November 25, 2018

திருக்குறள்-பதிவு-58


                       திருக்குறள்-பதிவு-58

கலிலியோ
தன்னுடைய கண்களை
இழந்த பின்பும்
தன்னுடைய
ஆராய்ச்சிகளை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
விஞ்ஞான உலகத்திற்கு
மட்டுமல்ல இந்த
உலகத்திற்குக் கூட
மிகப் பெரிய
இழப்பு தான்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
விஞ்ஞான உலகம்
தன்னுடைய
கண்களை இழந்தது
போல் ஆகி விட்டது

கலிலியோ தன்னுடைய
கண்களை இழந்ததின்
காரணத்தினால்
இந்த உலகத்திற்கு
கிடைக்க வேண்டிய
மிக உயர்ந்த
அரிய கண்டுபிடிப்புகள்
அனைத்தும்
இந்த உலகத்திற்கு
கிடைக்காமல் போய்
விட்டது என்று
உறுதியாக சொல்லலாம்
ஆமாம் கலிலியோ
தன்னுடைய கண்களை
இழந்த காரணத்தினால்
இந்த உலகத்திற்கு
கிடைக்காமல் போன
கண்டுபிடிப்புகள்
எவ்வளவு என்பதை
யாராலும் கணித்து
சொல்ல முடியாது

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
இந்த உலகத்திற்கு
மிகப்பெரிய இழப்பு
என்பதை நாம்
ஒப்புக் கொள்ளத்
தான் வேண்டும்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்து
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த போது
தன்னுடைய நண்பருக்கு
உதவியுடன் ஒரு
கடிதத்தை எழுதினார்
அந்த கடிதம்
கலிலியோவின்
மன உறுதிக்கு மிகப்
பெரிய சான்று

நான் முற்றிலும்
குருடாய் விட்டேன்
ஆன்றோர் அறியாத
ஆயிரக்கணக்கான
அரிய விஷயங்களை
நான் என்னுடைய
கண்களால்
கண்டு கூறினேன்
என்னுடைய வாழ்க்கை
இந்த உலகம் முழுவதும்
விரிந்து இருந்தது
ஆனால் இப்பொழுது
என்னுடைய வாழ்க்கை
என்னுடைய உடல்
அளவில் சுருங்கி
விட்டது
என்னிடமிருந்து
அனைத்தையும்
பறித்துக் கொண்டாலும்
என்னால் உயிர்
வாழ முடியும்
என்னை ஆராய்ச்சி
செய்யக் கூடாது
என்று சொல்லி
நான் எப்போது
தடுக்கப் படுகிறேனோ
அப்போது தான்
நான் இறப்பேனே
தவிர எனக்கு
என்ன நேர்ந்தாலும்
எனக்கு எந்த
பிரச்சினையை
அளித்தாலும் நான்
இறக்க மாட்டேன்
என்று கலிலியோ
தன்னுடைய கடிதத்தில்
கூறி இருந்தார்

கலிலியோ
சிறுவனாக இருந்த
போது மாதா
கோவிலில் ஆடிக்
கொண்டிருந்த
விளக்கைக் கண்டு
அதைக் கொண்டு
நேரத்தை அளக்க
முயன்றார்
அந்த விஷயத்தை
இப்பொழுது
கண்களை
இழந்த பின்
அதிகமாக ஆராய்ந்து
வந்தார் அவர்
அவ்விதமாக
தொடர்ந்து
ஆராய்ந்து கடிகார
இயந்திரம்
செய்வதற்கு
வகுத்த முறையைப்
பின்பற்றியே
அதற்கு 15 வருடங்கள்
கழித்து ஹிஜின்ஸ்
என்னும் டச்சு
வான நிபுணர்
கடிகார இயந்திரம்
செய்தது வான
சாஸ்திர ஆராய்ச்சிக்கு
உபயோகமாக
இருந்தார்

கலிலியோ
கண்ணில்லாமல்
கண்டுபிடித்துச் சொன்ன
விதியை வைத்து
ஒருவர் ஒரு
கண்டுபிடிப்பை
கண்டுபிடிக்க
இந்த உலகத்திற்கு
15 வருடங்கள்
ஆனது என்றால்
கலிலியோவின்
விஞ்ஞான அறிவு
எவ்வளவு
அதிசயத்தக்கது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
---------  இன்னும் வரும்
---------  25-11-2018
///////////////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-57


                       திருக்குறள்-பதிவு-57

அந்தக் காலத்தில்
சர்வ வல்லமை
பெற்றிருந்தன
கிறிஸ்தவ
தேவாலயங்கள் ;
நாட்டை மன்னன்
ஆண்டாலும்
அந்த மன்னனையும்
ஆளும் வல்லமை
தேவாலயங்களுக்கு
இருந்தன ;
தேவாலயங்கள்
இட்டதே சட்டம்
என்று இருந்தது;

