்சி செய்தோம்
முடியவில்லை “

போப் கிளமெண்ட்-VIII ;
“ முடியவில்லை என்ற
வார்த்தையைக் கேட்கும்
போது எனக்கு கொஞ்சம்
அச்சமாகத் தான் இருக்கிறது “

பாதர் டிராகாக்லியோலோ :
“ நான் உண்மையைச்
சொன்னேன்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“அவர் விசாரணையில்
எவ்வாறு நடந்து கொண்டார். “

பாதர் டிராகாக்லியோலோ :
“அவர் பல நேரம்
அமைதியாக ஆழ்ந்த
சிந்தனையில் இருக்கிறார் ;
சில நேரங்களில்
மட்டுமே பேசுகிறார் ;
அவர் எத்தகைய குண
நலன்களைக் கொண்டவர்
என்பதை எங்களால்
கணிக்க முடியவில்லை ; “

போப் கிளமெண்ட்-VIII ;
“அவர் ஆண்டவரை நோக்கி
ஜபம் செய்கிறாரா………………..?”

பாதர் டிராகாக்லியோலோ :
“அவர் ஜபம் செய்ததை
நான் பார்த்ததேயில்லை”

போப் கிளமெண்ட்-VIII ;
“சித்திரவதையின்
போது அவர் எவ்வாறு
நடந்து கொண்டார்………………?

பாதர் டிராகாக்லியோலோ :
“சித்திரவதையின் போது
இவர் நடந்து கொண்ட
விதத்தைப் பார்க்கும் போது
இவர் மனிதரா என்று
எண்ணத் தோன்றுகிறது ;

சாதாரண மனிதர்களால்
ஜியார்டானோ
புருனோவைப் போல்
வலியைத் தாங்கிக்
கொண்டு சத்தம்
போடாமல்
இருக்க முடியாது ;
அழாமலும்
இருக்க முடியாது ;

இவர் கிறிஸ்தவ
மத நம்பிக்கைகளை
கடை பிடிக்காமல்
தனித்தே இருக்கிறார் ;
யாருடனும் ஒட்டாமல்
தனித்தே இருக்கிறார் ;
இயங்கும் இந்த
பிரபஞசத்தை விட்டே
தனித்தே இருக்கிறார் ;

அவரை புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

போப் கிளமெண்ட்-VIII ;
“ஜியாடர்டானோ புருனோ
சொல்லும் சீர்திருத்தங்களை
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில்
நடைமுறைப்
படுத்துவதற்கான
தேவையான
சாத்தியக் கூறுகள்
ஏதேனும் இருக்கிறதா…..? ”

பாதர் டிராகாக்லியோலோ :
“அப்படி எதுவும்
இருப்பதாக எனக்கு
தெரியவில்லை”

போப் கிளமெண்ட்-VIII ;
“சட்டங்கள் இயற்றி
இதனை நடைமுறைப்
படுத்த முயற்சி
செய்தால் முடியுமா. “

பாதர் டிராகாக்லியோலோ :
“ இதற்காக அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும்
ஆனால் ஒத்துழைப்பார்கள்
என்று சொல்ல முடியாது.”

போப் கிளமெண்ட்-VIII ;
“இந்த வழக்கு ஆரம்பித்த
நாளிலிருந்து என் மனம்
சொல்ல முடியாத ஆழ்ந்த
கவலையில் இருக்கிறது”

“ஏதேனும் தவறு செய்து
விடுவேனோ என்று
பயந்து கொண்டிருக்கிறேன்”

“சிறு தவறு நேர்ந்து
விட்டாலும் நம்மை மட்டுமல்ல
நாம் சார்ந்துள்ள மதத்தையும்
இழிவாக பேசக்கூடிய
நிலைக்கு ஆளாக நேரிடும்”

“இதனை நினைத்து நான்
அமைதி இழந்து
தவிக்கிறேன்”

“நீண்ட நாட்களாக
நான் சரியாக
உண்ணுவதும் இல்லை  ;
உறங்குவதும் இல்லை ;”

“ஆண்டவரால் நான்
ரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து
இவ்வளவு மன சஞ்சலத்தை
நான் அடைந்தது இல்லை”

“பரிசுத்த ஆவியால் நான்
நிரப்பப்பட்டவில்லையோ
என்று சந்தேதிக்கும்
நிலைக்கு ஆளாகியிருக்கிறேன்”

“இந்த விசாரணை என்னை
மிகுந்த வேதனைக்கு
உள்ளாக்கி இருக்கிறது”

“அவர் என்ன தான்
நினைக்கிறார்”

“அவர் கடைசியாக
என்ன சொன்னார்.”

பாதர் டிராகாக்லியோலோ :
“நான் போப் கிளமெண்ட்-VIII
அவர்களிடம் மட்டும் தான்
பேசுவேன் என்று சொன்னார்.”

போப் கிளமெண்ட்-VIII ;
“ஜியார்டானோ புருனோவை
பார்க்க வேண்டும்.”

பாதர் டிராகாக்லியோலோ :
“ஜியார்டானோ புருனோவை
இங்கே அழைத்து வர
நான் ஏற்பாடு செய்கிறேன்”

போப் கிளமெண்ட்-VIII ;
“நான் சிறையில் யாருக்கும்
தெரியாமல் ரகசியமாக
பார்க்க விரும்புகிறேன்”

பாதர் டிராகாக்லியோலோ :
“அப்படியே ஆகட்டும்”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  03-02-2019
/////////////////////////////////////////////////////////////