November 15, 2018

திருக்குறள்-பதிவு-49


                           திருக்குறள்-பதிவு-49

இல்லாதவன்
விவசாயம் செய்வதற்காக
இலவச மின்சாரம்
வழங்கப்பட்டது ;
இல்லாதவன்
பொருளாதாரத்தில்
முன்னேற வேண்டும்
என்பதற்காக
இலவச ஆடுகள்
இலவச மாடுகள்
வழங்கப்பட்டது;
இல்லாதவன் வெப்பத்தின்
தாக்கத்திலிருந்து
தன்னை காத்துக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக
இலவச மின்விசிறி
வழங்கப்பட்டது.;
இல்லாதவனுடைய
சமையல் வேலையை
எளிமைப்படுத்துவதற்காக
இலவச மிக்ஸி
இலவச கிரைண்டர்
வழங்கப்பட்டது.;
இல்லாதவன் நாட்டு
நடப்பை தெரிந்து
கொள்வதற்கு
இலவச தொலைக்காட்சி
வழங்கப்பட்டது ;
இல்லாதவனும்
இல்லாமை நீங்கி
இருப்பவனாக குடும்பம்
நடத்தி வாழ வேண்டும்
என்பதற்காக எவை
எல்லாம் தேவையானவையோ
அவைகள் அனைத்தும்
இலவசம் என்ற பெயரில்
உதவியாக வழங்கப்பட்டது

இல்லாதவனின் பிள்ளைகள்
ஏழ்மையில் வாடி
படிக்க இயலாமல்
இருந்து விடக்கூடாது
என்பதற்காக
இலவச கல்வி
வழங்கப்பட்டது;
பசியினால் படிப்பை
பாதியில் நிறுத்தக்கூடாது
என்பதற்காக
இலவச உணவு
வழங்கப்பட்டது.;
பள்ளிச் சீருடை
இல்லை என்பதற்காக
படிக்காமல் போய்
விடக்கூடாது என்பதற்காக
இலவச சீருடை
வழங்கப்பட்டது;
புத்தகம் வாங்க முடியாமல்
படிப்பு நின்று
விடக்கூடாது என்பதற்காக
இலவச பாடபுத்தகங்கள்
வழங்கப்பட்டது;
நீண்ட தூரம் சென்று
படிக்க இயலாமல்
படிப்பை நிறுத்தி விடக்
கூடாது என்பதற்காக
பேருந்தில்
பிரயாணம் செய்ய
இலவச பஸ் பாஸ்
வழங்கப்பட்டது.;
பேருந்து செல்ல
முடியாத இடங்களில்
உள்ள பிள்ளைகள்
படிக்காமல் படிப்பை
விட்டு விடக்கூடாது
என்பதற்காக
இலவச மிதிவண்டி
வழங்கப்பட்டது.;
தற்போது உள்ள
அறிவியல் நுட்பத்துடன்
போட்டி போட முடியாமல்
இருந்து விடக்கூடாது
என்பதற்காக அறிவை
வளர்த்துக் கொள்வதற்காக
இலவச மடிக்கணினி
வழங்கப்பட்டது.
இவ்வாறு இல்லாதவன்
பிள்ளைகளும்
படிப்பை பாதியில்
நிறுத்தி விடக்கூடாது
என்பதற்காக கல்வியின்
பல்வேறு நிலைகளில்
தேவைப்படும்
முக்கியமான அனைத்தும்
இல்லாதவர்களுக்கு
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது

இல்லாதவனின்
ஏழைப் பெண் திருமணம்
செய்து கொள்வதற்காக
இலவச தாலி
உதவி என்ற பெயரில்
வழங்கப்பட்டது;

இவ்வாறு
இல்லாதவன் குடும்பம்
நடத்துவதற்கும்;
இல்லாதவன் பிள்ளை
படிப்பதற்கும்;
இல்லாதவன் பிள்ளை
திருமணம் செய்து
கொள்வதற்கும்;
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது

இல்லாதவன் இந்த
சமுதாயத்தில் இல்லாமை
நீங்கி இருப்பவனாக
வாழ வேண்டும்
என்பதற்காகவும்;
இல்லாதவன் அடிமையாக
இருக்கக் கூடாது
என்பதற்காகவும்;
இல்லாதவன் இருப்பவனுடன்
சமாமாக ஆக வேண்டும்
என்பதற்காகவும்;
இலவசம் என்ற பெயரில்
உதவி வழங்கப்பட்டது.;

இல்லாதவன் இருப்பவனாக
மாற வேண்டும்
என்பதற்காக இலவசம்
என்ற பெயரில்
வழங்கப்பட்ட உதவி என்ற
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதன்
மூலம் சரியான செயலை
தவறாக மாற்றி விடலாம்
என்று சில தவறானவர்கள்
ஒன்று கூடி தவறான
செயலைச் செய்கிறார்கள்
என்பதை நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்

இல்லாதவன் எப்போதும்
இல்லாதவனாக
இருக்க வேண்டும்,
இல்லாதவன் எப்போதும்
அடிமையாக
இருக்க வேண்டும்
இல்லாதவன் எப்போதும்
இருபபவனுடன்
சரிசமமாக ஆகக்கூடாது
என்பதற்காக சொல்லப்பட்ட
வார்த்தை தான்
இலவசம் கொடுக்க
வேண்டாம் என்பதை
புரிந்து கொண்டால்
அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சியும்,
பணக்கார வர்க்கத்தின்
சூதும் நமக்கு தெரியவரும்

மக்களுக்கு பயன்படும்
வகையில் கண்டு
பிடிக்கப்படும்
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதற்கு
சமுதாயத்தில்
அந்தக் காலம் முதல்
முதல் இந்தக் காலம்
வரை சரியானவர்களாக
தங்களை இந்த
சமுதாயத்திற்கு
காட்டிக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருக்கும் தவறானவர்கள்
இந்த சமுதாயத்தில்
நிறைய எண்ணிக்கையில்
இருக்கிறார்கள் என்பதை
மட்டும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  14-11-2018
///////////////////////////////////////////////////////////