May 21, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-7


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-7

“”கொண்டு வந்தாலும்,
வராவிட்டாலும் தாய்””

ஒரு தாயினுடைய
பிள்ளைகளில்
ஒரு ஆணுக்கு
உடம்பு சரியில்லை
மருத்துவ மனையில்
சேர்த்து வைத்தியம்
பார்க்கிறார்கள்
என்ற செய்தியைக்
கேள்விப் பட்ட தாய்
உடம்பு சரியில்லாத
தன் மகனை
பார்ப்பதற்காக
உடனே கிளம்பி
மருத்துவ மனை
செல்கிறாள்.

மருத்துவ மனையில்
படுக்கையில்
படுத்துக் கொண்டிருந்த
தன் மகனைப்
பார்த்த தாய்
துயரம் அடைகிறாள்

மகன் கூடவே
மருத்துவமனையில்
இருந்து
மகனுக்கு எத்தகைய
உதவிகள் தேவையோ
அந்த உதவிகளை
அந்தத் தாய் செய்கிறாள்

மகன் உடம்பு
சரியில்லாமல்
மருத்துவ மனையில்
படுத்து இருக்கிறானே
என்று வருத்தப்பட்டு
சாப்பாடு கூட
சாப்பிடாமல்
மன வருத்தத்துடனும்
தன் மகன்
உடல் நலம் பெற்று
விரைவில் குணமாக
வேண்டும் என்று
ஒவ்வொரு கணமும்
கடவுளை வேண்டியும்
மருத்துவ மனையில்
மகனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து உதவிகளையும்
செய்கிறாள்

மகனும் கொஞ்சம்
கொஞ்சமாக
குணம் அடைந்து
கொண்டு வருகிறான்

மகன் பூரணமாக
குணம் அடைந்தவுடன்
வீட்டில் கொண்டு
வந்து விட்டு விட்டு
மகன் கூட
சில நாட்கள்
இருந்து விட்டு
மகன் முழுவதுமாக
குணம் அடைந்தவுடன்
தன் ஊருக்கு
கிளம்புகிறாள்
அந்தத் தாய்

அவ்வாறு
ஊருக்கு கிளம்பும்போது
தான் தாய்
தன் மகனைப் பார்த்து
சொல்கிறாள்
உனக்கு உடம்பு
சரியில்லை என்ற
செய்தியைக் கேட்டவுடன்
நான் அவசரம்
அவசரமாக
கிளம்பி இங்கே
வந்து விட்டேன்

உனக்கும்
பேரன், பேத்திகளுக்கும்
ஒன்றும் வாங்காமல்
வந்து விட்டேன்
அதனால் இந்த
பணத்தை வைத்துக்
கொள் என்கிறாள்

குணமடைந்த மகன்
தன் தாயைப் பார்த்து
சொல்கிறான்
அம்மா நீங்கள்
வந்த போதே
என் மனம்
ஆறுதல் அடைந்து
குணம் அடைந்துவிட்டது
இப்போது தான்
என் உடல் குணம்
ஆனது

நீங்கள் வந்ததே
எனக்கு போதும்
நீங்கள் ஒன்றும்
எதுவும்
வாங்கி வர
வேண்டிய
அவசியம் இல்லை
நீங்கள் வந்ததே
எனக்கு போதும்
என் மனம்
சந்தோஷப்பட்டது
என்கிறான் மகன்

இந்த சொல்லை
தாயைத் தவிர
வேறு யாரையும்
பார்த்து சொல்ல
முடியாது

உலகில் உள்ள
அனைத்து உயிர்களும்
செலுத்தும் அன்பிற்கு
ஒரு விலை உண்டு
ஆனால்
தாயின் அன்பிற்கு
மட்டும் விலை 
என்பது கிடையாது
தாயின் அன்பை
எந்த விலைக்குள்ளும்
அடக்க முடியாது
அதனால் தான்
கொண்டு வந்தாலும்
வரா விட்டாலும் தாய்
என்று சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////