June 02, 2019

பரம்பொருள்-பதிவு-20


                      பரம்பொருள்-பதிவு-20

(6) ரசஷாபந்தனம்
(காப்பு கட்டுதல்)
“ரசஷாபந்தனம்
என்றால்
காப்பு கட்டுதல்
என்று பொருள்”

“தெய்வத் தன்மை
பொருந்திய
கும்பாபிஷேகத்தை
நடத்துபவர்களுக்கு
எந்தவிதமான
இடையூறும் ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
செய்யப்படும்
சடங்கு முறையைத்
தான் காப்புக் கட்டுதல்
என்கிறோம் “

“பொது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
கும்பாபிஷேகத்தை
முன்னால்
நின்று செய்பவர் ;
மற்றும் அனைத்து
சிவாச்சாரியார்கள்
ஆகியோருக்கு
எந்தவிதமான
பிரச்சினையும்
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும் ;
எந்தவிதமான
இடையூறும்
ஏற்டபடாமல் இருக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
மந்திரித்த மஞ்சள்
கயிற்றை வலக்கை
மணிக்கட்டில்
கட்டுவார்கள் ;”

“கும்பாபிஷேகத்தை
நடத்திக் கொண்டிருக்கும்
சிவாச்சாரியார்களுக்கு
ஏதேனும்
ஆசௌசம் (தீட்டு)
ஏற்படக்கூடிய நிலை
அவர்களுடைய
வாழ்க்கையில்
ஏற்பட்டால் கூட
கையில் கட்டிய
காப்பு அவிழ்க்கப்படும்
வரையில்- அந்த
ஆசௌசம்(தீட்டு)
அவர்களைப் பாதிக்காது “

“இது தான்
காப்பு கட்டுதலின்
சிறப்பு மற்றும்
முக்கியத்துவம் ஆகும்”

7.கும்பஸ்தாபனம்
“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல் என்று
பொருள்”

“ கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்புடையவை “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
எத்தகைய
முறைகளைச் செய்து ;
அந்த கடவுளுக்குரிய
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிக்க
வேண்டுமோ ;
அத்தகைய
முறைகளைச் செய்து ;
கிரகிப்பதற்கு தேவையான
முறைகளைச் செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் இருந்து
கடவுள் சக்தியைக்
கிரகித்து கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி ;
கலாகர்ஷணம் மூலம்
கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை ;
முழுமையான
ஒன்றாக மாற்றுவதற்கு
தேவையான
சடங்குளை
யாகசாலையில்
செய்வதற்கு
யாகசாலை
என்று பெயர் “

“சுருக்கமாகச்
சொல்ல வேண்டுமானால்
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை கும்பத்தில்
இறக்குவதற்காக
அந்த கடவுள்
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
தேவையான
முறைகளைச் செய்வது :

செய்யப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் உள்ள
கடவுள் சக்தியை கிரகித்து
கும்பத்தில் இறக்குவது ;

கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்வது;

என்ற மூன்று
முக்கியமான செயல்களை
கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு
தொடர்ச்சியான
சங்கிலித் தொடர்
போல் தொடர்ச்சியாக
செய்கின்றன “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 02-06-2019
/////////////////////////////////////////////////////