கிறிஸ்தவ
தேவாலயங்களை
எதிர்த்தோ ;
பைபிளில் உள்ள
கருத்துக்களை
எதிர்த்தோ ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்த்தோ ;
யார் எதிர்த்து
எது பேசினாலும் ;
யார் எதிர்த்து
செயல்பட்டாலும் ;
அவர்களை தண்டிக்கும்
உரிமையை
தேவாலயங்கள்
பெற்று இருந்தன

கலிலியோவின் அன்பு
மகள் இறந்த போதும்
தீராத சோகத்தை
மனதில் தாங்கிக்
கொண்டு தன்னுடைய
ஆராய்ச்சிகளை
தொடர்ந்து செய்து
கொண்டிருந்த
கலிலியோவிற்கு
அளிக்கப்பட்ட
தண்டனையின்
கடுமையாக விதிகள்
கொஞ்சம் கூட
தளர்த்தப்படவிலை.
கலிலியோவிற்கு
எதிராக கடுமையான
விதிகள் மீண்டும்
கடுமையாக கடை
பிடிக்கப் பட்டு வந்தன

அதே கடுமையான
விதிமுறைகளைத்
தாங்கிக் கொண்டு
கலிலியோ
வீட்டுக் காவலில்
தன்னுடைய
ஆராய்ச்சியை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

கலிலியோவினுடைய
கண்களின்
பார்க்கும் திறன்
கொஞ்சம் கொஞ்சமாக
குறையத் தொடங்கியது
கலிலியோ தன்னுடைய
கண்களுக்கு வைத்தியம்
செய்ய வேண்டும்
என்று ரோமபுரி
மடாதிபதிகளுக்கு
கோரிக்கை வைத்தும்
கலிலியோவினுடைய
கோரிக்கையை
ரோமபுரி மடாதிபதிகள்
ஏற்றுக் கொள்ளவில்லை

கலிலியோ
பைபிளுக்கு எதிராக
கருத்து சொன்னார்
என்ற காரணத்திற்காக ;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக ;
கலிலியோவின்
கண்களுக்கு
ரோமபுரி மடாதிபதிகள்
வைத்தியம் செய்ய
முடியாது என்று
மறுத்து விட்டனர்

நோயால் கொஞ்சம்
கொஞ்சமாக
பாதித்துக் கொண்டிருந்த
கலிலியோவின்
கண்களுக்கு
வைத்தியம் செய்ய
மாட்டோம் என்று
ரோமபுரி மடாதிபதிகள்
மறுத்து விட்ட போதும்
பார்வைத் திறன்
குறைபாட்டுடன்
கலிலியோ தன்னுடைய
ஆராய்ச்சிகளைத்
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

தன்னுடைய
வாழ்க்கையை ஆராய்ச்சி
செய்வதற்காகவே
செலவிட்டு ஆராய்ச்சி
ஒன்றையே தன் உயிர்
மூச்சாகக் கொண்டு
ஆராய்ச்சிகளைச் செய்த
கலிலியோவின் கண்கள் ;
எவ்வளவு
எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்ப்புகளை பற்றிக்
கவலைப்படாமல்
அவைகளை எல்லாம்
எதிர்த்து நின்று
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
உலகில் உள்ள
மொத்த கிறிஸ்தவ
மக்களும் எதிரியாக
நின்ற போதிலும்
எதைப்பற்றியும்
கவலைப் படாமல்
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
தன்னுடைய செல்ல
மகள் வெர்ஜீனியா
இறந்த போதும்
ஆராய்ச்சிகள் செய்த
கலிலியோவின் கண்கள் ;
இந்த பிரபஞ்சத்தில்
உள்ள கோள்களின்
இயக்கங்களை தன்
கண்களால் பார்த்து
கோள்களின் இயக்கங்கள்
அதன் தன்மைகள்
ஆகியவற்றைப்
பற்றி பல்வேறு
உண்மைகளைச் சொன்ன
கலிலியோவின் கண்கள் ;
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
உண்மையை சொன்ன
கலிலியோவின் கண்கள் ;
இந்த உலகத்தை
பார்க்கும் திறனை
இழந்து விட்டன,.
ஆமாம்
கலிலியோவின் கண்கள்
குருடாகிப் போயின
ஆமாம் கலிலியோ
குருடராகிப் போனார்

உண்மையைக்
கண்டுபிடித்து
சொன்ன காரணத்திற்காக
குடும்பத்தை இழந்து
நிம்மதி இழந்து
மகளை இழந்து
இறுதியில்
கண்களையும் இழந்து
மிகுந்த துயரமான
நிலைக்கு
தள்ளப் பட்டாலும்
கலிலியோ கண்களை
இழந்த நிலையிலும்
தன்னுடைய
ஆராய்ச்சிகளைத்
தொடர்ந்து செய்து
கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  25-11-2018
///////////////////////////////////////////////