May 23, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-9


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-9

சீர் கொண்டு
வந்தால் சகோதரி ;

ஒருவருக்கு நாம்
அன்பளிப்பு
கொடுக்கும் போது
அதை பெறுபவருடைய
மனநிலையை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று: அன்பளிப்பில்
       உள்ள அன்பின்
       மதிப்பைப் பார்ப்பவர்கள்

இரண்டு: அன்பளிப்பில்
         உள்ள பணத்தின்
         மதிப்பைப் பார்ப்பவர்கள்

நாம் ஒருவருக்கு
அன்பளிப்பு கொடுக்கும்போது
அதனைப் பெறுபவர்
அந்த அன்பளிப்பில்
உள்ள நம்முடைய
அன்பைப் பார்த்தால்
அவருக்கு
நம்முடைய அன்பு
தெரியுமே ஒழிய
அன்பளிப்பில்
உள்ள பணத்தின்
மதிப்பு தெரியாது

நாம் ஒருவருக்கு
அன்பளிப்பு கொடுக்கும்போது
அவர் அந்த
அன்பளிப்பில் உள்ள
பணத்தின்
மதிப்பைப் பார்த்தால்
அவருக்கு
பணத்தின் மதிப்பு தான்
தெரியுமே ஒழிய
அன்பளிப்பில்
உள்ள நம்முடைய
அன்பு தெரியாது

அன்பளிப்பில் உள்ள
அன்பைப் பார்த்தால்
பணத்தின்
மதிப்பு தெரியாது
பணத்தின்
மதிப்பைப் பார்த்தால்
அன்பின் மதிப்பு
தெரியாது

அன்பளிப்பு என்பது
நாம் விருப்பப்பட்டு
தருவது
அதில் கொடுப்பவருடைய
அன்பைத் தான்
பார்க்க வேண்டுமேயொழிய
பணத்தின் மதிப்பைப்
பார்க்கக் கூடாது

ஏழ்மை நிலையில்
இருக்கும் அண்ணன்,
தன்னுடைய தங்கைக்கு
கஷ்டப்பட்டு
திருமணம் செய்து
அந்த திருமணத்திற்க்கு
செய்த செலவீனங்களுக்காக
வாங்கிய கடனை
அடைத்துக் கொண்டிருக்கிறார்
அத்தகைய சூழ்நிலையில்
தன்னுடைய தங்கையை
பார்க்க செல்கிறார்

அண்ணன் தன்னுடைய
வசதிக்கு ஏற்றபடி
தன் வருமானத்திற்கு
ஏற்ற அளவில்
தன்னுடைய
தங்கை வீட்டிற்கு
சில பொருட்கள்
வாங்கிச் செல்கிறார்

அண்ணனுடைய அன்பை
புரிந்து கொள்ள முடியாத
அண்ணனுடைய
குடும்ப நிலையை
உணர்ந்து கொள்ள
முடியாத நிலையில்
இருந்த தங்கை
அண்ணன் தனக்காக
கஷ்டப்பட்டதை மறந்து
அண்ணன் தன்னை
திருமணம் செய்விக்க
எவ்வளவு கஷ்டப்பட்டார்
என்பதை மறந்து
அன்பளிப்பைப் பார்த்து
அண்ணனை
அவமானப்படுத்தி
அனுப்பி விடுகிறாள்

அண்ணன் அளித்த
அன்பளிப்பில்
தங்கை பணத்தின்
மதிப்பை பார்த்த
காரணத்தினால்
அண்ணனுடைய
அன்பு தெரியவில்லை
அண்ணனுடைய
அன்பைப் பார்த்து
இருப்பாரேயானால்
அன்பளிப்பில்
பணத்தின் மதிப்பு
தெரிந்து இருக்காது

அன்பு யாருடைய
மனதில் இல்லையோ
அவர்களால் தான்
பிறர் செலுத்தும்
அன்பைப் புரிந்து
கொள்ள முடியாது

தங்கையின் மனதில்
அன்பு இல்லாத
காரணத்தினால்
அண்ணன் அளித்த
அன்பளிப்பில்
பணத்தின் மதிப்பைப்
பார்த்தாரே ஒழிய
அண்ணனின்
அன்பைப் பார்க்கவில்லை


அண்ணனுடைய
உண்மையான அன்பைப்
புரிந்து கொள்ள
முடியாத
அன்பு இல்லாத
தங்கைகளுக்கு
அதிக பண மதிப்பு
கொண்ட அன்பளிப்புகளை
அண்ணன்
கொடுத்தால் தான்
அண்ணனை மதிப்பார்கள்
இல்லையென்றால்
அண்ணனை மதிக்க
மாட்டார்கள்

என்பது தான்
சீர் கொண்டு
வந்தால் சகோதரி
என்பதற்குப் பொருள்

--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////