September 22, 2018

திருக்குறள்-பதிவு-23


                         திருக்குறள்-பதிவு-23

ஒரு விஷயத்தைப்
பொறுத்து
செயல்படுபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : ஒரு விஷயத்தைப்
        பற்றி அறிந்து
        செயல்படுபவர்கள்

இரண்டு :ஒரு விஷயத்தைப்
         பற்றி அறியாமல்
         செயல்படுபவர்கள்

எந்த ஒரு விஷயத்தை
எடுத்துக் கொண்டாலும்
இந்த சமுதாயத்தில்
ஒரு விஷயத்தைப்
பற்றி அறிந்து
செயல்படுபவர்கள் குறைவு
ஆனால்,
எந்த ஒரு விஷயத்தை
எடுத்துக் கொண்டாலும்
இந்த சமுதாயத்தில்
ஒரு விஷயத்தைப்
பற்றி அறியாமல்
செயல்படுபவர்கள்
தான் அதிகம்


விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்று ஒரு விஷயத்தை
பற்றி அறிந்து
செயல்பட்டு
நம் முன்னோர்கள்
அதை சிற்பமாக
செதுக்கினார்கள்

அதை எல்லா
இடங்களிலும்
வைக்கவில்லை
மக்கள் அடிக்கடி
பார்க்கும் வகையில்
வைக்க வேண்டும்
என்பதை உணர்ந்து,
மக்கள் அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடத்தில்
வைக்க வேண்டும்
என்பதை உணர்ந்து,
அந்த சிற்பத்தை
அனைவரும்
அடிக்கடி வந்து
செல்லும் இடத்தில்
அனைவரும்
பார்க்கும் வகையில்
வைத்தனர்.

மேலும் அவர்கள்
எந்த இடத்தில்
அந்த சிற்பத்தை
வைத்தால்
காலம் காலமாக
இருக்கும் என்பதை
உணர்ந்தும்,
அந்த சிற்பத்தை
பற்றி தெரியாவிட்டாலும்
அந்த சிற்பம்
அந்த இடத்தில் இருந்தால்
பிற்காலம் வருபவர்கள்
உணர்ந்து கொள்வார்கள்
என்பதை உணர்ந்தும்,
அதை அனைவரும்
வந்து செல்லும் ஒரு
இடத்தில் வைத்தனர்.

அதை ஒரு இடத்தில்
வைத்தால் மட்டும்
அது நிலையாக
இருக்காது அழிந்து விடும்
என்ற காரணத்தினால்
பல இடங்களில்
பல சிற்பங்களை செதுக்கி
அந்த சிற்பங்களை
வைத்தனர்.

நம் முன்னோர்கள்
நினைத்தது போலவே
காலத்தால் அழியாமல்
அந்த சிற்பங்கள்
இன்றும் இருக்கிறது;
ஆனால் அது என்ன
என்று தெரியாமல்
எதற்காக இருக்கிறது
என்று தெரியாமல்;
அதனுடைய
விவரங்கள் தெரியாமல்;
அந்த சிற்பங்களைப்
பார்த்து பல்வேறு
கதைகளைப் புனைந்து
இந்த சிலை இதைத் தான்
சொல்ல வருகிறது
என்று ஒவ்வொருவரும்
ஒரு கதையைப்
புனைந்து ஒரு
விஷயத்தைப் பற்றி
அறியாமல்
செயல்படுபவர்கள்
செயல்களைச் செய்து
கொண்டிருக்கின்றனர்.
விவரங்கள் தெரியாதவர்கள்
அவர்கள் சொல்வது
உண்மை என்று
நம்பி அதன் பின்னால்
சென்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு விஷயத்தைப் பற்றி
அறிந்து செயல்படுபவர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
சிற்பமாக வடித்து
வைத்தார்கள்
ஒரு விஷயத்தைப் பற்றி
அறியாமல் செயல்படுபவர்கள்
அந்த சிற்பம் என்ன
என்று தெரிந்தது போல்
பல கதைகளைப்
புனைந்து வைத்து விட்டனர்

விஷயம் அறிந்து
செயல்படுபவர்களால்
செதுக்கி வைக்கப்பட்ட
சிற்பங்கள்
விஷயம் அறியாமல்
செயல்படுபவர்களால்
தவறான தகவல்
மக்களிடம் கொண்டு
செல்லப்பட்டுக்
கொண்டிருக்கிறது

உண்மையைத்
தெரியாதவர்கள்
உண்மையைத் தெரிந்தது
போல சொல்லும்போது
உண்மையைத்
தெரியாதவர்கள்
இது உண்மை
என்று நம்பியதன்
காரணத்தால்
சரியான ஒன்று
தவறாக அர்த்தம்
கொள்ளப்பட்டு
தவறாக மக்களிடையே
உலவிக் கொண்டு
வருகிறது

விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு
நிலையிலிருந்து
மனிதன் வந்தான்
என்பதை உணர்ந்து
அதை சிற்பமாக
வடித்து வைத்தார்கள்
விஷயம் அறிந்து
செயல்படுபவர்கள்
ஆனால் ஒரு
விஷயத்தைப்பற்றி
அறியாமல்
செயல்படுபவர்கள்
அதை தவறாக
எடுத்துக் கொண்டு
தவறாகவே மக்கள்
மத்தியில் கொண்டு
சென்று விட்டனர்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த சிற்பம்
என்ன என்பதையும்,
அது எங்கே
வைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும் பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 22-09-2018
//////////////////////////////////////////////